இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் அம்பேத்கரின் இந்தியாவில் சாதிகள்!

Young people must read Ambedkar's Castes in India book!

இந்தியாவில் சாதி எப்படி தோன்றியது? அது எப்படி பரவியது? சாதி இந்திய மக்களை வாழ்வின் முன்னோக்கி நகர்த்துகிறதா இல்லை நரகத்துக்குள் தள்ளுகிறதா? குறிப்பாக இந்த சாதி பெண்களை என்ன செய்கிறது? இப்படி பல கேள்விகளுக்கு இந்தப் புத்தகத்தில் விடை கிடைக்கிறது. ஆனால் வெகுஜன ( பாமர மக்கள்) மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் மொழிநடை இல்லை என்பது குறையாக காணப்படுகிறது. இருப்பினும் முதிர்ந்த இளைஞர்கள் இந்தப் புத்தகத்தை கண்டிப்பாக படிக்க வேண்டும்.

இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல கருத்துக்களில் சில விஷியங்கள் இங்கே :

* உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிதுகூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடாயாது. சாதியை அடிப்படையாக வைத்த நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதை உருவாக்கினாலும் அது உடைந்து சிதறி உருப்படாமற் போகும்.

* நடைமுறையில் சாதி என்பது மாபெரும் பின்விளைவுகளை முன் அறிகுறியாகக் காட்டும் ஒரு அமைப்பாகும். சாதிச் சிக்கல் ஒரு வட்டாரச் சிக்கல் ; ஆயினும் மிகப் பரந்த அளவில் தீங்கு விளைவிக்கும் வல்லமை கொண்டது.

* மானுடவியல் அறிஞர்களின் கூற்றுப் படி ஆரியர்கள், திராவிடர்கள், மங்கோலியர்கள், சித்தியர்கள் ஆகியோர் அடங்கிய கலவையே இந்திய மக்கள் ஆவர். இவர்கள் அனைவரும் பன்னெடுங் காலத்திற்கு முன்னர் பல்வேறு திசைகளிலிருந்தும் பல வகைப்பட்ட பண்பாடுகளோடும் இந்தியாவுக்குள் நுழைந்த பழங்குடிகளாவர்.

* புரோகித சாதியே உயர்நிலையிலிருக்கும் வாய்ப்பினைப் பெற்றிருப்பதாலேயே சாதி அமைப்பு முறையோடு தீட்டு பற்றிய கருத்து பிணைக்கப்பட்டுள்ளது. புரோகிதரும் தூய்மையும் தொன்று தொட்டு வரும் கூட்டாளிகள் என்பதை நாம் அறிவோம். ஆகையால் சாதி என்பது மதத்தின் நறுமணத்தோடு மணக்கும் அளவுவரை தீட்டு பற்றிய கருத்து சாதியத்தின் ஒரு பண்பாகும்.

* இந்திய மக்களை பொறுத்தமட்டில்,

1. புறமணம் என்பது எவரும் மீளத் துணியாத ஒரு சமயக் கோட்பாடாகவே உள்ளது.

2. சாதிகளின் படைப்பு என்பது புறமணத்தை விட அகமணத்திற்கு உயர்வான இடம் அளிப்பது.

* இந்தியாவில் சாதிகளின் தோற்றம் பற்றிய வினாவை விடச் சாதிகள் எவ்வாறு பரவின என்பது பெரும் தொல்லைக்குட்பட்டு நிற்பதாகும்.

*வர்க்கம் பற்றிய விவரிப்பு
1. பிராமணர்கள் அல்லது புரோகித வர்க்கம்

2. சத்திரியர்கள் அல்லது இராணுவ வர்க்கம்

3. வைசியர்கள் அல்லது வணிக வர்க்கம்

4. சூத்திரர்கள் அல்லது கைவினைஞரும் ஏவலருமான வர்க்கம்

* போலச் செய்தல் மனப்போக்கு

இப்படி தெரிந்துகொள்ள வேண்டிய விஷியங்களும், பிற நாட்டு அறிஞர்கள் இந்தியாவில் உள்ள சாதிகளைப் பற்றி என்ன கூறுகிறார்கள் போன்ற விஷியங்களும், நம் நாட்டு தலைவர்களுக்கு அம்பேத்கர் சாதி குறித்து எழுதிய கடிதங்கள் எப்படிப்பட்டவை என்பனவும் இந்தப் புத்தகத்தில் நிரம்பிக் கிடக்கிறது.
பதிப்பகம் : எதிர் வெளியீடு
விலை : ரூ. 120

Related Articles

“காளைகளுக்காகப் போராடிய நாம் எருமை... தமிழ் யூடியூப் உலகைப் பொருத்தவரை எந்த போலித்தனமும் இல்லாமல் உண்மையான அறச் சீற்றத்துடன் சமூக அவலங்களை பேசி வரும் ஒரே சேனல் என்றால் அது நக்கலைட்ஸ் சேனல்...
தானா சேர்ந்த கூட்டம் திரைப்பட வசனங்கள் ஒ... 2018 ம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது இயக்குனர் விக்னேஷ் சிவனின் தானா சேர்ந்த கூட்டம். நல்ல வெற்றியை பெற்ற இந்தப் படம் தொடரும் வேலையின்மை...
சுஜாதா நினைவு தினம் இன்று! வித்தியாசமான ... 1. கேள்வி: பெட்ரோல் டீசல் முழுவதும் எதிர்காலத்தில் வற்றிப்போகும் வாய்ப்பு உள்ளதா? பெட்ரோல் முழுக்கத் தீர்ந்து விட்டால் கோடிக்கணக்கான வாகனங்களுக்கு மாற...
தோசைல சாதி இருக்கு!  – வே. மதிமாறன... தோசைல கல் இருக்கு! தோசை கல்லு மாதிரி இருக்கு! இப்படிபட்ட விமர்சனங்கள் தோசை மீது இதுவரை இருந்திருக்கிறது. ஆனால் சாதாரண தோசையில் சாதி இருக்கு என்பது பு...

Be the first to comment on "இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் அம்பேத்கரின் இந்தியாவில் சாதிகள்!"

Leave a comment

Your email address will not be published.


*