பெட்ரோல் திருடச் சுரங்கம் தோண்டிய கொள்ளையர்கள்

Oil thieves

தென்மேற்கு டெல்லி, கக்ரோலா என்னும் இடத்தில் அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியில்,
கடந்த செவ்வாய் கிழமை நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெடி சப்தம்
போன்ற ஏதோவொன்றை கேட்டு அந்தப் பகுதி மக்கள் தூக்கம் இழந்தனர்.

சுரங்கம் தோண்டிய கொள்ளையர்கள்

சோனிபட் மற்றும் பிஜவாஸன் ஆகிய இடங்களுக்கு நடுவே இந்திய எண்ணெய் கூட்டு நிறுவனம், குழாய் மூலம் பெட்ரோலிய பொருட்களைக் கொண்டு செல்கிறது. அந்தக் குழாயை உடைத்து பெட்ரோல் திருட முயற்சி செய்தபோது, அது வெடித்து பெரும் சப்தத்தை உண்டு செய்திருக்கிறது.

ஐந்து மாதங்களுக்கு முன்பு பல்வான் சிங் என்பவருக்குச் சொந்தமான மனையில் குடியேறிய ஐந்து கொள்ளையர்கள், அவரது மனையிலிருந்து சுரங்கம் அமைத்து எண்ணெய் நிறுவனத்தின்
குழாயை உடைத்து பெட்ரோல் திருடி விற்கத் திட்டம் வகுத்தனர்.

எதிர்பாராத விதமாகத் திட்டத்தை செயல்படுத்தும் போது, பெருத்த சப்தம் ஏற்பட்டு
கொள்ளையர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. சம்பவ இடத்திற்குக் காவல் துறை வந்து
பார்த்த போது 150 அடி நீளமும், 2 . 5 அடி அகலமும் கொண்ட சுரங்கப்பாதை அவர்கள்
தங்கியிருந்த அறையில் இருந்து தோண்டப்பட்டு இருக்கிறது. அந்தச் சுரங்கத்தில் இருந்து
எண்ணெய்யை திருடி விற்பதே கொள்ளையர்களின் திட்டம்.

வீட்டின் உரிமையாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஸுபைர் என்ற ஒரு
கொள்ளையனை மட்டும் காவல் துறையினர் கைது செய்து இருக்கின்றனர். மேலும் நால்வருக்கு
அவர்கள் வலை வீசி இருக்கின்றனர்.

ஐந்து மாதங்களுக்கு முன்பு வாடகைக்குக் குடியேறிய உடனேயே, தோண்டும் பணியை
மேற்கொள்ளத் தொடங்கிவிட்டதாகவும், கேஸ் கட்டர் வைத்து இந்திய எண்ணெய் நிறுவனத்தின்
குழாயில் துளையிடத் தயாராக இருந்ததாகவும், வீட்டில் இருந்து தோண்டப்பட்ட சுரங்கத்தைச்
செங்கற்கள் கொண்டும், சோபாவை கொண்டும் மறைத்து வைத்திருந்ததாகக் கொள்ளையன்
ஸுபைர் போலீசிடம் தெரிவித்திருக்கிறான்.

‘இது ஐந்து பேர் கொண்ட கொள்ளையர் குழு செய்ததாக தெரியவில்லை. ஸுபைர் யாரிடம்
திருடிய பெட்ரோலை விற்கத் திட்டமிட்டிருந்தான் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று
வருவதாக’ மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

எதற்கும் உங்கள் மாடி வீட்டில் தினமும் சப்தம் கேட்டால் என்னவென்று ஒரு எட்டு பார்த்து
வாருங்கள்.

Related Articles

சினிமா வாய்ப்புக்காக காத்திருந்து காத்தி... சினிமா என்பது ஒரு மிகப்பெரிய ஊடகம், சினிமா என்பது ஒரு மிகப்பெரிய மாயவலை என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் வெளியிலிருந்து பார்க்கும்போது சினிமா எ...
அம்மா பிறந்தநாளை முன்னிட்டு அரவக்குறிச்ச... கடந்த பிப்ரவரி 24ம் தேதியன்று தமிழகமெங்கும் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு அரவக்குறிச்சி...
இயக்குனர் பாலா பற்றிய சுவாரஸ்யமான தகவல்க... மதுரை பெரியாஸ்பத்திரியில் பிறந்தார். ௧ம்பம் அருகே நாராயணத் தேவன்பட்டி தான் பாலாவின் பூர்வீகம். பெரிய குடும்பம். எட்டு பிள்ளைகள். அப்பா வங்கி வே...
சிட்டுக்குருவிகள் பற்றிய அரிய தகவல்கள்! ... மனிதர்களின் நீண்டகாலத் துணை சிட்டுக்குருவிகள்.  சிட்டுக்குருவிகளின் வாழ்நாள் 13 ஆண்டுகள்.சிட்டுக்குருவிகள் நம் வீடுகளில் பாதுகாப்பான...

Be the first to comment on "பெட்ரோல் திருடச் சுரங்கம் தோண்டிய கொள்ளையர்கள்"

Leave a comment

Your email address will not be published.


*