மெல்போர்னில் நடக்கவிருக்கிறது உலகக் கோப்பை டி20யின் இறுதிப்போட்டி

icc world cup

2020 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டம் மெல்போர்ன் நகரில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. போட்டிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் அது தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஒரே ஆண்டில், ஒரே நாடு நடத்துகிறது என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது. இந்த கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்காக எட்டு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவை முறையே அடிலெய்டு, பிரிஸ்பேன், கேன்பெரா, கீலோங், ஹோபார்ட், மெல்போர்ன், பெர்த் மற்றும் சிட்னி ஆகும்.

2015 ஆண்டு நடந்த டி20 கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டம் மெல்போர்ன் நகரத்தில் நடந்தது. இந்த முறை ஆண்கள் மற்றும் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டங்களை மெல்போர்ன் நகரம் நடத்த இருக்கிறது.

டி20 பெண்கள் கிரிக்கெட் பிப்ரவரி 21 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. டி20 ஆண்கள் கிரிக்கெட் அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. பெண்கள் சார்பாக பத்து அணிகளும், ஆண்கள் சார்பாக 16 அணிகளும் போட்டியில் பங்கு கொள்கின்றன.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் இது தொடர்பாக பேசும்போது ‘டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை  நடத்துவதில் ஆஸ்திரேலியா பெரும் பெருமை கொள்கிறது. டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தமட்டில் ஆண்களை விடவும் பெண்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் மூன்றுமுறை உலக அளவிலான பட்டங்கள் வென்றுள்ளனர்’ என்று தெரிவித்தார். போட்டிகள் குறித்த முழு விவரங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படுகின்றன.

Related Articles

பள்ளி கல்லூரி மாணவிகள் கட்டாயம் படிக்க வ... தமிழகப் பெண்களைப் பொறுத்த வரை பெரும்பாலான கோலம் போடுவது எப்படி ? சமையல் செய்வது எப்படி ? போன்ற புத்தகங்களை தான் நேரம் செலவழித்து படிக்கிறார்கள். கொரிய...
“இன்றைய காந்திகள்” – ப... குக்கூ காட்டுப்பள்ளி நடத்தி வரும் சிவராஜ் என்பவர் நடத்தி வரும் தன்னறம் நூல்வெளி என்ற பதிப்பகத்தின் மூலம் வெளியான புத்தகம் தான் பாலசுப்பிரமணியம் முத்து...
இசைக்குத் தாய்ப்பாலு நாதஸ்வரம்! – ... 2018ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றது எழுத்தாளர் ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் நாவல். இந்த வருட சென்னை புத்தக கண்காட்சியில் அந்தப் புத்தகம் அதிக...
பார்க்க வேண்டிய உலக சினிமாக்கள்!... 1.children of heaven2.Life is beautiful3.The way home4.the road home5.cinema paradiso6.run lala run7.mariya full of grace ...

Be the first to comment on "மெல்போர்னில் நடக்கவிருக்கிறது உலகக் கோப்பை டி20யின் இறுதிப்போட்டி"

Leave a comment

Your email address will not be published.


*