தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொடர்ந்து சிவகங்கை அரிவாள் வெட்டு! – தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பியாச்சாமே!

தூத்துக்குடி பிரச்சினை இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதன் தாக்கம் அவ்வளவு கொடூரமானதாக இருந்தது. அதனால் தான் எவராலும் அதனை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. கடந்த இரண்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று செய்திகள் உலாவ மக்கள் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்ப முயன்றனர். அதற்குள் தமிழக மக்களின் தலையில் இன்னொரு குண்டு விழுந்துவிட்டது.

 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கச்சநத்தம் பகுதியில் சாதி வெறி பிடித்த சிலர் வேறு சாதி இளைஞர்கள் சிலரை மனிதாபமானமின்றி வெட்டி கொன்று உள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு நடந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பற்றி இன்று காலையில் இருந்து செய்திகள் உலாவ #தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது? என்று கேள்வி எழுப்பி அதனை சமூக வலைதளங்களில் குரல் எழுப்பி வருகின்றனர்.

 

சிவகங்கை மாவட்டம் மட்டும் அல்ல. தென் மாவட்டங்களில் பல இடங்களில் இன்றும் சாதி, மதம் ரீதியான வெட்டுக்குத்து, கலவரம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இது போன்ற செய்திகள் அவ்வப்போது வருவதும் உண்டு. அடுத்த சில நாட்களில் மறைந்து போவதும் உண்டு. இப்போது அதிக அளவில் சாதி வன்முறை குறித்து இளைஞர்கள் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

Related Articles

வார இறுதியில் மிக அதிக கனமழை மும்பையில் ... மும்பையில் சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமையன்று மிக அதிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு இருப்பதால் மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு இந்தியாவின் வானி...
அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் அதை எப்படி ... அல்சர் முதலில் எப்படி ஏற்படுகிறது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளில் ஏற்படும் அமிலத்தன்மையின் அதிகமான செயல்பாடுகளால் அல்சர் ஏற்படுகிறது என்று கூறுகி...
தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள... சமீபத்தில் முகநூலில் ஒருவர், தனியார் பள்ளியில் வாத்தியார் வேலை பார்ப்பதற்கு பேசாமல் நாலு ஆடு மாடு வாங்கி மேய்க்கலாம் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு ப...
கவுண்டமணியின் 49-O திரைப்பட வசனங்கள்!... " பிரச்சினை இல்லாத விவசாயி எவன் இருக்குறான்... " " எவன தலைவராக்குறதுனு உங்களுக்கும் தெரியல... தலைவன்னா எப்டி நடந்துக்கனும்னு அவனுக்...

Be the first to comment on "தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொடர்ந்து சிவகங்கை அரிவாள் வெட்டு! – தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பியாச்சாமே!"

Leave a comment

Your email address will not be published.


*