பல விருதுகள் வென்ற மூடர்கூடம் பட வசனங்கள் – தொகுப்பு

Moodar Koodam dialogues

* வாழ்க்கையோட பெரும்பாலான விடியல் வழக்கமானதாவே இருக்கு… முழிச்சோம், குளிச்சோம், சாப்டோம், உழைச்சோம், உறங்குனோம்னு சக்கரம் சுத்திட்டு இருக்கு… இந்தச் சுழற்சி நிக்குற கடைசி நிமிசத்துல இருந்தே வந்ததோட பலன் என்ன? வாழ்ந்ததோட பயனென்ன? நாம ஒவ்வொரு செயலோட விளைவ மட்டுமே பயணிக்கிற நாம பயணந்தான் வாழ்க்கைங்கறத மறந்துட்றோம்…

நமக்கு ரொம்ப பக்கத்துல இருக்க நமக்கான வாழ்க்கைய தேடி அலையறோம்… கடைசி வரைக்கும் அது கிடைக்காம சாகுறோம்…

* நூறு ரூபா வச்சிருக்கனவனுக்கு பத்து ரூபா சில்றயா தெரியும், ஆயிரம் வச்சிருக்கறவனுக்கு நூறு ரூபா சில்றயா தெரியும்… கோடி ரூபா வச்சிறருக்கவனுக்கு லட்சங்கள் சில்றயா தெரியும்…

* “நீங்க தனியா இருக்கும்போது ஒரு நிர்வாணமா உங்க ரூம்க்குள்ள வந்தா என்ன செய்விங்க சென்றாயன்”

“ட்ரை பண்ணுவன் பாஸ்சு… “

” அப்ப ட்ரை பண்ணுங்க சென்றாயன்… “

* ” எட்டிக் குதிக்கற நரிக்கெல்லாம் திராட்சை கிடைச்சிட்டுச்சினா எல்லா நரியும் எட்டிக் குதிக்க ஆரம்பிச்சிரும்… நமக்கு திராட்சை கிடைக்கல… “

“நான் திராட்சை கிடைக்காதத பத்தி நினைக்கல… எவ்வளவு தூரம் எட்டிக்குதிச்சோம்கிறத நினைச்சுப் பார்க்குறவன்… “

* ” இருக்குற உங்ககிட்ட இருந்து இல்லாத நாங்க எடுக்கறது திருட்டுனா இங்க கூரையே இல்லாம மழையிலயும் வெயிலயும் இருக்கறவங்க இதே இடத்துல நாய்க்கும் கார்க்கும் இடம் வச்சிருக்கிற எல்லாரும் திருடங்க முத்துவாச்சலம்…

ஒரு காலத்துல எல்லோருக்கும் பொதுவா இருந்த இந்த பூமில நாம எல்லோரும் அம்மணமா தான் இருந்தோம்… ஆனா நடுவுல ஒரு கூட்டம் நாகரிகம்னு ஒன்னு ஆரம்பிச்சு உங்க தேவைக்கு அதிகமா எடுக்க ஆரம்பிச்சதால எங்கள மாதிரி ஒரு கூட்டம் எடுக்கறதுக்கு ஒன்னுமே இல்லாம இன்னிக்கு வரைக்கும் அம்மணாமாவே இருந்துட்டு இருக்கோம்… எங்களோட அடிப்படை தேவைய திருடறது தான் உங்களோட இந்த மேல்தட்டு நாகரிக வாழ்க்கை… “

” சம்பாதிக்கறதுக்கும் திருடறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குடா.,. இதெல்லாம் நான் சம்பாதிச்சது… “

” நூறு மாம்பழம் இருக்கற ஒரு மாமரத்தடியில நூறு பேரு பசியோட இருக்கறாங்க அப்டினா அங்க ஆளுக்கு ஒரு பழம் சேரனுங்கறது இயற்கையோட தர்மம்…

ஆனா அந்த நூறு பேர்ல திறமையும் பலமும் அதிகமா இருக்குறவன் 5 பேரு மத்தவங்களோடதயும் சேத்தி ஆளுக்கு அஞ்சு பழம் எடுத்துட்டாங்கன்னா இருபது பேர் ஆளுக்கு ஒரு பழம்கூட கிடைக்காம பசில வாடி வேற வழியே இல்லாம அதிகமா பழம் வச்சிறவங்கிட்ட கைகட்டி நிப்பாங்க… அந்த அஞ்சு மாம்பழம் வச்சிருக்கறவன் பழமே இல்லாதவன வச்சு மரத்த உருவாக்கி நூறு பழம் வரவச்சி அவிங்களுக்கு சம்பளங்கற பேர்ல நூறு பழத்தல இருந்து ஒரு பழத்த எடுத்துக் கொடுப்பான்… இதான் இங்க நடக்குது…

ஒருத்தன்ட்ட இருந்து எடுக்கறது மட்டும் திருட்டு இல்ல… ஒருத்தன எடுக்கவிடாம இருக்கறதும் திருட்டுதான்… “

* காதல் தோல்விய பெருசா நினைச்சு வாழ்ற அளவுக்கு நாம ஒன்னும் ஆடம்பர வாழ்க்கை வாழல ஒயிட்… நம்மள சுத்தி நிறைய பிரச்சினை இருக்கு… சோத்துப் பிரச்சினை, வீட்டுப் பிரச்சினை, வேலை பிரச்சினை, நாம வாழ்க்கையே பிரச்சினை தான்… மூணு வேள நல்ல சோறு கிடைச்சு நல்ல வேளையிருந்து நல்ல வீடு இருந்து அடுத்த வேளை செலவுக்குப் பிரச்சினை இல்லாதவன் தான் இந்த மாதிரி வெட்டி விஷியத்தையெல்லாம் பிரச்சினையை நினைச்சுட்டு இருப்பான்.

* ஆறுதல்னா எப்படி இருக்கும்னு எனக்கெல்லாம் தெரியாது பாஸ்ஸு…

* நம்ம ஊர்க்காரன வெள்ளைக்காரன் மதிக்கிறான்… நீங்க தான் மதிக்க மாட்டிங்கிறிங்க…

* என்ன இருந்தாலும் கமலவிட ரஜினி தான் பாஸ் சூப்பர்…

ரஜினி கமல் ரெண்டு பேரையும் கம்பேர் பண்றது தப்பு ஒயிட்…

ஊரு என்ன சொல்துனு பாருங்க…

ஊரு ஆயிரம் சொல்லட்டும்… அவிங்க ரெண்டு பேரு என்ன சொல்றாங்கன்னு பாருங்க…

* திருட வந்த இடத்துல சாப்ட்றது இல்ல … ஏன்னா உப்புத் தின்ன வீட்ல திருட முடியாம போயிடும்… ஜாப் எத்திக்ஸ்…

இந்தப் பணக்கார சாப்ட்டுல உப்பு இல்ல பார்ட்னர்… நீங்க தாராளமா சாப்டலாம்…

உப்பு இல்லன்னா எனக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது…

* இருந்து கண்டிப்பா காபி சாப்ட்டு தான் போகனும்…

* ரெண்டு வருசத்துக்கு முன்னாடி இரண்டாருபா இருந்த டீ இப்ப ஆறுரூபா… இத தட்டிக்கேட்கவே ஆள் இல்லாத போது நீ இத தட்டிக்கேட்க காடாது…

* “ஏய்யாய்யா நம்பள பாத்து அவிங்க ஓடுனாங்க…”

” எவனுக்குய்யா தெரியும்… பொழப்பு கெட்டவன் பொண்டாட்டி தலைய செறச்ச மாதிரி ஒன்னுக்கு அடிக்கப் போய்ட்டு எதுக்குன்னு தெரியாம ஓடிட்டு இருக்கோம்… “

* ” இந்த மாதிரி தப்பு எல்லாரும் பண்றதுதான்… ஆனா பணக்காரனோ பாப்புலரா இருக்கறவனோ பண்ணா அது எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்குது… “

* “காரணங்கள் உணர்வுப் பூர்வமா பலமா இருந்தா எவ்வளவு சின்ன வேலையா இருந்தாலும் செய்வான் இந்த மைல்ஸ்…”

* ” அந்தப் பொம்மைல happy life னு எழுதிருக்கும்… “

” அந்தப் பொம்மைய கொஞ்சம் வரைஞ்சு காட்ட முடியுமா… “

” இந்தப் பொம்மை இல்ல… ஆப்பிள் பழமோ என்னமோ சொன்னாங்களே… அந்தப் பொம்மைய வரைஞ்சு காட்டுங்க… “

” மைல்ஸ்… அது பொம்மை இல்ல எழுத்து… “

* ” பாசிட்டிவ்வா இருங்க சென்ட்ராயன்… பெருசா நினைங்க பெருசா நடக்கும்… “

* ” இது ஏன் சென்ட்றாயன் ஒன்னு மட்டும் வேற கலர்ல இருக்கு… அது மட்டும் எனக்குப் பாஸூ… எதுலயும் நான்கொஞ்சம் தனியா தெரியனும்னு நினைப்பேன்… அதான்… “

” நாம என்ன திருவிழாவுக்கா சென்றாயன் போகப் போறோம்… திருடப் போறோம் சென்ட்றாயன்… “

* ” என்னப்பா இந்தக் குளிருக்கே குரங்கு குல்லா போட்ருக்கிங்க… இந்தக் காலத்துப் பசங்க ரொம்ப வீக்கா இருக்கிங்க… “

* ” ஒட்டகம் மாதிரி வளந்திருக்க ஒரு பொண்ணுகிட்ட எப்படி பேசனும்னு தெரில உனக்கு”

* ” இந்தியால பொறக்கறதுக்குப் பேரு தான் நாய்… பிரிட்டிஷ்ல பொறக்கறதுக்கு பேரு கிரேட் டைன்… “

* ” இரண்டு லூசுப் பசங்கள திட்டிட்டு இருக்கோம்… “

” எந்த ரெண்டு லூசுப் பசங்க… “

” ஜார்ஜ் புஷ்ஷையும் பின்லேடனையுமாடா திட்டுவோம்… “

* ” எங்கப்பா சீட்டு கம்பெனில போட்டதெல்லாம் திவாலாயிடுச்சு… அதான் கடன் தாங்காம ஊரவிட்டே நாட்டவிட்டே ஓடிப்போறோம்…இப்ப நாங்க ஹைகிளாஸ் பிச்சைங்காரங்க.. “

* ” நீங்க இங்கிலீஷ்ல பிட்ச் னா மணக்கும்… நாங்க தமிழ்ல தேவடியான்னா நாறுமாடா…”

* ” பாத்ரூம் போறது உனக்கென்ன ஹாப்பியா… நான் இங்க திருட வந்தனா இல்ல உன்ன பாத்ரூம் கூட்டிப்போக வந்தனா… “

” கூடவே ஒரு ஆள் இருந்தா எப்படி போறது… ”

” அதுக்காக தனியா உன்ன ராக்கெட்ல ஏத்தி நிலாவுக்கா அனுப்ப முடியும்…,”

* “திருடறது தப்புத்தான் ஒத்துக்கிறேன்… ஆனா வன்முறை அதவிட பெரிய தப்பு… அதனால நா எப்படி அகிம்சை முறைல அமைதியா இருக்கேனோ… அதேபோல நீங்களும் சட்டத்த உங்க கைல எடுத்துக்காம அமைதியா உட்காருங்க… “

* ” அந்த செல்லு டெட் ஆயிடுச்சுயா… “

” என்னயா சொந்தக்காரன் டெட் ஆன மாதிரி அசால்ட்டா சொல்ற… “

* “தமிழ்ல பேசுன்னு எத்தன தடவ சொல்லிருக்கு… பாய் எனக்கு சென்னைல போஸ்டிங் கொடுத்ததும் நான் பண்ண முதல் விஷியம் தமிழ் கத்துக்கிட்டது… ஏன் தெரியுமா… ஏன்னா இந்த ஸ்டேட் பப்ளிக்கோட மொழிப்பற்று எனக்கு ரொம்ப பிடிக்கும்… இந்தியால மத்த எல்லா ஸ்டேட்லயும் சொந்த லேங்குவேஜ்ல பேசுறத விட்டுட்டு இந்தி பேச ஆரம்பிச்சிட்டாங்க… கூகுள் பண்ணி பாத்தேன் ரொம்ப ஆன்சியன்ட் லேங்குவேஜ் இது. இது பேசுறதுக்கு நாமே தான் பெருமைபடனும்… “

* ” சாப்ட எதாவது இருக்கா. .”

” டாக்பீட் தான் இருக்கு… ;

” அப்ப அதுல ஒரு பிளேட் தாங்க…”

* ” அன்னா ஹாசரேவ நமக்கு என்ன அண்ணனா பட் அவர அண்ணான்னு கூப்டறது இல்ல… அந்த மாதிரி ஒரு அக்கா… “

* ஒரு வெள்ளக்காரன்ட்ட நீ தமிழ்ல பேசுவியாடா…

மாட்டேன்…

ஏன்…

ஏன்னா அவனுக்கு தமிழ் தெரியாது…

இந்த மூஞ்சிய பாத்தா இங்கிலீஷ்ல பத்து மார்க்குகுமேல எடுக்கற மாதி தெரியுதா… சீன் படத்தையும் சண்டை படத்தையும் தவிர எதாவது இங்கிலீஷ் படம் பாக்குற மாதிரி தெரியுதா… தமிழ் தெரியாத இங்கிலீஸ்காரன்ட்ட தமிழ பேசக்கெடாதுனு தெரிஞ்ச உனக்கு இங்கிலீஸ் தெரியாத பச்ஙைதமிழன்ட்ட இங்கிலீஸ் பேசக்கூடாதுன்னு ஏன்டா தெரியாம போச்சு… “

* ” இன்னும் கக்கூஸ் போனா கழுவிட்டு தாண்டா இருக்கோம்… வெறும் பேப்பர்ல தொடச்சிப் போட்டு வரல… அந்தக்காலம் வரும்போது நீ எல்லார்ட்டயும் இங்கிலீஷ்ல பேசு… இப்ப நீ தமிழ்ல பேசு… “

* ரத்தம் வரமாதிரி அடிக்கறவன் தான் ஆம்பளையா…,

* நான் உங்க இடத்துல இருந்திருந்தன அவிங்கள காப்பத்ததான் முடிவெடுத்திருப்பேன்… ஏன்னா அறிவு இருக்கிறவன் அதான் செய்வான்…

* சுடறதுக்குத் தாண்டா துப்பாக்கி வேணும்… நான் சுட மாட்டேன்னு தாண்டா சொன்னேன்…

 

Related Articles

டெல்லி டேர்டெவில்ஸ் (DD) 2018 ஐபிஎல் அணி...  வரிசை எண் போட்டி எண் தேதி டெல்லி டேர்டெவில்ஸ் போட்டிகள் நேரம் இடம்1 2 8-ஏப்ரல் டெல்லி vs பஞ்சாப் 4:00 PM டெல்லி...
நமது அண்டை மாநிலங்களின் கோடைகால பானங்கள்... நமது மாநிலத்தைப் பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் கோடைகால பானங்கள் என்பது ( இயற்கையாக கிடைப்பவை ) கம்மங் கூழ், மோர், பழைய சோத்து தண்ணீர், இள...
நவீன வசதிகளுடன் வளர்ச்சி காண்கிறது சென்ன... விரைவில் அனைத்துத் தொழில்நுட்ப, நவீன வசதிகள் கொண்ட ஒரு கடற்கரையாக மாற இருக்கிறது சென்னை மெரினா கடற்கரை. நிறையப் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த ...
டெல்லியில் அமையவிருக்கிறது இந்தியாவின் ம... இந்திய காவல்துறையின் சாதனைகளை வெளிப்படுத்தும் விதத்தில் இந்தியாவின் முதல் காவல்துறை அருங்காட்சியகத்தை டெல்லியில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்க...

Be the first to comment on "பல விருதுகள் வென்ற மூடர்கூடம் பட வசனங்கள் – தொகுப்பு"

Leave a comment

Your email address will not be published.


*