பெண் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு சில ஆலோசனைகள்!

Some advice for parents of girl children!

பெண் பிள்ளைகளின் பெற்றோர் செய்யக் கூடியவை, செய்ய வேண்டாதவை

  1. தாய் தந்தையை தவிர வேறு யாரும் குழந்தையை தீண்ட அனுமதிக்க கூடாது.
  2. குழந்தைகள் தனியாக இருக்கும் சூழலை ஏற்படுத்தக் கூடாது.
  3. மிகவும் தெரிந்தவர்கள் உறவினர்கள் தானே என்று யாரிடமும் பெற்றோர் இன்றி குழந்தைகளை தனியாக அனுப்புவதை பலமுறை பரீசீலனை செய்து அனுப்புங்கள்.
  4. பள்ளியிலிருந்து அழைத்து வருபவர் மூன்றாம் நபராகவோ தனியார் வாகன ஓட்டிகளாகவோ இருந்தால் அவர்களை கண்காணியுங்கள். அவர்களின் முழு விவரங்களை சேகரித்து வைத்துக் கொள்ளூங்கள்.
  5. குழந்தைகள் பயிலும் பள்ளியில் உள்ள ஆசிரியர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் குணங்களையும் நடவடிக்கைகளையும் அறிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
  6. பள்ளி சென்று வீடு திரும்பும் குழந்தைகளிடம் பள்ளியில் நடந்ததை பற்றி மனம் விட்டு பேசி தெரிந்துகொள்ளுங்கள்.
  7. குழந்தைகளை மிரட்டி விஷியங்களை தெரிந்துகொள்ள முயற்சிக்காதீர்கள்.
  8. குழந்தைகளோடு அதிகமாக நேரத்தை செலவிடுங்கள். ஏனென்றால் பல இடங்களில் பாசம் கிடைக்காத பிள்ளைகள் அந்நியர்களால் சுலபமாக ஈர்க்கப்படுகிறார்கள். பெற்றோரின் அன்பு, அரவணைப்பு பாசம் இல்லாத குழந்தைகளே அதிகமாக ஆபத்து வளையத்திற்குள் சிக்க வாய்ப்பு உண்டு.
  9. ஆசை வார்த்தை கூறி அன்பாக பழகும் யாருடனும் குழந்தைகளை தனித்து விட கூடாது.
  10. தொலைக்காட்சி தொடர்கள், மொபைல் போன்கள் போன்றவற்றை நல்ல அறிவை வளர்க்கும் பட்சத்தில் குழந்தைகள் அவற்றை பார்க்க பயன்படுத்த அனுமதிக்கலாம்.
  11. குழந்தைகள் வளரும் பருவத்தில் இருப்பதால் அதிகமாக கேள்வி கேட்பார்கள். கேள்வி கேட்கிறார்களே என்று எரிச்சலைடந்து குழந்தைகளிடம் கோபமாக பேசாதீர்கள். குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க பழகுங்கள்.
  12. குழந்தைகள் நிறைய பேசுவார்கள். பேசும்போது தான் அவர்கள் மனநிலையை அவர்கள் பிரச்சினையை புரிந்துகொள்ள முடியும். குழந்தைகளை பேச அனுமதியுங்கள்.
  13. சில குழந்தைகள் பேசுவதே அரிதாக இருக்கும். தனிமையை விரும்புபவர்களாக இருப்பார்கள். பெரியவர்களை கண்டு அச்சப்படுவார்கள். அவர்களின் பயத்தை போக்க இயல்பாக பேசி பழகுங்கள். அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்துங்கள்.
  14. பிரச்சினைகளை சந்திக்கும் குழந்தைகள் அதிகம் பயப்படுவார்கள். பயப்படும் குழந்தைகள் எதோ பிரச்சினையை தாக்குதலை சந்தித்திருக்க வாய்ப்புகள் அதிகம். எங்கிருந்து பயம் வந்தது என்று கண்டறிந்தால் எங்கிருந்து பிரச்சினை தொடங்கியது என எளிதில் கண்டறியலாம். தேவையெனில் மனநிலை நிபுணர்களை நாடலாம்.
  15. குழந்தைகளுக்கு பிரச்சினை ஏற்பட்டிருந்தால் அதற்கு பயந்து பிரச்சினையை மூடி மறைக்க முயலாதீர்கள். தைரியமாக காவல் நிலையத்தை அணுகுங்கள். முடிந்தால் வழக்கறிஞரோடு செல்லுங்கள்.
  16. குழந்தைகள் விரும்பாத விஷியங்களை போட்டு திணிக்காதீர்கள்.
  17. ஆண் பிள்ளைகளை அடித்து வளர்க்குனும் பெண் பிள்ளைகளை மிரட்டி வளர்க்கனும் என்ற பழைய பஞ்சாங்குத்தை ஒரங்கட்டுங்கள்.

 

Related Articles

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் பணியாளர்க... மார்ச் 8 ஆம் தேதி நாடெங்கிலும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின் தியாகங்களை போற்றும் விதத்திலும், அவர்களின் சாதனைகளை அடையாளப்படுத்தும் ...
இந்தியாவில் பதுங்குகுழிகள் அமைக்க பாகிஸ்... குஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லைகளில் நிரந்தர பதுங்குகுழிகள் அமைக்க பாகிஸ்தானுக்கு சீனா உதவி செய்துவருகிறது. இந்தியாவை எரிச்சலூட்டச் செய்யும் இந்நிகழ்வ...
கருவாச்சிக்கு கல்யாணம் கேக்குதா – ... லக்ஷ்மி, மா எனும் இரண்டு அட்டகாசமான குறும்படங்களை தந்தவர் இயக்குனர் சர்ஜூன் கேஎம். முழுநீள திரைப்படமாக எடுத்த "எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்"...
இவருடைய கமெண்டுகளை கேட்க ஒரு கூட்டமே இரு... இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குனர் நலன் குமாராசாமி, இயக்குனர் பாலாஜி மோகன், இயக்குனர் நித்திலன், இயக்குனர் ஸ்ரீகணேஷ் என்று தமிழ் சினிமாவுக்கு ...

Be the first to comment on "பெண் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு சில ஆலோசனைகள்!"

Leave a comment

Your email address will not be published.


*