சிம்புவின் அடுத்த படமும் ட்ராப்! – ரகரகமாக சிம்புவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Next film too dropped! Simbu Trolled by Netizens!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிம்பு பாத்ரூம விட்டு வெளிய வரமாட்றான் என்று சிம்புவை பற்றி பேசியவர் தான் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. சிம்பு ஷூட்டிங்க்கு வராததால் மப்டி படம் டிராப் ஆனது என்று இன்று புகார் தந்துள்ளார் ஞானவேல் ராஜா. அதையொட்டி சிம்புவை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர். அவை என்னவென்று பார்ப்போம். 

 1. அடுத்த படமும் ட்ராப்னு செய்தி வருது. ஒவ்வொருத்தன் சினிமால முன்னுக்கு வர்றதுக்கு சாவுறான். வாய்ப்புக்காக அலையுறான். ஓரத்துல முகம் தெரிஞ்சுட்டா போதும்னு சுத்துற நிறைய பேர் நம்ம கூடவே இருக்காங்க. ஆனா இந்த கஷ்டம் லாம்  எதுமே இல்லாம வந்த happy kid சிம்பு. விஜய், சூர்யா க்கு கூட இப்டி அமையல. இப்பவும் happy kidஆ தான் இருப்பேன்னா ரொம்ப கஷ்டம்.

  தமிழ்சினிமால எந்தவொரு நடிகனுக்கும் கிடைக்காத அத்தன வாய்ப்புகள், சொல்லிக்கிற அளவுக்கு technical knowledgeனு பொறந்ததுல இருந்தே சினிமாக்குள்ள சுத்துற ஒரு ஆளா இருந்தும் ஏன் எதுமே சரியா அமச்சுக்க மாட்றாருனு தெரில. ம்யூசிக் கம்போஸ் பண்ண முயற்சி பண்ற எத்தனையோ பேருக்கு மத்தியில ஒரு நடிகனுக்கு ரெண்டு பணம் ம்யூசிக் பண்ற வாய்ப்பு கிடைக்கிறதெல்லாம் சிம்பு க்கு மட்டும் தான் நடக்கும். நம்பிக்கையடோ அலையுறவனுக்கு இல்ல. இதெல்லாம் பாத்தாலும் எப்டி இருந்தாலும் உங்களுக்கு fans இருப்பாங்க. ஆனா சினிமா இருக்காது, சிம்பு. இந்த படம் அவ்ளோ அழகு. இதே அழகோட தான் 2010வரைக்கும் இருந்தாரு. அப்டியே இருந்துருக்கலாம்.

 2. இவனுக்கு கஞ்சா வாங்கி குடுக்ர மகத் கூட அவன் படத்த புரோமோட் பண்ண பிக்பாஸ் போரான் , இவன் என்னடானா பிக்பாஸ்ல இருந்து வெளிய வர்ரவன்ட பிரன்ட் புடிச்சு பெரிய மஸ்தாத்தா காட்டிக்குறான்…
 3. சிம்பு – கவுதம் கார்த்திக் நடிப்பதாக இருந்த முப்தி என்கிற கன்னட ரீமேக் படம், சிம்பு ஷூட்டிங் வராத காரணத்தால் ட்ராப் ஆனதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பேஸ்புக் செய்திகள் சார்பாக சிம்புவை தொடர்பு கொண்டோம். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, பேட்டி கொடுக்கவும் அந்த நாதாரி வரல. டோப்படிச்சிட்டு தூங்கிட்டானாம். அடுத்த படம் ட்ராப் ஆனதுக்கு அப்புறம் மறுபடி ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.
 4. எனக்கு ஒன்று தான் புரியவில்லை. சிவாஜி ரசிகர்கள் எல்லாம் என்ன சிவாஜி புதிதாய் படம் நடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தா காத்திருக்கிறார்கள்? ஏற்கனவே அவர் நடித்து வைத்து விட்டுப் போன பொக்கிஷங்களைத் தானே திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்து மகிழ்கிறார்கள்! சிம்பு ரசிகர்களும் அப்படி இருந்து விட்டுப் போவதில் என்ன பிரச்சனை?
 5. பணக்காரப் புள்ளைக அதாவது Born with silver spoon celebrity kids இரண்டு வகை…. என்ன வசதி இருந்தாலும் தனக்கான புகழ், வாய்ப்பு, வசதி, வேலை அமைச்சிகிட்டு அப்பன் சொத்தையும் அனுபவிப்பாங்க…. இரண்டாவது வகை, அப்பன் Famous, மகனுக்கு திறமை இருக்கே னு நோகாம வாய்ப்பு வரும்… ஆனா அதை பொருட்டா மதிக்காம அப்பன் சம்பாரிச்சதே இருக்கே னு அழிச்சு வாழ்க்கைய சுகமா வாழ்வாங்க… சிம்பு இரண்டாவது வகை… ஒரு நிகழ்ச்சியில TR தான் Guest.. அவரோட பால்ய நண்பன் தியாகு வந்தபோது திரையுலக ஆரம்ப நாட்களில் எவ்வளவு கஷ்டப்பட்டோம் இருவரும் னு சொல்லி கண்ணீர் வடித்தார்… அது அவர்கள் இருவரின் உண்மையான நட்பையும், வறுமையோட போராடின மனத்திறமையயும் காட்டுச்சு.. இதெல்லாம் சிம்பு க்கு தெரிஞ்சிருந்தா, புரிஞ்சிருந்தா தனக்கான இடத்தை அவரே தேடிப்பிடித்து தக்க வைத்துக்கொள்வார்.
 6. இன்னக்கி ஒரு படத்த ட்ராப் பண்ணிட்டேன்… எல்லாம் சேந்து என்னய அடிங்கடா… டேய் மலுங்க திகூ … ஒன்னயலாம் யார்றா அடிப்பா…நவுருடா அந்தாண்ட…
 7. எந்த படம் கமிட்டாணோம்னு தெரிஞ்சா தானடா நடிக்க போக முடியும்…
 8. நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு கேரக்டர் இருக்கும். வீட்லயோ, இல்ல ப்ரெண்ட்ஸ் சர்க்கில்லயோ எதுவுமே பண்ணமாட்டான் என்னா பண்ணாலும் பிரச்சினைல முடியும் அதுக்கு பீல் பண்ண மாட்டான் அவன்பாட்டுக்க அவன்போக்குல ஜாலியாருப்பான். அவன்மேல கோவம்லாம் இருக்கும் ஆனா வெறுக்க முடியாது ஏதோ ஒன்னு அப்டியே இருக்கும் அவன்மேல போய்த்தொலனு விட்ருவோம். இந்த தமிழ்சினிமாக்கு சிம்புதான் அந்த கேரக்டர்…
 9. டிஆர் புள்ளைக்கு சிம்புன்னு பேர் வெச்சதுக்கு பதில் வம்புன்னு வெச்சிருக்கலாம்…
 10. சிலம்பரசன்னு வச்ச பேரையே கூப்புடறதுக்கு சிரமமா இருக்குன்னு சிம்புன்னு மாத்தி அதையும் STR -னு சுருக்கிட்டு சுத்துறவன் நானு. எங்கிட்ட வேலை வாங்கனும்னு பாத்தா எப்புடி? என் கேரக்டரையே இன்னும் நீங்க புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களேடா…
 11. மகா மப்டி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்த நடிகர் சிம்பு சரியாக படப்பிடிப்புக்கு வராததால் அவரை படத்தில் இருந்து நீக்குவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சிம்பு அறிவித்து உள்ளார். இதனை அப்படத்தின் இயக்குனர் சிம்பு வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து மகாமக மப்டி என்று பெயரிடப்பட்ட புதிய திரைப்படத்தை “நடிகர் சிம்பு” சொந்தமாக தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 12. என்னைக்கு எங்க அண்ணன் சீமான் சிம்புதான் அடுத்த சூப்பர் ஸ்டார்னு சொன்னாரோ அன்னைக்கு புடுச்சது சிம்புக்கு கெட்ட நேரம்.
 13. இன்னுமடா நான் (சிம்பு) ஷூட்டிங்’க்கு வருவேன்னு நம்பிட்டு இருக்கீங்க…
 14. நான் படத்துல நடிக்கிறது இந்த அப்டேட் பார்த்து தான் தெரியுது இப்படிக்கு சிம்பு.. நமக்கு உழைப்பு எவ்வளவு முக்கியமோ அதேபோல் நேரமும் முக்கியம் உங்களுக்காக இல்லாட்டியும் உங்கள் ரசிகர்களுக்காக இருங்க…
 15. திறமையிருந்து ஆயிரம் பேர் வாய்ப்பு கிடைக்காமல் இருக்க… சினிமாவுக்கு இவர் போடும் பீப் பாடலுக்கும், A காட்சிகள் வைத்தாலும் ரசிக்க ஒரு முட்டாள் கூட்டம் இருக்கும்வரை இது போன்ற ஆட்கள் வந்தா ராஜாவா தான் வருவான். தமிழ் சினிமா வுக்கு வந்த சத்திய யோசனை.
 16. சர்ச்சை, புகார் என்பதற்க்கு அர்த்தம் சிம்பு என்று ஆகி போச்சு இதுல மீண்டு இவன் மேல வரனும்னா தன்னோட திறமையை நிருபிக்கனும் தோல்வி, கேலி, கிண்டல் எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்கும் அதையெல்லாம் ஏறி மிதிச்சிட்டு போறவன் தான் ஜெயிக்கிறான்…
 17. ஏன்யா சிம்புவப்பற்றி உங்களுக்குத் தெரியாதா? சூட்டிங்குக்கு அவர வரச் சொல்லாதீங்க. அவர் இருக்குற இடத்துல சூட்டிங் நடத்துங்க.
 18. மஃப்டி படத்துக்கு  மஃப்டி ல வந்துருப்பார் … அடையாளம் தெரியாம அங்கதான் எங்கேயோ இருந்துருப்பார்  சரியா பாத்துருக்கணும் ..!
 19. டேய், இவன எல்லாம் நம்பி படம் எடுக்கற ஒங்க மேல தான் டா தமிழ்நாட்டு மக்கள் புகார் கொடுக்கனும்…
 20. அவன் தான் யோக்கியனு தெரிதுல! அப்புறம் ஏன்டா சொம்ப தூக்கி உள்ள வைக்காம கதறுரிங்க…
 21. என்னமோ மொத தடவ படத்த எதிர்பார்த்து ட்ராப் ஆனா மாதிரி தான் திட்டிட்டு இருக்கானுக..தலைவன் சிம்பு வாழ்க்கைல இதலாம் சகஜம் தான டா…
 22. இப்ப பாரேன்… ப்ரெஸ் மீட் வைப்பான்… அவன் அப்பன் மாதிரி சம்பந்தமே இல்லாம பேசுவான்… அதான் சிம்பு…

இவ்வாறு பலவிதமாக சிம்புவை கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். ஆனால் இதுவரை சிம்பு தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதற்கு முன் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த மாநாடு படம் ட்ராப் ஆனது குறிப்பிடத் தக்கது. இந்தப் பிரச்சினையால் சிம்புவை கலாய்ப்பவர்களிடம் என்ன பதில் சொல்வது, எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் சிக்கித் தவிக்கின்றனர் சிம்பு ரசிகர்கள்.

Related Articles

தமிழகம் வந்தடைந்தார் பிரதமர் – பாத... காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் எங்கும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே இந்திய பிரதமர் நரேந்த...
ஆடுகளம் “பேட்டைக்காரன்” மாதி... இயக்குனர் வெற்றிமாறனின் 2வது படம். ஆறு தேசிய விருதுகளை குவித்த படம் "ஆடுகளம்." இந்தப் படத்தில் தனுஷ், கிஷோர், கவிஞர் ஜெயபாலன், டாப்ஸி, முருகேசன் ஆகியோ...
கமல் – கலையும் கலைசார்ந்த இடமும் &... சட்டம்நடிப்பு : கமல்(போலீஸ்), சரத்பாபு(வக்கீல்), மாதவி(interior decration), ஒய்.ஜி. மகேந்திரன், மனோரமா மற்றும் பலர்.இயக்கம்: கே.விஜயன்இசை:...
ரிமோட்டில் இயங்கப்போகிறது சென்னை மெட்ரோ ... சிறுவயதில் நாம் அனைவருமே பொம்மை கார வைத்து விளையாடியிருப்போம் அல்லவா, மிகவேகமாகக் காரை இழுத்து விட்டால் அது சுவரில் டம்மென்று இடித்து நிற்கும். பிறகு ...

Be the first to comment on "சிம்புவின் அடுத்த படமும் ட்ராப்! – ரகரகமாக சிம்புவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*