நடிகர்களை நம்பாதிங்க – சத்யராஜ்! நடிகர்களை நம்பலாம் – ஆர். பார்த்திபன்!

நடிகர்களை நம்பாதிங்க - சத்யராஜ்! நடிகர்களை நம்பலாம் - ஆர். பார்த்திபன்!

கமல், ரஜினி இருவரும் தங்களது அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டனர். இந்நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து நிகழ்ச்சி ஒன்றில், ” நடிகர்களை நம்பாதிங்க மக்களே! அவர்கள் பிரபலம் என்பதால் அவர்களுக்கு அனைத்தும் தெரிந்திருக்கும் என்று நம்பி ஏமாற வேண்டாம் ” என்று நடிகர் சத்யராஜ் தமிழக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக தன் கருத்தை பதிவு செய்துள்ளார்.

நடிகர் சத்யராஜ் தீவிர பெரியார் பற்றாளர் என்பது அனைவரும் அறிந்ததே. சினிமாவின் மீது அதிக பற்றில்லாதவர் பெரியார். அவரைப் போலவே, நடிகர்களை திரையில் ரசித்து கொண்டாடலாமே தவிர அவர்களை அரசியல் தலைவராக ஆக்க நினைப்பது தவறு, அப்படி செய்தால் மக்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம் என்ற ரீதியில் பேசியுள்ளார் சத்யராஜ்.

அதே சமயத்தில் நடிகர் பார்த்திபன், ” நடிகர்கள் என்பதால் அவர்ளை வெறுக்க வேண்டாம். நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நல்லது செய்யவே ரஜினி, கமல் அரசியலுக்கு வருகிறார்கள் ” என்று நடிகர்களின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார். பார்த்திபனும் பெரியார் கொள்கைகள் மீது பற்று உடையவர். சமீபத்தில் கி.வீரமணி கையில் பெரியார் விருதை பெற்று மனமகிழ்ந்துள்ளார். இந்நிலையில் இவர்களுடைய முரணான கருத்துக்கள் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. தகுதியுடைய திறமையான அனுபவசாலிகளை உடன் வைத்துக்கொண்டு அவர்களின் ஆலோசனையை கேட்டு முடிவெடுக்கும் திறனும் அனைவரையும் அனுசரித்து போகும் திறமையும் இருந்தாலே போதும் அந்த தன்மை ரஜினி, கமல் இருவரிடமும் இருக்கிறது என்று ரஜினி, கமல் ரசிகர்கள் அவர்களின் வருகைக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

சூர்யா – வெற்றிமாறன் இணையும் படத்த... அசுரன் வெற்றிப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கும் படத்தின் பெயர் வாடிவாசல் என தகவல்கள் வந்துள்ளன. பொல்லாதவன், ...
டிடிவி தினகரன் இன்னும் சில தினங்களில் ஜெ... கடந்த சில தினங்களுக்கு முன்பு அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பிரான செந்தில்பாலாஜி அதிமுகவில் இருந்து திமுகவிற்கு மாறினார். இது குறித்து தினகரனும்,...
ப்ராங்க் ஷோ செய்பவர்களுக்கு ஆடை படம் ஒரு... சுதந்திரக் கொடி என்ற பெயரை காமினி என்று மாற்றி வைத்துக்கொண்ட அமலாபால் ஒரு டிவி சேனலில் தொப்பி தொப்பி என்ற ப்ராங்க் ஷோவை நடத்தி வருகிறார். ப்ராங்க் ஷோ ...
இளைஞர்களுக்கான கதைசொல்லியை பற்றி தெரிந்த... திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் மற்றும் கதைசொல்லி பவா செல்லத்துரை. நிறைய இளைஞர்களை தன் வசீகர குரலால் இலக்கிய உலகிற்கு அழைத்து வரும் இந...

Be the first to comment on "நடிகர்களை நம்பாதிங்க – சத்யராஜ்! நடிகர்களை நம்பலாம் – ஆர். பார்த்திபன்!"

Leave a comment

Your email address will not be published.


*