உங்கள் இதயத்துடிப்பை தொடர்ந்து கண்காணிக்க உதவும் எலக்ட்ரானிக் ஸ்கின் பேட்ச்!

உங்கள் இதயத்துடிப்பை தொடர்ந்து கண்காணிக்க உதவும் எலக்ட்ரானிக் ஸ்கின் பேட்ச்!Photo Credit: AVP

கடந்த ஐந்து வருடங்களாக மருத்துவ உலகில் உடல் நலத்தை தொடர்ந்து கண்காணிக்கும் வகையிலான எலக்ட்ரானிக் ஸ்கின் பேட்சுகள் வெளிவர தொடங்கியுள்ளது. இப்போது அவற்றில் கவனிக்கத்தக்க வகையில் LED டிஸ்பிளேயுடன் கூடிய எலக்ட்ரானிக் ஸ்கின் பேட்ச்சை டோக்யா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள்.

இதை நமது மணிக்கட்டில் பொருத்திக்கொள்ளும் வகையில் உருவாக்கியுள்ளார்கள். மணிக்கட்டு தோல் மீது பொருத்திக்கொண்டு கையை வழக்கம்போல மடக்கிக்கொள்ளும் வகையில் வளைவுத்தன்மையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் சென்சார்கள் மூலமாக நோயாளியின் இதயத்துடிப்பை தொடர்ந்து கண்காணிக்கலாம்.

நேனோமெஸ் எலக்ட்ரோட்ஸ், ஸ்ட்ரெச்சபிள் வொயரிங், மைக்ரோ எல்இடி ஆகியவற்றை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரானிக் ஸ்கின் பேட்ச் எலக்ட்ரோகார்டியோகிராம் போன்றே இதயத்துடிப்பு அலைவரிசையை தொடர்ந்து பிரதிபலிக்கும். இதன் மூலம் நோயாளிகள் உடல் நலத்தை தொடர்ந்து கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல் அவருக்கு நேரும் ஆபத்தான சூழலை உடனே தெரிந்துகொள்ளும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ள இந்த சென்சார் பேட்ச்சை ஸ்மார்ட்போனுடன் இணைத்து பயன்படுத்தலாம். இப்படி பயோமெட்ரிக் டேட்டாவை சேமித்து வைக்கவும் தொலைவில் இருந்தபடியே நோயாளியின் உடல்நல ஆலோசர்களுக்கு அனுப்பவும் இயலும். இந்த பேட்ச்சை அதன் உண்மையான நீளத்திலிருந்து 45 விழுக்காடு அளவிற்கு இழுக்க இயலும். இத்தகைய சிறப்பம்சம் கொண்ட எலக்ட்ரானிக் ஸ்கின் பேட்ச்சை இன்னும் மூன்று ஆண்டுகளில் பெரிய அளவில் தயாரித்து வெளியிட இருக்கிறது டாய் நிப்பான் பிரிண்டிங் நிறுவனம்.

Related Articles

தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம் மற்றும் தமி... மதராஸ் மாகாணம் 1969 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது அப்படி பெயர் மாற்றம் செய்தவர் அப்போதைய முதல்வர் சி என் அண்ணாத...
ரஜினியின் 100 மரணமாஸ் வசனங்கள் ஒரு பார்வ... எனக்கு மரியாதை வேண்டாம், வேலைக்கு மரியாதை கொடுங்க... இது எப்படி இருக்கு? எப்போதுமே ஒருத்தர குறைச்சி மதிப்பிடக் கூடாது. ஆஞ்சநேயர ராவணன் குற...
ரகசிய ஆவணங்களைக் கசியவிட்ட இந்திய விமானப... இந்திய விமானப்படையின் ரகசியங்களைக் கசிய விட்ட குற்றத்திற்காக இந்திய விமானப்படையில் குழு கேப்டனாக பணியாற்றி வரும் அருண் மர்வாஹா என்பவர் கைது செய்யப்பட்...
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அஸ்ஸாம் ம... குடியுரிமை சட்டம் 2016ல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம் முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன...

Be the first to comment on "உங்கள் இதயத்துடிப்பை தொடர்ந்து கண்காணிக்க உதவும் எலக்ட்ரானிக் ஸ்கின் பேட்ச்!"

Leave a comment

Your email address will not be published.


*