கோமாவில் இருந்த பெண்ணை இயல்புநிலைக்கு மாற்றிய வடிவேலு காமெடி!

Vadivelu comedy that changed the girl in a coma to the normal!

நடிகர் வடிவேலு எத்தனை படங்கள் நடித்தவர் எவ்வளவு மனித உள்ளங்களை சம்பாதித்திருக்கிறார் என்பதெல்லாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.

பெரும்பாலானோர் அறிந்திடாத நடிகர் வடிவேலு பற்றிய சில தகவல்கள் இங்கே :

 1. அப்பா நடராஜ பிள்ளை, அம்மா சரோஜினி, மூன்று தங்கைகள் இரண்டு தம்பிகள். முதலில் இட்லி கடை வைத்திருந்தார்கள். பிறகு கண்ணாடி கடை வைத்திருந்தார்கள். உடன் பிறப்புகளை சைக்கிளிலும் தோளிலுமாக சுமந்த பாசக்கார மனிதர்.
 1. வாடகை சைக்கிள் காமெடியை ( எடுத்த நாள் முதல் வாடகை தரவில்லை என்று பாட்டு பாடிக்கொண்டு சைக்கிள் ஓடித்திரிந்து கடைசியில் பார்த்திபனிடம் சிக்கிக்கொள்வாரே அந்தப் படம் ), சைக்கிள் ஓட்டத் தெரியாமல் ஒருவர் மீது நாம் எல்லோரும் ரசித்திருப்போம். வாடகை சைக்கிள் வாங்கி ஓட்டிய அனுபவமும் அதை கீரை விற்கும் பாட்டியின் விட்டேற்றிய அனுபவமும் வடிவேலுக்கு உண்டு. சொந்தமாக ஒரு சைக்கிள் வாங்க வடிவேலு அவ்வளவு பாடுபட்டார். அவர் கஷ்டப்பட்டு காசு சேர்த்து வாங்கிய சைக்கிளை அவருடைய அப்பா அரிசி வாங்குவதற்காக விற்றுவிட்டார். அவ்வளவு வறுமை.
 1. தேவர் மகன் படத்தில் சிவாஜியுடன் நடித்த வடிவேலுக்கு தனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆருடன் நடிக்க முடியவில்லையே என்ற கவலை பல வருடங்களாக இருந்து வருகிறது. தேசிய விருது, பத்ம விருது போன்றவை கிடைக்காததை குறித்து ஒருநாளும் அவர் வருந்தியதில்லை. அவர் விருதாக நினைப்பது மக்களின் அன்பை மட்டுமே.
 1. 17 வயதுவரை தியேட்டரில் பெண்கள் நிற்கும் வரிசையில் நின்று தான் டிக்கெட் எடுத்துள்ளார். அவ்வளவு அம்மா பிள்ளை. இப்படி பெண்கள் சூழ வாழ்ந்ததால் தான் ஏராளமான பெண்களின் மனதை வென்றுள்ளார் வடிவேலு.
 1. ஒருமுறை வயிறுவலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். வெயிட்டிங் ஹாலில் உள்ள டிவியில் அவருடைய காமெடிகள் மட்டுமே தொடர்ச்சியாக ஓடுவதை நோயாளிகள் ரசித்து பார்ப்பதை பார்த்து பலருடைய நல்வாழ்வுக்கு நான் எதோ ஒருவிதத்தில் காரணமாக உள்ளேன் என்றுணர்ந்து கண்கலங்கி உள்ளார்.
 1. மாதவன் நடித்த ஆர்யா படத்தில் மாமியா நாகம்மா மேல சத்யம் என்பார். உண்மையிலயே வடிவேலுவின் மாமியார் பெயர் நாகம்மாள்.
 1. 13 வயது சிறுமி விபத்தின் காரணமாக கோமா நிலைக்குச் சென்றுள்ளார். அப்படிப்பட்ட சிறுமியை எப்படி காப்பாற்றுவது என தெரியாமல் பெற்றோர்கள் தடுமாற, சிறுமிக்கு மிகவும் பிடித்த விஷியம் எது என்று கேட்டிருக்கிறார் மருத்துவர். பெற்றோர்களோ வடிவேலு என்று சொல்ல வடிவேலுவின் காமெடி சீடிக்களை வாங்கி சிறுமிக்கு அடிக்கடி போட்டு காமியுங்கள் என்று மருத்துவர் சொல்ல பெற்றோர்கள் அதையே செய்துள்ளார்கள். சில வாரங்களிலயே அந்தச் சிறுமி சுயநினைவுக்குத் திரும்பியுள்ளார்.
 1. குடிகார கணவனால் தற்கொலை முடிவுக்குப் போய் உள்ளார் ஒரு யுவதி. அந்த யுவதி தூக்கு கயிறு இறுக்கிக் கொண்டிருந்த போது சட்டென டிவியில் வடிவேலுவின் கைய புடிச்சு இழுத்தயா காமெடி ஓடி உள்ளது. அதைக் கேட்டதும் இயல்பு நிலைக்கு மாறி சிரித்துக் கொண்டே முடிவை மாற்றிக்கொண்டார் அந்த யுவதி.
 1. கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் வரும் ” இவன் ஒருத்தன் போதும்டா நகை கடையவே எழுதி வாங்கிக்லாம் டா… ” என்ற காமெடியும், மதுர மல்லி காமெடியும் உண்மையிலயே நடந்த சம்பவங்களாம்.
 1. ஒரு படத்தில் எம்ஜிஆரின் கத்தி விலகியதும் வடிவேலு நிஜ கத்தியை எடுத்து டிவி மேல வீசி டிவியை உடைப்பாரே அந்தக் காமெடிக்கு முன்னோடி அவருடைய தம்பி இளங்கோவாம்.

வடிவேலு பற்றி புத்தகங்கள் : ( விகடன் பிரசுரம் )

 1. வடி… வடிவேலு… வெடிவேலு
 2. வேலு பேசுறேன் தாயி

Related Articles

ஐஎஸஐஸ் தீவிரவாத அமைப்பால் கொல்லப்பட்ட 39... 2014 ஆம் ஆண்டு இராக்கில் காணாமல் போன 39 இந்தியர்களை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாக முன்னாள் இராணுவ தளபதிக்கும், மத்திய அமைச்சர் ஜெனரல் விகே சிங்கு...
ஜியோ போன் வாங்கியவர்கள் என்ன பாவம் செய்த... "குறைந்த விலையில் நிறைந்த சேவை" இந்த வாக்கியம் மக்களை முட்டாளாக்கும் வாக்கியம். மக்களை முட்டாளாக்கும்படியே நடந்துகொள்கிறது ஜியோ கம்பெனி. ஜியோ கீபேட்...
கூவம் நதி தாமிரபரணியைக் காட்டிலும் புனித... "சென்னையில் யாரும் எங்கும் செல்லலாம். யாரும் யாருக்காகவும் பயப்பட வேண்டியதில்லை. கூவம் அழுக்காய் மலமாய் நாற்றத்தோடு ஓடினாலும் தாமிரபரணியைக் காட்டிலும்...
தூங்கும் போதும் அருகில் செல்போன் – என்னெ... நீங்கள் தூங்கும் சமயம், இரவில் செல்போன் அணைக்க விரும்பவில்லை என்றால், குறைந்தபட்சம் இணைய இணைப்பை துண்டித்து மற்றும் படுக்கைக்கு மூன்று அடி தூரத்தில் வ...

Be the first to comment on "கோமாவில் இருந்த பெண்ணை இயல்புநிலைக்கு மாற்றிய வடிவேலு காமெடி!"

Leave a comment

Your email address will not be published.


*