அஜீத்திற்குப் போட்டியாளராக நடிக்கும் ரங்கராஜ் பாண்டே!

Rangaraj Pandey will act as a competitor of Ajith!

அமிதாப் பச்சன், டாப்சி ஆகியோர் இணைந்து நடித்த படம் ‘பிங்க்’. தேசிய விருது உள்பட பல விருதுகளை இப்படம் வென்றுள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது தமிழில் ரீமேக் செய்யப் படுகிறது.

அமிதாப் பச்சன் கேரக்டரில் அஜீத் நடிப்பதாகவும் அந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்து இயக்குபவர் ஹெச் வினோத் என்பதும் நாம் அறிந்ததே.

சில நாட்களுக்கு முன்பு நேர்கொண்ட பார்வை என்று அந்தப் படத்திற்குத் தலைப்பிட பட்டது. இந்நிலையில் இன்னொரு புதிய செய்தியையும்  நேர்கொண்ட பார்வை குறித்து படக்குழு வெளியிட்டுள்ளது.

” பிங்க் ” ஹிந்திப்படத்தில் அமிதாப்புடன் கோர்ட்டில் மோதிய நடிகரின் பெயர் பியூஸ் மிஸ்ரா. பியூஸ் மிஸ்ராவின் தமிழ் கேரக்டரை அதாவது அஜீத்துடன் மோதும் அதிரடி வக்கீல் கேரக்டரை செய்ய இருப்பவர் கேள்விக்கென்ன பதில் புகழ் ரங்கராஜ் பாண்டே.

ரங்கராஜ் பாண்டேவிற்கு இது முதல் படம் என்பதாலும் அஜீத்துடன் மோதப் போகிறார் என்பதாலும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.

Related Articles

பத்திரிக்கை அல்லது மாத இதழை வெற்றிகரமாக ... வாசக எழுத்தாளர்கள் என்ற வார்த்தையை பெரும்பாலானோர் கேள்வி பட்டிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் பெரும்பாலானோருக்கு பத்திரிகைகள், இதழ்கள் படிக்கும் பழக்கம்...
” உண்மைக்கு என்ன விலை வேணாலும் கொட... தயாரிப்பு : நாடோடிகள் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்கள் : Dr. பிரபு திலக், பி. சமுத்திரக்கனி எழுத்து இயக்கம் : எம் அன்பழகன்ஒளிப்பதிவு : அ. ராசாமதி...
டிடிவி தினகரன் இன்னும் சில தினங்களில் ஜெ... கடந்த சில தினங்களுக்கு முன்பு அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பிரான செந்தில்பாலாஜி அதிமுகவில் இருந்து திமுகவிற்கு மாறினார். இது குறித்து தினகரனும்,...
இந்த ஒருநாளில் அரசு அனுமதியுடன் நீங்கள் ... அமெரிக்கா தன் நாட்டில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை குறைக்கும் விதமாக குற்றம் புரிந்தவர்களை மற்ற நாள்கள் கடுமையாக தண்டித்து ஆண்டின் ஒரேயொரு ஒரு நாள் இ...

Be the first to comment on "அஜீத்திற்குப் போட்டியாளராக நடிக்கும் ரங்கராஜ் பாண்டே!"

Leave a comment

Your email address will not be published.


*