சாவுக்கிதார் என்றால் மக்கள் காவல்காரன் என்று பொருள்! – மனம் கவர்ந்த ஜிவி பிரகாஷின் வாட்ச்மேன் போஸ்டர்!

Watchman Poster of GV Prakash

சுதந்திர தின உரையின்போது, நான் இந்த நாட்டின் பிரதமர் அல்ல; தலைமை காவல்காரன் என்று குறிப்பிட்டார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.

அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் வகையில் தன்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட் பெயரை நரேந்திரமோடி என்பதிலிருந்து  சாவுக்கிதார் நரேந்திர மோடி என்று மாற்றியிருக்கிறார். தற்போது அவரைப் போலவே பாஜக கட்சியை சேர்ந்தவர்களும் ஆதரவாளர்களும் இணையதள பக்கங்களில் தங்கள் பெயருக்கு முன்னே சாவுக்கிதார் என்று பெயர் வைத்துள்ளனர். மேலும் #MainBhiChowkidar என்று டுவிட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

இந்நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் யோகிபாபு நடிப்பில் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாட்ச்மேன். வருகிற ஏப்ரல் 12ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் தற்போது அப்படத்திற்கான ப்ரமோசன் வேலைகள் நடந்துகொண்டு வருகிறது. அப்படி அந்தப் படக்குழு வெளியிட்ட போஸ்டர் ஒன்றில் நாய்க்குட்டி ஒன்று ஒரு போர்டை வாயில் கவ்விய படி இருக்கிறது. அந்தப் போர்டில் Im a chowkidar too என்று எழுதி இருக்கிறது. இந்த போஸ்டர் பாஜகவை அவமானம் செய்வது போல் உள்ளது என்று ஒருதரப்பு வாதாட, இன்னொரு தரப்போ இதில் என்ற அரசியல் இருக்கு? என்ன விளம்பரம் இருக்கு?

நாய்கள் நமக்குப் பாதுகாவலர்களாக இருப்பதுதானே உண்மை. அப்படி இருக்கும்போது நாய்யின் கழுத்தில் சாவுக்கிதார் போர்டு இருப்பதில் என்ன தவறு? என்று குரல் எழுப்பி வருகிறது.

மொத்தத்தில் ஒரு போஸ்டர் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது வாட்ச்மேன் படக்குழு.

Related Articles

தனுஷ் படங்களும் அண்ணன் தம்பி எமோஷனல் காட...  நடிகர் தனுஷ் மற்றும் அவருடைய அண்ணனான செல்வராகவனும் "துள்ளுவதோ இளமை" படத்தில் இருந்து தங்களுடைய சினிமா பயணத்தை தொடங்கினர். அந்த முதல் படத்தில...
ரஜினி படம் என்றாலும் மாஸ் காட்டப்போவது வ... வருகிற பொங்கலுக்கு களம் இறங்க இருக்கும் மிக முக்கியமான படம் கார்த்திக் சுப்புராஜின் பேட்ட. ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா என்று கார்த்திக் சுப்...
செல்பி எடுக்க முயன்றால் செல்போன் உடையும்... சிங்கத்தையும் சிறுத்தையையும் பெற்று வளர்த்தவரான சிவக்குமார் நடிகர், ஓவியர், பேச்சாளர் என்று பன்முகத் தன்மை வாய்ந்தவர். சில வருடங்கள் வரை இவருடைய சொல்...
உலக புகழ்பெற்ற முதல் நடிகர் சார்லி சாப்ள... வசனங்கள் இல்லாத காலத்திலயே உலகம் முழுவதும் புகழோடு விளங்கியவர் சார்லி சாப்ளின். சிரிப்பு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தார். அவர் நடித்த படங்களின்...

Be the first to comment on "சாவுக்கிதார் என்றால் மக்கள் காவல்காரன் என்று பொருள்! – மனம் கவர்ந்த ஜிவி பிரகாஷின் வாட்ச்மேன் போஸ்டர்!"

Leave a comment

Your email address will not be published.


*