சுட்டுப் பிடிக்க உத்தரவு – விமர்சனம்

Suttupidikka utharavu movie review

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் எனும் அட்டகாசமான படத்தை தந்தவர் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா. அதை தொடர்ந்து ஜீவா மற்றும் ஹன்சிகாவை வைத்து போக்கிரி ராஜா எனும் படத்தை எடுத்தார். அது தோல்வியில் முடிந்தது. ஆக மீண்டும் ஒரு வெற்றிப்படம் கொடுத்தே ஆக வேண்டும் என்று சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பா.

இயக்குனர் சுசீந்திரனும் விக்ராந்தும் சேர்ந்துகொண்டு பேங்க் ஒன்றிலிருந்து பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள். காரணம் அவர்களுடைய சின்ன குழந்தைக்கு ஆப்ரேசன் செய்ய வேண்டும். ஆப்ரேசனுக்காக கொள்ளை அடித்தவர்களை துரத்திச் செல்கிறது இயக்குனர் மிஷ்கினின் படை. அந்தக் குழந்தைக்கு ஆப்ரேசன் செய்யப்பட்டதா? கொள்ளையர்கள் பிடிபட்டார்களா? என்பது மீதிக்கதை.

இயக்குனர் சுசீந்திரனக்கு இது முதல் படம். முதல் படம் என்று தெரியாத அளவுக்கு நல்ல நடிப்பை தந்துள்ளார். மிஷ்கினின் நடிப்பை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. விக்ராந்துக்கு இது பெயர் சொல்லும் படமாக இருக்கும். படம் தொடங்கிய முதல் நிமிடத்திலிருந்தே படம் கதைசொல்ல ஆரம்பித்துவிடுகிறது. படம் ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாகச் செல்கிறது. ஆனால் கிளைமேக்ஸ் டுவிஸ்ட்டில் சொதப்பி உள்ளது. இதை டுவிஸ்ட் என்று எப்படி நம்பினார்களோ?

இளம் நாயகி அதுல்யா பேபி மானஸ்வி உட்பட எல்லாரும் நல்ல நடிப்பை தந்துள்ளார்கள். பின்னணி இசையும் ஒளிப்பதிவும் அருமை. படத்தில் ஆங்காங்கே ஏகப்பட்ட தோட்டாக்கள் தெறிக்கிறது. அதை போலவே ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குகள். பலவீனமான கதைக்கு எவ்வளவு மெனக்கெட்டு திரைக்கதை அமைத்தாலும் அது சமாராகவே இருக்கும். படமும் அப்படித்தான் இருக்கிறது.

Related Articles

இதாங்க ஆயிரத்தில் ஒருவன் படத்தோட கதை!... இத்திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனையே. சோழ பாண்டிய வரலாற்றுக்கும் இத்திரைப்படத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.ஒரு குக்கிராமம்... தற்போதைய தஞ்சாவ...
லவ் யூ சிதம்பரம்! – அசுரன் விமர்சன... தயாரிப்பு : v கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு. எழுத்து இயக்கம் : வெற்றிமாறன்மூலகதை : எழுத்தாளர் பூமணிஇசை : ஜீவி பிரகாஷ் குமார்ஒளிப்பதிவ...
கமல் – கலையும் கலைசார்ந்த இடமும் &... சட்டம்நடிப்பு : கமல்(போலீஸ்), சரத்பாபு(வக்கீல்), மாதவி(interior decration), ஒய்.ஜி. மகேந்திரன், மனோரமா மற்றும் பலர்.இயக்கம்: கே.விஜயன்இசை:...
" இவிங்கள நம்பி அரசியலுக்கு வராதீங்... தமிழகத்தில் தற்போது கோமாளி ஆட்சி நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. ஜெயலலிதா இறப்புக்குப் பின் திறமையான தலைமை அமையப்போவதில்லை என்பதை நன்கு உணர்ந்த ரஜி...

Be the first to comment on "சுட்டுப் பிடிக்க உத்தரவு – விமர்சனம்"

Leave a comment

Your email address will not be published.


*