பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம்

india

நியூ வேர்ல்டு வெல்த் (New World Wealth) என்ற அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில், உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது. 2017 ஆம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இந்தியா 8230 டாலர்களுடன் ஆறாம் இடம் பிடித்துள்ளது. வழக்கம் போல இந்தப் பட்டியலில் அமெரிக்கா 64584 பில்லியன் டாலர்களுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 24803 பில்லியன் டாலர்களுடன் சீனா இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. மூன்றாம் இடத்தில் 19522 பில்லியன் டாலர்களுடன் ஜப்பான் உள்ளது.

ஒரு குறிப்பிட்ட நாட்டில் அல்லது நகரத்தில் வாழும் தனிமனிதர்களின் சொத்து அளவை மட்டும் அளவீடாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. அரசாங்க நிதி இந்த அறிக்கை தயாரிப்பின் போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. தனிமனிதனின் சொத்து என்பது பணம், பங்கு, வணிக நலன்கள் மற்றும் இதர பொறுப்புகள் கொண்டவை ஆகும்.

இந்தப் பட்டியலில் 9910 பில்லியின் டாலர்களுடன் நான்காம் இடத்தில் இங்கிலாந்தும், 9660 பில்லியின் டாலர்களுடன் ஐந்தாம் இடத்தில் ஜெர்மனியும், 6649 பில்லியன் டாலர்களுடன் ஏழாம் இடத்தில்  பிரான்சும், 6396 பில்லியன் டாலர்களுடன் எட்டாம் இடத்தில் கனடாவும், 6142 பில்லியன் டாலர்களுடன் ஒன்பதாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும், 4276  பில்லியின் டாலர்களுடன் பத்தாவது இடத்தில் இத்தாலியும் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவுக்குச் சிறப்பான இடம்

இந்தியா சிறப்பான செல்வ சந்தையை கொண்டிருக்கும் நாடு என்று அந்த அறிக்கை குறிப்பிட்டு பாராட்டியிருக்கிறது. 2016 ஆம் ஆண்டு 6584 பில்லியன் டாலர்களாக இருந்த அதன் சொத்து மதிப்பு , 2017 ஆம் ஆண்டு 8230 பில்லியன் டாலர்களாக வளர்ச்சி அடைந்துள்ளது. இது இருபத்து ஐந்து சதவீத வளர்ச்சி ஆகும். சீனாவின் கடந்த ஆண்டு வளர்ச்சி இருபத்து இரண்டு சதவீதம் ஆகும். 2016 ஆம் ஆண்டு 192 ட்ரில்லியனாக அதன் சொத்து மதிப்பு 2017 ஆம் ஆண்டின் இறுதியில் 215 ட்ரில்லியனாக உயர்ந்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் அதாவது 2007 – 2017 முதல் இந்தியாவின் சொத்து மதிப்பின் வளர்ச்சி 160 சதவீதம் கூடியுள்ளது. அதாவது 2007 ஆம் ஆண்டு 3165 பில்லியன் டாலர்களாக இருந்த அதன் சொத்து மதிப்பு, 2017 ஆம் ஆண்டு 8230 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் கூடியுள்ளது.

தனிநபர் சொத்து அளவு

330400 என்பது இந்தியாவில்  ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நிகர சொத்து மதிப்பு வைத்துள்ள தனிநபர்களின் எண்ணிக்கை, இப்படித் தயாரிக்கப்படும் பட்டியலுக்கு அதிக நிகர சொத்து மதிப்புள்ள தனிநபர்கள் பட்டியல் என்று பெயர். அப்படித் தயாரிக்கப்படும் பட்டியலில் இந்தியாவுக்கு ஒன்பதாவது இடம்.  5047400 என்ற தனிநபர்களின் எண்ணிக்கையுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

இந்தியாவில் மொத்தம் 20730 மல்ட்டி மில்லியனர்கள் உள்ளனர். அதிக மல்ட்டி மில்லியனர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு ஏழாவது இடம். 119 குடியுரிமை பெற்ற பில்லியனர்களை கொண்டுள்ள இந்தியா, அதிக பில்லியனர்களை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து மூன்றாம் இடத்தில் உள்ளது. ஒரு பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகக் கொண்டுள்ளவர்கள் பில்லியனர் என்று அழைக்கப்படுவர்.

 

Related Articles

தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதல் பத... கடந்த 2015ம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் 2016ம் ஆண்டு 73 நகரங்கள், 2017ஆம் ஆண்டு 434 நகரங்கள், 2018ஆம் ஆண்டு 4 ஆய...
செய்தி ஊடகங்களில் பணியாற்றுவது எவ்வளவு ச... 6 மெழுகுவர்த்திகள் என்கிற ஒரு படம். அந்த படத்தில் தன்னிடம் இருக்கும் உண்மைகளை எங்கே போய் சொல்வது என்று தெரியாமல் ஒரு ஜீவன் தவித்துக் கொண்டிருக்க அப்போ...
மூணாறு – தென்னகத்தின் காஷ்மீர்... மூணாறு, கேரள மாநிலத்தில் உள்ள அழகான மலைவாசஸ்தலம். கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் இருக்கும் இடம். மலையேறுதலுக்கும ஒரு அற்புதமான படம். இயற...
பாலகுமாரன் எழுதிய பாட்ஷா வசனங்கள்!... " மாட்ட விலை பேசி விக்குற மாதிரி மாப்பிளைய விலை பேசி விக்குறதுக்கு பேருதான் வரதட்சணை! " " கடன் வாங்கறதும் தப்பு... கடன் கொடுக்கறதும் தப்பு......

Be the first to comment on "பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம்"

Leave a comment

Your email address will not be published.


*