உங்கள் பகுதியில் இருக்கும் அரசுப்பள்ளி மற்றும் அரசு நூலகம் என்ன லட்சணத்தில் இருக்கிறது?

school library

பணம்கொடுத்து அரசுப்பணியில் சேருபவர்கள் எப்படி நேர்மையாக பணியாற்றுவார்கள்? என்று
மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, டிஇடி
போன்ற அரசுப்பணி தேர்வுகளில் பல ஆண்டுகளாக ஊழல் நடந்து வருகிறது. நூற்றுக்கு பத்து
சதவீதம் பேர் பணம்கொடுத்து அரசுப்பணி வாங்குபவர்களாக இருக்கிறார்கள். வேலை
வாங்குவதையே நேர்மையற்ற முறையில் செய்யும் இவர்கள் வேலையை எப்படி நேர்மையாக
செய்வார்கள். திறமைசாலிகள் அமர வேண்டிய இடத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்தி
சாதிப்பெருமையை பயன்படுத்தி அரசு வேலையை வாங்கும் நபர்களால் தான்
அரசுப்பொதுப்பணித்துறையில் அலட்சியம் நிரம்பி வழிகிறது.

இதுபோன்று அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு அலட்சியமாக பணியாற்றும்
பணியாட்கள் நிரம்பிய இடமாக இருக்கிறதா உங்கள் பகுதியில் இருக்கும் அரசுப்பள்ளி மற்றும்
அரசு நூலகம்? அதில் நம் கவனம் எந்தளவுக்கு இருக்கிறது? அது ஏன் மற்ற துறைகளைக்
காட்டிலும் அரசுப்பள்ளி மற்றும் அரசு நூலகத்தில் கவனம் செலுத்தவேண்டும்? என்பதை
பார்ப்போம்.

உங்கள் பகுதியில் இருக்கும் அரசுபள்ளிகள் அலட்சியமின்றி செயல்படுகிறதா என்பதை எப்படி
கணக்கிடலாம் என்றால் பின்வரும் கேள்விகளுக்கு நீங்கள் திருப்தியான பதில்கள் தந்தால் அந்த
அரசுப்பள்ளி ஓகே டைப். மாறாக எந்த கேள்விக்கும் திருப்தியான பதில் இல்லையென்றால் அந்த
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.

1. பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தொடக்கத்திலயே பஸ்பாஸ், சைக்கிள், லேப்டாப்
போன்றவற்றை வழங்கியிருக்கிறார்களா?

2. மாலை பள்ளி முடிந்ததும் அரசுப்பேருந்தில் பயணிக்க தயாராக இருக்கும் மாணவர்களை
ஏதேனும் ஒரு ஆசிரியர் பொறுப்பெடுத்து வரிசையில் நிற்க வைத்து வழிநடத்துகிறாரா?

3. பள்ளி சுற்றுச்சுவரில் அரசியல் விளம்பரங்கள், சினிமா விளம்பரங்கள் இன்னும் பிற
தேவையற்ற விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்படாமல் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா?

4. பள்ளி அருகே குப்பைக்குளங்கள் மற்றும் சாக்கடை நீர் தேங்கிடா வண்ணம்
பராமரிக்கப்படுகிறதா? அவற்றின் மூலமாக தொற்றுநோய்க்கிருமிகள் பரவா வண்ணம்
சுற்றுப்புறம் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா?

5. எல்லா பாடங்களுக்கும் ஒரே ஆசிரியர் என்றில்லாமல் அந்தந்த பாடங்களுக்கு முறையாகப்
பட்டம் பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா?

6. அந்த பள்ளியின் செயல்பாட்டினை பாராட்டும் வகையில் ஒரு முறையாவது பத்திரிக்கைகளில்
செய்தி வந்திருக்கிறதா? வருடந்தோறும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 90க்கும்
அதிகமாக இருக்கிறதா?

7. அன்றாடம் காலையில் பள்ளி துவங்குவதற்கு முன் வழிபாடு நடத்துகிறார்களா? NCC, ஸ்கௌட்,
இன்னும் பிற செயல்பாடுகள் முறையாக நடக்கிறதா? ஏதேனும் விளையாட்டுப் போட்டிகளில்
வென்றிருக்கிறார்களா?

8. பள்ளியில் பகுதிநேர அல்லது முழுநேர துப்புரவு பணியாளர்களை
நியமித்திருத்திருக்கிறார்களா?

இவையெல்லாம் அரசு ஆய்வாளர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் கட்டாயம் கவனிக்க வேண்டிய
விஷியம். இவற்றில் ஒன்று தவறினாலும் பொதுமக்கள் கேள்வி கேட்பதற்கு உரிமை இருக்கிறது.

அடுத்தது அரசு பொது நூலகத்தைப் பற்றி பார்ப்போம்.

1. ஒவ்வொரு அரசு நூலகமும் கட்டாயம் ஏதேனும் ஒரு அரசுப்பள்ளி அருகே இருக்க வேண்டும்.
மலம் கழிக்கும் மற்றும் மது அருந்தும் ஒதுக்குப்புறத்தில் அமைக்காமல் அரசுப்பள்ளி அருகே
அமைத்திருக்கிறார்களா?

2. ஒவ்வொரு மாவட்ட மைய நூலகத்திலும் அரசுப்பொதுப்பணி தேர்வுக்கான பயிற்சி மையம்
அமைத்திருக்க வேண்டும். உங்கள் நூலகத்தில் தொடங்கிவிட்டார்களா?

3. ஒரு சில மாவட்டங்களில் வாசகர் வட்டம் மற்றும் நூலகர் இணைந்து சனி, ஞாயிறுகளில்
இலவச ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்திவருகிறார்கள். உங்கள் பகுதியில் இது போன்று
ஏதேனும் இலவச வகுப்புகள் நடக்கிறதா?

3. கிளைநூலகம் மற்றும் மைய நூலகத்தில் வாசகர்கள் ஜெராக்ஸ் எடுப்பதற்காக ஜெராக்ஸ்
மிஷின் இருக்க வேண்டும். உங்கள் பகுதி நூலகத்தில் ஜெராக்ஸ் மிஷின்கள் வைத்துள்ளார்களா?

4. ஒரு சில மாவட்ட மைய நூலகங்களில் மாற்றுத்திறனாளிகள் மாடிகளில் ஏறுவதற்கு
சிரமப்படாமல் இருக்க லிப்ட் வசதி செய்திருக்கிறார்கள் மற்றும் ஆண் பெண் இருபாலருக்கும்
கழிவறை வசதி செய்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் மின்னிதழ்கள் படிக்கும் வகையில்
இண்டர்நெட் வசதி செய்திருக்கிறார்கள். உங்கள் மாவட்ட மைய நூலகத்தில் எப்படி?

உங்கள் பகுதியில் இருக்கும் அரசுபள்ளி மற்றும் அரசு நூலகம் இதுபோன்று இயங்கி வருகிறதா?
மேற்கண்ட கேள்விகளில் எதற்குமே உங்களால் திருப்தியான பதிலை அளிக்க முடியவில்லை
என்றால் அங்கு பணியாற்றும் அரசுப்பணியாளர்கள் நிச்சயமாக பணம் கொடுத்து வேலை
வாங்கியிருக்கிறார்கள் என்றே அர்த்தம். ஏனென்றால் தேர்வு எழுதி வேலை வாங்கியவர்கள் தான்
படிக்கும்போது பட்ட கஷ்டத்தை வேறு யாரும் அனுபவிக்கக்கூடாது என்று முடிந்த அளவுக்கு
தங்கள் பணியை மற்றவருக்கு பயனுள்ளதாக செய்வார்கள். இனி உங்கள் பகுதியில் இருக்கும்
அரசுபள்ளி மற்றும் அரசு நூலகத்தின் மீது ஒரு கண்ணு வையுங்கள். ஒரு சோற்றுப்பானைக்கு ஒரு
சோறு பதம் என்பது போல, நீங்கள் வாழ்ந்து வரும் பகுதி எப்படிபட்டது என்பதை அரசுபள்ளி
மற்றும் அரசு நூலகம் காட்டிக்கொடுத்துவிடும்.

Related Articles

பெருமாள் முருகன் எழுதிய பீக்கதைகள் சிறுக... வேக்காடு, பீ வாங்கியின் ஓலம், பீ, கடைசி இருக்கை, கருப்பணார் கிணறு, அத்தை வீட்டுக் கோடை, தோழர் பிஎம்மின் வெற்றி, வராக அவதாரம், கருதாம்பாளை, சந்தனச் சோப...
பெண்களைப் போல ஆண்களுக்கும் ரத்தப்போக்கு ... யார் இந்த PADMAN? நம்நாட்டில் வெறும் 12% பெண்கள் மட்டுமே நாப்கின் பயன்படுத்துகின்றனர். 88 சதவீத பெண்கள் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாமல் தான் இருக்...
பல விருதுகள் வென்ற மூடர்கூடம் பட வசனங்கள... * வாழ்க்கையோட பெரும்பாலான விடியல் வழக்கமானதாவே இருக்கு... முழிச்சோம், குளிச்சோம், சாப்டோம், உழைச்சோம், உறங்குனோம்னு சக்கரம் சுத்திட்டு இருக்கு... இந்த...
அனிதா நினைவு நூலகம்: அடிக்கல் நாட்டினார்... ஏழை எளிய மாணவர்களை படிக்க வைப்பது, அவர்களின் இருதய சிகிச்சைக்கு தேவையான நிதி திரட்டி தருவது போன்ற அறச்செயல்கள் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பவர் ராகவா ல...

Be the first to comment on "உங்கள் பகுதியில் இருக்கும் அரசுப்பள்ளி மற்றும் அரசு நூலகம் என்ன லட்சணத்தில் இருக்கிறது?"

Leave a comment

Your email address will not be published.


*