“நம்மள மாதிரி பசங்களாம் ஒவ்வொரு வாட்டியும் ஜெயிக்கனும்” – நம்ம வீட்டுப் பிள்ளை விமர்சனம் !

Namma-Vettu-Pillai-Review-min

தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்

இசை : இமான்

எடிட்டிங் : ரூபன்

ஒளிப்பதிவு : நீரவ் ஷா

கதை திரைக்கதை வசனம் இயக்கம் : பாண்டியராஜ்

நடிகர்கள் : சிவகார்த்திகேயன், சூரி, யோகி பாபு, அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதி ராஜா, நட்டி நடராஜ், சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அர்ச்சனா

பாசமலர், முள்ளும் மலரும், தங்கைக்கோர் கீதம், என் தங்கை கல்யாணி, கிழக்குச்சீமையிலே, திருப்பாச்சி, சமுத்திரம்  போன்ற ஏராளமான அண்ணன் – தங்கை பாச கதைகள் வெளிவந்துவிட்டன. இந்தப் படங்கள் அனைத்துமே ஹிட். தற்போது இதே கதைக்களத்துடன் வெளியாகி இருக்கும் ” நம்ம வீட்டுப் பிள்ளை ” படம் எப்படி இருக்கு என்று பார்ப்போம். 

இமான் – சிவகார்த்திகேயன் கூட்டணி, இமான் – சூரி – சிவகார்த்திகேயன் கூட்டணி வெற்றிகரமான கூட்டணியாக இருந்து வருகிறது. இந்தப் படத்திலும் அது தொடர்ந்து உள்ளது என்றே கூற வேண்டும். அதே போல மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா என்று இரண்டு ஹிட் படங்களைத் தந்த பாண்டியராஜ் சிவகார்த்திகேயன் கூட்டணி இந்த முறை மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. 

எங்க அண்ணன், மைலாஞ்சி, உன் கூடவே பொறக்கனும், ஜிகிரி தோஸ்த்து, காந்த கண்ணழகி என்று படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. ஐந்து பாடல்களும் ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகி விட்டது. ஒரு நல்ல கமர்சியல் படத்தின் அடிப்படை பலமே பாடல்கள் தான். அந்த விதத்தில் நம்ம வீட்டுப் பிள்ளை படம் பாடல்களின் வழியாக ஏற்கனவே பாதி வெற்றியைப் பெற்றுவிட்டது. யுக பாரதி, விக்னேஷ் சிவன், அருண்ராஜா காமராஜ், சிவகார்த்திகேயன் ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர். அனைத்துப் பாடல்களும் பாடல் வரிகளும் நன்றாகவே உள்ளன. குறிப்பாக அனிருத் பாடிய காந்தக் கண்ணழகி, ஸ்ரேயா கோஷல் பாடிய மைலாஞ்சி, சித் ஸ்ரீராம் பாடிய உன் கூடவே பொறக்கனும் ஆகிய மூன்று பாடல்கள் கேட்க கேட்க இனிமையாக இருக்கின்றன. வெல்டன் இமான். பின்னணி இசையும் அருமை. குறிப்பாக ஹீரோயின் அறிமுகத்துக்கு வரும் பின்னணி இசை அருமை. 

சிவகார்த்திகேயன், சூரி, யோகி பாபு, அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதி ராஜா, நட்டி நடராஜ், சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அர்ச்சனா என்று பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி சிவகார்த்திகேயனுக்குத் தங்கச்சியாக நடிக்க ஒப்புக் கொண்டார் என்பது ஆச்சர்யத்துக்கு உரியதாகவே இருக்கிறது. நாயகியாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் எந்தக் கதாபாத்திரம் வேண்டுமானாலும் செய்வேன் என்ற ஐஸ்வர்யா ராஜேஷின் துணிச்சல் பாராட்டுக் குரியது. இவரை லேடி விஜயசேதுபதி என்றே கூற வேண்டும். இந்தப் படத்தில் அவர் கொஞ்சம் கூடுதல் அழகாக இருக்கிறார். 

சீமராஜா, மிஸ்டர் லோக்கல் ஆகிய இரண்டு படங்களும் சிகாவுக்குத் தோல்வியை தந்தன. எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தன்னை அறிமுகப் படுத்திய குருநாதரிடம் மீண்டும் சேர்ந்து பணியாற்றி உள்ளார். கடைக்குட்டி சிங்கம் மாதிரி குடும்ப படமாக எடுக்க வேண்டும் என்று சிகா சொன்னதால் அதற்குத் தகுந்தது போல ஒரு கூட்டுக் குடும்ப படத்தை இயக்கி உள்ளார் இயக்குனர் பாண்டியராஜ். கடைக்குட்டி சிங்கத்தில் விவசாயிகள் பிரச்சினையை அழுத்தமாகப் பேசியவர் இந்தப் படத்தில் என்ன பேசி உள்ளார், புதிய செய்தியை கொண்டு வந்திருக்கிறா அல்லது அடிச்சு துவைச்சு காயப் போட்டதையே மீண்டும் கொண்டு வந்துள்ளாரா குடும்ப படம் என்ற பெயரில் சீரியலை எடுத்து வைத்திருக்காரோ என்ற பதைபதைப்பு இருக்கவே செய்தது. 

” செய்ற வேல மேல பயம் இல்லன்னா வெற்றி மேல கவனம் இருக்காது”, “மாடி வீட்டு கடனும் தெரியாது கூரை வீட்டு பணம் தெரியாது”, ” கஷ்டப்பட்றதே சாப்டறதுக்குத் தானே… “, ” துளசி இருக்கற இடம் தான் நந்தவனம்”, ” முதலாளியா இருந்தா நல்லா வேல செய்ய தெரியனும் இல்லன்னா நல்லா வேல வாங்கவாவது தெரியனும்… “, ” பச்சை இங்க்ல கையெழுத்து போட்டா எப்டி இருக்கும்… ம்ம் பச்சை பச்சையா இருக்கும்… “, ” உன்ன நம்பித் தான் போரேன்… அப்ப நாசமாத்தான் போவ… “, ” பணம் கொஞ்சம் அதிகமா இருந்தா பாசமும் தூக்கலா இருக்கும்… “, ” பிரசவத்தப்ப பொண்டாட்டி கூட இல்லாம் வெளிநாட்டுல சம்பாதிச்சு என்ன பிரயோஜனம்… “, ” உண்மையா லவ் பண்றவன் யாருக்காகவும் எதுக்காகவும் அவள விட்டுக்குடுக்க மாட்டான்… “, ” நீங்களாம் பொத்தி பொத்தி வளக்கப்பட்டவங்க.., நாங்க அடிபட்டு அடிபட்டு வளந்தவங்க… “, ” விஷங்கொடுத்தே கொன்னவன பாத்துருப்ப… ஆனா வெல்லங் கொடுத்தே கொன்னவன பாத்துருக்க மாட்டல்ல… இனிமே பாப்ப… ”   பாண்டியராஜ் படம் என்றாலே வசனங்கள் ( பழமொழிகள், ரைமிங் வசனங்கள் ) தூக்கலாக இருக்கும். இந்தப் படத்திலும் அப்படித் தான் உள்ளது. 

அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அவருக்கு மூன்று மகன்கள் ஒரு மகள். வேலராம மூர்த்தி, சமுத்திரக்கனி மகன்களாக நடித்துள்ளனர். . அரும்பொன் கதாபாத்திரத்தில் சிகா. கபடி விளையாட்டு வீரராக அட்டகாசமாக அறிமுகமாகிறார். ஐய்யனாராக நட்டி நடராஜ். ஆடுகளம் நரேனுடன் சேர்ந்து வில்லத்தனத்துடன் அறிமுகமாகிறார். சதுரங்க வேட்டை படத்திற்குப் பிறகு பெயர் சொல்லும் படமாக இந்தப் படம் அமைந்துள்ளது நட்டிக்கு. சிகாவின் அறிமுகத்துக்கு எவ்வளவு விசில் பறந்ததோ அதைவிட அதிக விசில் வந்தது யோகி பாபுவின் அறிமுகத்துக்கு. சூரி, யோகி பாபுவை விட முந்திரிக் கொட்டையாக நடித்த சிறுவனின் ஒன்லைன் கவுண்டர்கள் அதிகம் பேரை சிரிக்க வைத்தன. ஒரு சில காட்சிகள் ரஜினி முருகன் படத்தை நினைவூட்டின. இன்னும் சொல்லப் போனால் ரஜினி முருகன் பார்ட் 2 பார்த்தது போல் இருந்தது. அருள்மொழிவர்மன், அரும்பொன், கொற்றவை, மாங்கனி என்று அழகான பெயர்களை கதாபாத்திரங்களுக்கு சூட்டி உள்ளார் இயக்குனர். நன்று! குடும்ப உறவு முறைகளை, சம்பரதாய சடங்குகளை, உணவு முறைகளை, இயற்கை மருத்துவத்தை எப்படி இவ்வளவு நுணுக்கமாககாட்டி உள்ளது படக் குழு. சண்டைக் காட்சிகள் சுமார். சலிப்பைத் தருகின்றன. இன்னும் கொஞ்சம் பெட்டராக சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கலாம். படம் ஆரம்பித்து ஒன்றரை மணி நேரம் கழித்து சமுத்திரக்கனி வருகிறார். தன் கடமையை செய்துள்ளார். ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் படத்திற்குப் பக்க பலம். சண்டைக் காட்சிகளை இன்னும் கொஞ்சம் கத்தரிச்சிருக்கலாம். 

படம் பொங்கலுக்கு அல்லது விஷேச தினங்களில் ரிலீசாகி இருந்தால் நல்ல கலெக்சனை அள்ளி இருக்கும். சீம ராஜா, மிஸ்டர் லோக்கல் பட தோல்விகளின் எஃபக்ட் இப்போதே தெரிய ஆரம்பித்து உள்ளது. வேலைக் காரன் பட ரிலீஸ் அன்று தியேட்டரில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒரு வாரத்திற்கும் மேல் காட்சிகள் ஹவுஸ்புல்லாக இருந்தன. ஆனால் நம்ம வீட்டுப் பிள்ளையின் ரிலீசில் எந்த ஒரு கொண்டாட்டமும் இல்லாமல் வெறிச்சோ என்று இருக்கிறது தியேட்டர். ஹீரோயிசத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் சிகா தொடர்ந்து நடிப்பதை நிறுத்திவிட்டு கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்ல கதைகளை வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முற்பட வேண்டும். இல்லையென்றால் திரும்பவும் விஜய் டீவி தான்! 

Related Articles

இதய நோய்களும் அதற்கான நவீன சிகிச்சைகளும்... இதயம் காக்கும் புதிய சிகிச்சைகள்! ஆண்டுதோறும் செப்டம்பர் 29ஆம் நாள் ' உலக இதய விழிப்புணர்வு நாள்'  எனக் கொண்டாடி வருகிறோம். காரணம் நம் உயிருக்கு பாது...
டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாமின் பொன்மொழிக... காலத்தின் மணற்பரப்பில் உன் காலடிச் சுவடுகளை பதிக்க விரும்பினால் உனது கால்களை இழுத்து இழுத்து நடக்காதே. நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம் நேர...
“நாயா அலஞ்சு நாய கண்டுபிடிச்ச தரன்... இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 2018ம் ஆண்டின் இறுதியில் வெளியான படம் அடங்க மறு. ஒரே நாளில் ஐந்து படங்கள் ரிலீஸ் ஆனதால் ...
கடன் மீட்பு முகவர்களால் டிராக்டர் ஏற்றிக... ஐந்து லட்சம் கடன் தொகைக்காக விவசாயி ஒருவரை டிராக்டர் ஏற்றிக் கொன்ற விவகாரம் உத்திர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடன் மீட்பு முகவர்க...

Be the first to comment on "“நம்மள மாதிரி பசங்களாம் ஒவ்வொரு வாட்டியும் ஜெயிக்கனும்” – நம்ம வீட்டுப் பிள்ளை விமர்சனம் !"

Leave a comment

Your email address will not be published.


*