மாவட்ட வாரியாக தமிழ் மற்றும் மலையாள எழுத்தாளர்கள் பட்டியல்! – ஒரு பார்வை!

Tamil and Malayalam writers in different districts of Tamil Nadu

தமிழகத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் உள்ளன. கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவற்றில் சில எழுத்தாளர்களையும் அவர்களின் சொந்த மண் பற்றியும் பார்ப்போம். பல தரப்பட்ட மாவட்டங்களின் மொழி உச்சரிப்பு, வாழ்வியல் முறை, விளையாட்டு, விவசாயம், தொழிற்சாலைகள், ஆறுகள், கடல்கள், மலைகள், கோயில்கள், போராட்டங்கள், வரலாறு போன்றவற்றை தெரிந்து கொள்ள, ஓரளவுக்கு இந்தப் பட்டியல் உதவும். உதாரணத்திற்கு இளம் எழுத்தாளர் ராம் தங்கம் அவர்களின் ” ஊர்ச் சுற்றிப் புராணம் ” என்ற புத்தகம் கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்புகளை விவரிக்கிறது. இது போன்ற ஊரை பற்றி பேசும் புத்தகங்கள் நிறைய உள்ளன. அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள கீழே குறிப்பிட்டுள்ள எழுத்தாளர்களின் புத்தகங்களை படிப்பது அவசியம்.

1.கன்னியாகுமரி (நாகர்கோவில்)

 1. சுந்தரராமசாமி (காலச்சுவடு பதிப்பகம்)
 2. ஜெயமோகன்
 3. பொன்றீலன்
 4. தோப்பில் முகமது மீரான்
 5. நீலா பத்மநாபன்
 6. நாஞ்சில் நாடன் (இப்போது கோவையில்)
 7. சாரு நிவேதிதா
 8. சா. கந்தசாமி
 9. ராம் தங்கம்

2. திருநெல்வேலி, தூத்துக்குடி (நெல்லை)

 1. ஆதவன்
 2. கி.ராஜநாராயணன்
 3. ராபி சேதுப்பிள்ளை
 4. ஜெயமோகன்
 5. மீனாட்சிபுரம் சோமசுந்தரம்
 6. புதுமை பித்தன்
 7. கழனியூரான்
 8. கு.அழகிரிசாமி
 9. டி.செல்வராஜ்
 10. வண்ணநிலவன்
 11. வண்ணதாசன்
 12. ஜோ டிகுரூஸ்
 13. புத்தனேரி ரா.சுப்பிரமணியன்
 14. ம.லெ.தங்கப்பா
 15. ஆதவன் சுந்தரம்
 16. ராஜவல்லிபுரம் வல்லிக்கண்ணன்
 17. சு.சமுத்திரம்
 18. நெல்லை க.பேரன்
 19. தளவாய்ச்சுந்தரம்
 20. கோணங்கி
 21. சோ. தர்மன்
 22. பூமணி

3. இராமநாதபுரம்

 1. கந்தர்வன்
 2. இன்குலாப்
 3. வேல ராமமூர்த்தி

4. விருதுநகர்

 1. மேலாண்மை பொன்னுச்சாமி
 2. எஸ்.ராமகிருஷ்ணன் (தேசாந்தரி பதிப்பகம்)
 3. மாலன்
 4. நா. பார்த்தசாரதி
 5. தமிழச்சி தங்கபாண்டியன் (சுமதி)

5. சிவகங்கை

 1. கண்ணதாசன்
 2. உத்தமசோழன்(அ.செல்வராஜ்)
 3. இரா. முருகன்

6. தஞ்சாவூர்

 1. இந்திரா பார்த்தசாரதி
 2. ந.முத்துசாமி
 3. பாலகுமாரன்
 4. தி.ஜானகிராமன்
 5. யுகபாரதி
 6. மாயாவி
 7. கரந்தை ஜெயக்குமார்
 8. ரா. கி. ரங்கராஜன்
 9. கு.ப.ராசகோபாலன்

7. புதுச்சேரி

 1. பிரபஞ்சன்
 2. லெனின் தங்கப்பா

8. ஈரோடு

 1. வாமு கோமு
 2. ஈரோடு தமிழன்பன்
 3. எஸ்.ஆர். சுப்பிரமணியன்

9. மதுரை

 1. சு.வெங்கடேசன்
 2. கவிக்கோ அப்துல் ரகுமான்

10. கோவை

 1. சிற்பி பாலசுப்பிரமணியம்
 2. ஞானி
 3. ராஜேஷ்குமார்

11. கடலூர்

 1. ஜெயகாந்தன்
 2. இமயம்
 3. மா.நன்னன்
 4. கண்மணி குணசேகரன்

12. திருச்சி

 1. மனுஷ்யபுத்திரன் (உயிர்மை பதிப்பகம்)
 2. ராஜம் கிருஷ்ணன்

13. சென்னை

 1. புதுமைப்பித்தன்(திருநெல்வேலி கதைக்களம்)
 2. அசோகமித்திரன்(பிறப்பு ஆந்திராபாத்தில்)
 3. சுஜாதா
 4. சிவசங்கரி

14. திண்டுக்கல்

 1. மா.கமலவேலன்

15. நாமக்கல்

 1. கு.சின்னப்ப பாரதி (பரமத்தி)
 2. பெருமாள் முருகன் (திருச்செங்கோடு)

16. கரூர்

 1. வா.செ.குழந்தைசாமி
 2. புலியூர் முருகேசன்

17. திருப்பூர்

 1. ஆர்.சண்முகசுந்தரம்
 2. சுப்ரமணியபாரதியன்
 3. க.சீ. சிவக்குமார்

18. காஞ்சிபுரம்

 1. தமிழ்மகன்
 2. ஞாநி

19. விழுப்புரம்

 1. மனுஷி பாரதி

20. திருவாரூர்

 1. க.நா. சுப்ரமணியம்

21. திருவண்ணாமலை

 1. பவா செல்லத்துரை (வம்சி பதிப்பகம்)
 2. கே. வி. ஜெயஸ்ரீ (மொழிபெயர்ப்பாளர்)
 3. ஷைலஜா (மொழிபெயர்ப்பாளர்)

22. புதுக்கோட்டை

 1. அகிலன்
 2. வி. கிருஷ்ணமூர்த்தி
 3. துரை குணா

23. தேனி

 1. சி.சு.செல்லப்பா
 2. வைரமுத்து
 3. மு.மேத்தா
 4. ம.காமுத்துரை

24. வேலூர்

 1. சாவி

25. கிருஷ்ணகிரி

 1. இரா. பெருமாள் ராசு
 2. எழில் வரதன் (ஓசூர்)

26. சேலம்

 1. தமிழ்நாடன்

27. தர்மபுரி

 1. ஜி. திலகவதி

28. மலையாள எழுத்தாளர்கள்

 1. தகழி
 2. பொன்குன்னம் வர்க்கி
 3. மாதவிக்குட்டி
 4. எ.என்.தேவகி
 5. எம்.டி.வாசுதேவன் நாயர்
 6. சாரா ஜோசப்
 7. சத்ருக்கனன்
 8. சி.சந்திரமதி
 9. பி.பத்மராஜன்
 10. கிரேஸி
 11. என். பிரபாகரன்
 12. அஷிதா
 13. நாராயன்
 14. பி. வத்சலா
 15. இ.பி.ஸ்ரீகுமார்
 16. சி.ஸ்ரீபிரசாத்
 17. மானஸி
 18. புனத்தில் குஞ்ஞப்துல்லா
 19. என்.எஸ்.மாதவன்
 20. மனோஜ் குரூர்

Related Articles

பிரதமர் மோடிக்கு பிரபலங்கள் எழுதிய கடிதம... இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், நடிகை ரேவதி, நடிகையும்  இயக்குநருமான அபர்ணா சென் உள்ளிட்ட 49 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு இப்பட...
எழுத்தாளர் லட்சுமண பெருமாள் எழுதிய சிறுக... நாளைய இயக்குனர் சீசன் 6ல் வெளியான குறும்படம் தான் பேசாத பேச்செல்லாம். சிறுகதையை தழுவிய குறும்படங்கள் பிரிவில் இயக்குனர் ஜெய் லட்சுமி இயக்கத்தில் வெளிய...
பல விருதுகள் வென்ற மூடர்கூடம் பட வசனங்கள... * வாழ்க்கையோட பெரும்பாலான விடியல் வழக்கமானதாவே இருக்கு... முழிச்சோம், குளிச்சோம், சாப்டோம், உழைச்சோம், உறங்குனோம்னு சக்கரம் சுத்திட்டு இருக்கு... இந்த...
மார்ச் 8 – 5 years of நிமிர்ந்து ந... * "சிலையும் நீயே சிற்பியும் நீயே, உன்னை நீ சரிசெய்துகொள்... உலகம் தானாக சரியாகி விடும்... " * " ஒழுக்கம், உண்மை, நேர்மை, பெரியவங்கள மதிக்...

Be the first to comment on "மாவட்ட வாரியாக தமிழ் மற்றும் மலையாள எழுத்தாளர்கள் பட்டியல்! – ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*