திருடர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விஜய், அஜித் இயக்குனர் சுசூந்திரனுக்கு வாய்ப்பு தர மறுப்பது ஏன்?

Vijay and Ajith give Opportunity to Thieves

வெண்ணிலா கபடி குழு என்ற  படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த மிக முக்கியமான
படைப்பாளி, இயக்குனர் சுசூந்திரன். வெண்ணிலா கபடி குழுவைத் தொடர்ந்து எழுத்தாளர்
பாஸ்கர் சக்தியின் எழுத்தை அழகர்சாமியின் குதிரை என்ற படமாக எடுத்து அதன் மூலம் தேசிய
அளவில் கவனம் பெற்றார்.

இவனெல்லாம் ஹீரோவாட என்று அந்தப் படம் ரிலீசான சமயத்தில் நடிகர் அப்புக்குட்டியை
விமர்சிக்காத ஆட்களே இல்லை என்று தான் கூற வேண்டும். அப்படி இருந்தும் சிறந்த
நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார் அப்புக்குட்டி. இது போன்ற காரியங்கள் எல்லாம்
தமிழ்சினிமாவில் மிக அபூர்வமாக நடக்கின்ற செயல்.

அடுத்ததாக நான் மகான் அல்ல என்ற கமர்சியல் படத்தின் மூலம் என்னால் எப்படியும் படம்
இயக்க முடியும் என்பதை நிரூபித்தார். ஹீரோவை வைத்து படம் எடுத்த பின்னாடியே அறிமுக
நடிகர்களை வைத்து ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தை எடுத்து அனைவரையும் கண்
கலங்க வைத்தார்.

இந்திய கிரிக்கெட் தேர்வு கமிட்டியில் நடக்கும் சாதி அரசியலை நெற்றிப் பொட்டில் அடித்தது
போல் பட்டென்று உடைத்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு
அமர்ந்திருந்தவர் மாவீரன் கிட்டு என்ற படத்தை எடுத்து இந்தாளு எப்படி இப்படி எதையும்
யோசிக்காம சட்டு சட்டுனு படம் எடுக்குறாப்ள என்று வியக்க வைத்தார்.

அதே போல் விஷால் என்ற பெரிய நடிகரை வைத்து பாண்டிய நாடு, பாயும் புலி என்று மீடியம்
ஹிட் கொடுத்தவர். அதே சமயம் இடையில் பெரிய நடிகருடன் கூட்டணி வைத்து லேசாக
சறுக்கியவர் இப்போது மீண்டும் சறுக்கல் பாதையில் செல்கிறாரோ என்று தோன்றுகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நெஞ்சில் துணிவிருந்தால் படம் ரசிகர்களுக்கு பெரிய அதிருப்தியை
கொடுத்தது. இப்போது ஜீனியஸ் படமும் அந்த வரிசையில் இணைந்துவிட்டதோ என்ற பயம்
நமக்குள் எழுகிறது.

ஏன் இவ்வளவு அவசரம் சுசூந்திரனுக்கு? ஏஞ்சலினாவையும், சாம்பியனையும், கென்னடி
கிளப்பையும் நினைக்கும் போது லேசாக பயம் வருகிறது. இடைவெளியே இல்லாமல் படம்
எடுப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக சுசூந்திரன் தேய்ந்து வருகிறாரோ என்ற அச்சம் எழுகிறது.

விஜய், அஜித்தை சுற்றி இருக்கும் திருடர்கள்:

விஜய், அஜித்தையே சில தலைகள் எப்போதும் சுற்றிக்கொண்டு இருப்பது எதற்காக? நலம்
விரும்பிகளா? ஹாஹா சத்தியமாக இல்லை. அப்புறம் வேறு எதற்காக? எல்லாம் பணத்திற்காக
தான். விஜயும், அஜித்தும் எதோ தங்களுக்கு இருக்கும் நடிப்புத் திறமையை வைத்து சம்பாதித்த
ரசிகர் பட்டாளத்தை சில தலைகள் தங்களுக்கு சாதகமானதாக பயன்படுத்த வேண்டும் என்ற
அல்பத்தனம் தான் அவர்கள் காலை சுற்றிக்கொண்டே இருக்க காரணம்.

விஜய், அஜித் போன்றோருடன் நல்ல இயக்குனர்களால் பணிபுரிய முடிவதில்லை அவர்களை
சுற்றி எப்போதும் ஒரு வளையம் இருக்கிறது அதை தாண்டி செல்வது மிக கடினமாக இருக்கிறது
என்று பல இயக்குனர்கள் சொல்ல தயங்குவதை பல மேடைகளில் பட்டென்று
உடைத்திருக்கிறார். ஆனால் அவருடைய ஆதங்கத்தை பெரிய தலைகள் கண்டு கொண்டதாக
தெரியவில்லை.

சொன்ன நேரத்தில் சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்து கொடுக்கும் திறமை இருந்தும் பெரிய
நடிகர்கள் அவரை புறக்கணிப்பது ஏனோ? விக்ரமை வைத்து எடுத்த படம் சறுக்கிவிட்டது
என்பதால் பெரிய நடிகர்களுக்கும் அவருக்கும் ஆகாது என்பது எந்த விதத்தில் நியாயம்?

நிறைய நல்ல விஷியங்களை தன்னுடைய படத்தின் மூலமாக சொல்கிறார் சுசூந்திரன். ஆனால்
அது பெரிய அளவில் சென்று ரீச்சாகாமல் இருப்பது வருத்ததிற்குரியது. காரணம் பெரிய நடிகர்
பட்டாளமும் பப்ளிசிட்டியும் இல்லை என்பது.

பெரிய நடிகர்களுடன் இணைந்து பணிபுரிய வாய்ப்பு கிடைத்தால் திருட்டு இயக்குனர்கள்
(கண்டிப்பாக ஏ.ஆர்.முருகதாஸ் இந்த லிஸ்டில் இல்லை, உண்மை தாமதமாகப் புரியும்)
ஒழிக்கப்படுவார்கள். எழுத்தாளர்களுக்கு வசன கர்த்தாக்களுக்கு வெற்றியில் பங்கு கொடுக்கும்
சுசூந்திரன் போன்ற உண்மையான படைப்பாளிகளை, ஒரிஜினல் ஸ்டோரி ரைட்டர்களை விஜய்,
அஜித் மறுப்பது ஏன்?

இவர்கள் ஏன் இன்னும் பணியாற்றிய இயக்குனர்களுடனே தொடர்ந்து பணியாற்றி அரைத்த
மாவை அரைத்து பல நல்ல சிறிய திரைப்படங்களை சாகடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இங்கு நல்லவனைக் காட்டிலும் திருடனுக்குத் தான் அதிகம் மதிப்பு என்பது உண்மை தான்
போல.

பாராட்டுக்கு உரிய மலையாள சினிமா:

இப்படி பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் கிறுக்குத் தனம் செய்வதால் தான் இன்னமும்
உருப்படாத கழுதையாக தமிழ் சினிமா பார்க்கப்படுகிறது. மலையாளத்தில் இருக்கும் நடிகர்கள்
நம்மிடம் இருந்து பெரிய அளவில் விலகி நிற்கிறார்கள் என்றே கூற வேண்டும்.

அவர்கள் கதைக்கும், திறமைக்கும், சினிமாவுக்கும் மரியாதை தருவதால் தான் அங்கு நல்ல
படங்களாக குவிகிறது. அது ஒருபுறம் இருக்க சம்பளம் ரொம்ப பெரிய வித்தியாசத்தை தமிழ்
சினிமாவுக்கும் மலையாள சினிமாவுக்கும் வித்தியாசத்தை உருவாக்கி உள்ளது. அதனால் தான்
விஜயை அஜித்தை வைத்து இயக்குனர் ராமால் படம் எடுக்க முடியவில்லை. ஆனால்
மம்முட்டியுடன் படம் எடுக்க முடிகிறது. இந்த விதத்தில் தமிழ் நடிகர் தனுஷை பாராட்டலாம்.
மற்ற பெரிய நடிகர்கள் மாறுவார்களா?

Related Articles

இந்த உலகத்திற்குப் புதிதாக வரும் குழந்தை... முதலில் குழந்தைகளின் பிறப்பை மிக உணர்ச்சி பூர்வமாக அழகாக காட்டிய தமிழ் சினிமாக்களை படைப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.  எம். எஸ். தோனி:  மகேந்திர சிங் ...
சூர்யாவின் “அகரம் அறக்கட்டளை”... கடந்த 2017 ஆம்  ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு குறித்த  சர்ச்சைகள் விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு வருட...
நீ Bad – u ! நா Dad – u ! தன... மாபெரும் வெற்றி பெற்ற படம் வேலையில்லா பட்டதாரி. அதன் இரண்டாம் பாகமே கவிழ்ந்துவிட ஓடாத மாரி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி ரிலீஸ் வரை வந்துவிட...
நகரத்துப் பேத்திக்கும் கிராமத்து பாட்டிக... நகரத்துப் பேத்திக்கும் கிராமத்து பாட்டிக்கும் இடையேயான மோதலும் காதலும்! - செத்தும் ஆயிரம் பொன் படம் ஒரு பார்வை! தமிழ் சினிமா விமர்சகர்கள் எல்லோரும...

Be the first to comment on "திருடர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விஜய், அஜித் இயக்குனர் சுசூந்திரனுக்கு வாய்ப்பு தர மறுப்பது ஏன்?"

Leave a comment

Your email address will not be published.


*