01-04-2020 முதல் பிஎஸ்6 வகை வாகனங்கள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்!

01-04-2020 முதல் பிஎஸ்6 வகை வாகனங்கள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்!

தற்போது பயன்பாட்டில் இருக்கும் பி. எஸ். 4 வகை வாகன உற்பத்திக்கும் விற்பனைக்கும்
காலக்கெடு விதித்து உள்ளது உச்ச நீதிமன்றம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதாவது வருகிற ஏப்ரல்(2017) ஒன்று முதல் பி.எஸ். 3 வகை
வாகன உற்பத்தியும் விற்பனையும் தடை செய்யப்பட்டு பி.எஸ். 4 வகை வாகன உற்பத்திக்கும்
விற்பனைக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப் படுகிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தற்போது பி.எஸ். 4 வகைக்கும் காலக்கெடு விதித்து 2020 முதல் பி.எஸ். 6 வகையை பின்பற்ற
வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பிஎஸ் என்றால் என்ன?

காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் வாகன பயன்பாடு என்பதால் உலகில் உள்ள அனைத்து
நாடுகளும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையின்
அளவை கட்டுப்படுத்தும் வகையில் வாகன தயாரிப்பு மற்றும் எரிபொருள் தயாரிப்பில்
வாகனங்கள் பதிவு செய்வதில் சில விதிகளை கடைபிடிக்கின்றன.

அதைப் போலவே இந்தியாவிலும் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று பாரத் ஸ்டேஜ் என்ற
அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலம் வாகனங்களில் இருந்து வெளியேற்றும் புகையின்
அளவை பரிசோதிக்க, அவற்றில் உள்ள நச்சை கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகளை
உருவாக்கி கடைபிடித்து வருகிறது.

பிஎஸ் 3 :

பிஎஸ்3 என்ற விதிமுறை முதலில் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் 2016ம் ஆண்டு பிஎஸ் 3 என்ற
விதிமுறையைப் பின்பற்றும் வாகனங்களால் நம் நாட்டில் மாசு அதிக அளவில் இருக்கிறது
என்றும் பின் வரும் 10 ஆண்டுகளுக்குள் இதை குறைக்கவில்லை எனில் வருகின்ற 10
ஆண்டுகளில் இந்திய சுற்றுச்சூழல் மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்படும் என்று அறிக்கை
வெளியானது.

பிஎஸ் 4 :

பி.எஸ்.3 எஞ்சின்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கும் பி.எஸ்.4 எஞ்சின்கள் பொருத்தப்பட்ட
வாகனங்களுக்கும் புகை கக்கும் குழாய்களில் தான் வேறுபாடு உள்ளது. பி.எஸ். 3 எஞ்சின் உள்ள
வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையைத் தடுக்க பி.எஸ். 4 ல் இருப்பது போல
பெரியளவிலான வினை ஊக்கிகள் இல்லை.

அந்த விதத்தில் பிஎஸ் 3 ன் விளைவு மோசமானது என்பதால் கடந்த (2017) ஏப்ரல் 1 ம் தேதியில்
இருந்து பிஎஸ்3 சார்ந்த வாகனங்களை தடை செய்து பிஎஸ் 4 விதிமுறைகளை பின்பற்றப்பட
வேண்டும் எனவும் அந்தக் கட்டுப்பாடுகள் 2020 வரை மட்டுமே பின்பற்றப்பட வேண்டும் எனவும்
அறிவித்தது.

பிஎஸ் 5 மற்றும் பிஎஸ் 6

2020ம் ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி முதல் பிஎஸ் 4 லிருந்து பிஎஸ் 5 க்கு தாவாமல் பிஎஸ் 4 லிருந்து
நேரடியாக பிஎஸ் 6 விதிமுறைகளைப் பின்பற்றப்பட வேண்டும் என அறிவித்து உள்ளது.
இதனால் காற்று மாசுபாடை கட்டுப்படுத்த முடியும் என கருதி மத்திய அரச இந்த முடிவை எடுத்து
உள்ளது.

வாகன உற்பத்திக்கு மட்டும் பிஎஸ் 6 விதிமுறையை கட்டுப்படுத்தாமல் எரிபொருள்
உற்பத்தியிலும் ( எரிபொருளுக்கான ஆக்டேன் அளவு இதில் உயர்த்தப்படும் என்பது
குறிப்பிடத்தக்கது) இந்த விதியைப் பின்பற்றப் பட வேண்டும் என்று அறிவித்து உள்ளது.

Related Articles

கமல் – கலையும் கலைசார்ந்த இடமும்! ... காதலா காதலாஇயக்கம்: சிங்கீதம் சீனிவாசராவ்நடிகர்கள்: கமல், பிரபுதேவா(ஓவியர்), ரம்பா & சௌந்தர்யா(ஓவியக்கல்லூரி மாணவிகள்)கதை: ஒரு பொய் பல...
விஜய் ரஜினிக்கு நோ சொல்லி கமலுக்கு ஆதரவு... கமல், ரஜினி வருகையைத் தொடர்ந்து அடுத்தது தளபதி விஜய்யும் அரசியலுக்கு வர இருக்கிறார் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அதற்குத் தகுந்தாற்போல் விஜயின்...
சு. தமிழ்ச்செல்வியின் “கண்ணகி̶... சற்றுப் பொறுமையாகப் படிக்கவும். எழுத்தாளர் சு. தமிழ்ச்செல்வியின் கண்ணகி நாவல் கொண்டுள்ள கதையை முதலில் இங்கு சுருக்கமாக காண்போம்.லஞ்சங்களும் அதிகா...
சென்னை டூ சேலம் பசுமை விரைவு எட்டு வழிச்... சென்னை டூ சேலம் பசுமை விரைவு எட்டு வழிச்சாலை திட்டத்தில் மறைந்திருக்கும் அரசியல் பற்றிய விவாதம் இப்போது நடந்து வருகிறது. இது மக்களுக்கான திட்டம் மக்கள...

Be the first to comment on "01-04-2020 முதல் பிஎஸ்6 வகை வாகனங்கள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்!"

Leave a comment

Your email address will not be published.


*