தோசைல சாதி இருக்கு!  – வே. மதிமாறன் பேச்சை கலாய்த்த நெட்டிசன்களும் உண்மையும்!

தோசைல சாதி இருக்கு! - வே. மதிமாறன் பேச்சை கலாய்த்த நெட்டிசன்களும் உண்மையும்!

தோசைல கல் இருக்கு! தோசை கல்லு மாதிரி இருக்கு! இப்படிபட்ட விமர்சனங்கள் தோசை மீது
இதுவரை இருந்திருக்கிறது. ஆனால் சாதாரண தோசையில் சாதி இருக்கு என்பது புதுசாகவும்
சிரிப்புமூட்டுவதாகவும் இருக்கு என்றும் போன வருசம் “அம்மா இட்லி சாப்டாங்களா” இந்த வருசத்துக்கு “சாதி தோசயா”என்றும் பெரியாரிஸ்ட் வே. மதிமாறனின் பேச்சை கலாய்த்து தள்ளுகிறார்கள் நெட்டிசன்கள்.

சீமானை மதிமாறனை கலாய்ப்பது:

கடந்த சில தினங்களுக்கு முன்பு சோழன் கடற்படை மூலமாக அறுபதாயிரம் யானைகளை
கொண்டு போர் புரிந்தான் என்று சீமான் கூறியதை சகட்டுமேனிக்கு கலாய்த்து தள்ளினர்
நெட்டிசன்கள். தற்போது பெரியாரிஸ்ட் வே. மதிமாறனை கலாய்க்க தொடங்கி இருக்கிறார்கள்.
காரணம் அவர் சொன்ன அந்த தோசையில் சாதி இருக்கு என்பது தான். சாதி ரீதியாக நம்முடைய
உணவு பழக்கங்கள் இருக்கிறது என்ற உண்மையை சொன்னது தான் காரணம். அவர் இன்று
நெட்டிசன்களிடம் வகையாக சிக்கிக் கொண்டார்.

சீமான், மதிமாறன் இவர்களை கலாய்க்கலாம், கலாய்க்க கூடாது என்பது ஒருபுறம் இருக்க
அவர்கள் சொன்ன எந்த கருத்தை கலாய்க்குறோம் என்பதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும்.
“சீமான் ஒரு அண்டப் புழுகன்” என்று சமூக வலை தளங்களில் சிலர் விமர்சிக்கின்றனர். அவர்
தற்போதைய அரசியல்வாதிகள் சொன்ன பொய்யைக் (வெளிநாட்டு டப்பிங்கும்,
உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன் என்ற பேச்சும்) காட்டிலும் கலாய்த்து தள்ளும் அளவுக்கு அப்படி
என்ன பொய் சொன்னார் என்பது தெரியவில்லை.

அவர் பிரபாகரனை சந்தித்தார் என்பது உண்மை என்பதை இயக்குனர் பாரதிராஜாவே ஒரு
நேர்காணலில் குறிப்பிட்டு இருக்கிறார். அப்படி இருந்தும் அவர் மீது இருக்கும் வெறுப்பு
உணர்வின் காரணமாக அவர் சொன்ன “கப்பலில் அறுபதாயிரம் யானை” என்ற தமிழனின் பெருமையை கலாய்த்தது தான் முட்டாள் தனம். அந்தக் கருத்தை கலாய்த்தது நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டதற்குச் சமம். இப்போது மதிமாறன் சொன்னதை கலாய்ப்பதும் அந்த ரகமே.

சாதி ரீதியாக உணவுப் பழக்கங்கள்:

மாட்டுக்கறிக்கு தடை விதிப்பது தவறானது என்று பலர் குரல் கொடுத்த நேரத்தில் " என் தட்டில் என்ன இருக்க வேண்டும் என்பதை அரசு சொல்ல கூடாது " என்றார் கமல். ஆனால் இங்கு யார்

யார் என்னென்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதில் கூட சாதி ஒடுக்குமுறை இருக்கிறது
என்பது தான் உண்மை.

மாட்டுக்கறி, பன்றிக்கறி சாப்பிடுபவனை ஐய ச்சி என்று ஒடுக்குவதும் மாட்டு நெய் ஊற்றி
சமைப்பவனை ஐயா கூப்டிங்களாங் என்று தலைக்கு மேல் வைத்து கொண்டாடுவதும்
உணவுப்பழக்கத்தை வைத்து நடத்தும் சாதி அரசியல் தானே.

ஐயர் வீட்டு சமையல்:

சாதி ரீதியான உணவுப் பழக்கங்களை பற்றி எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் ஐயர்
வீட்டையும் பூசாரி வீட்டையும் ஒப்பிடுவோம். ஐயர் வீட்டு பெண் சமைத்த தோசையையும் பூசாரி
வீட்டு பெண் சமைத்த தோசையையும் அருகருகே வைத்தால் நாம் ஐயர் வீட்டு தோசையை தான்
ருசித்து விரும்பி வியந்து சாப்பிடுகிறோம். அதற்கு மூன்று காரணங்கள் உண்டு. ஒன்று நெய்
அதிகமாக ஊற்றி கமகமவென தின்பதே தெரியாத அளவுக்கு நெவுநெவுன்னு இருக்கும் என்பது.
இன்னொன்று கைப்பக்குவமும் தயாரிக்கப்பட்ட முறை சுத்தபத்தமாகவும் இருக்கும் என்பது.
இன்னொன்று பெரிய வூட்டு சாப்பாடு எப்பவுமே நல்லா தரமானதா சுவையானதா இருக்கும்
என்ற மனநிலை.

மதிமாறன் சொன்னதில் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான ஒன்று “உயர்சாதி வீட்டுப் பையனை தாழ்ந்த சாதி பெண்ணுக்கு  சுமூகமாக திருமணம் செய்து வைத்தாலும் அவள் சமையல் கட்டில் அடையும் மன உளைச்சலும் அடையும் தாழ்வு மனப்பான்மையும் அலாதியானது” என்பதுதான்.

தாழ்ந்த சாதி வீட்டு படித்த பெண்கள் பல விஷியங்களில் சாதித்தாலும் உயர் சாதி
வீட்டுப்பையனை திருமணம் செய்து கொண்டு சமையல் அறையில் அடையும் மன உளைச்சல்
சொல்லி மாளாது. அவ்வளவு ஏன் பெண் வீட்டினரே பெண்ணின் அம்மாக்களே, நம்ம கை
பக்குவம் அவிங்களுக்கு புடிக்குதா? நீ தான் சமைக்கிறியா இல்ல எதாச்சும் நொன சொல்லிட்டு
அவிங்க வீட்டு ஆளுங்க தான் சமைக்குறாங்களா? போன்ற கேள்விகளை இன்றும் பல
பெண்களிடம் கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர். யார் என்ன சொன்னாலும் தோசைல சாதி இருக்கு என்பது தான் உண்மை!

Related Articles

கமல் – கலையும் கலைசார்ந்த இடமும் &... சட்டம்நடிப்பு : கமல்(போலீஸ்), சரத்பாபு(வக்கீல்), மாதவி(interior decration), ஒய்.ஜி. மகேந்திரன், மனோரமா மற்றும் பலர்.இயக்கம்: கே.விஜயன்இசை:...
கமல் – கலையும் கலை சார்ந்த இடமும் ... அவ்வை சண்முகிஇயக்கம்: கே.எஸ்.ரவிக்குமார்நடிகர்கள்: கமல்(அசிஸ்டன்ட் டான்ஸ் மாஸ்டர்), மீனா, ஜெமினி கணேசன், மணிவண்ணன்(முதலியார்), (பெரும்பாலான  க...
கமல் – கலையும் கலை சார்ந்த இடமும் ... பஞ்ச தந்திரம்இயக்கம்: கே. எஸ். ரவிக்குமார்கதை: கமல்வசனம்: கிரேசி மோகன்இசை: தேவாகதை: பிளேபாயாக சுற்றித்திரிந்த கமல் திருமணமான...
கமல் – கலையும் கலைசார்ந்த இடமும்! ... காதலா காதலாஇயக்கம்: சிங்கீதம் சீனிவாசராவ்நடிகர்கள்: கமல், பிரபுதேவா(ஓவியர்), ரம்பா & சௌந்தர்யா(ஓவியக்கல்லூரி மாணவிகள்)கதை: ஒரு பொய் பல...

Be the first to comment on "தோசைல சாதி இருக்கு!  – வே. மதிமாறன் பேச்சை கலாய்த்த நெட்டிசன்களும் உண்மையும்!"

Leave a comment

Your email address will not be published.


*