அக்டோபர் 31 சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு (தேசிய ஒற்றுமை தினம்)
இன்று அவருடைய சிலை திறப்பு விழா குஜராத்தில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் இந்த சிலை திறப்பு விழாவை விவசாயிகள் சங்கத்தினர் புறக்கணித்து உள்ளனர்.
பாரத பிரதமர் மோடியால் குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியா கிராமத்தில் நர்மதா அருகே
சர்தார் சரோவர் அணை என்ற இடத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை திறக்கப்பட்டு உள்ளது.
இந்த சிலை உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்று உள்ளது.
உலகின் மற்ற உயரமான சிலைகள்:
சீனாவில் உள்ள புத்தரின் ஸ்பிரிங் கோயில் 153 மீட்டர், மியான்மரின் லேகுன் செக்கியா 116
மீட்டர், ஜப்பான் உஷ்கு டேபட்சூ 110 மீட்டர், அமெரிக்கா சுதந்திர தேவி சிலை 97 மீட்டர்,
தாய்லாந்து தி கிரேட் புத்தா 91 மீட்டர், ரஷ்யா தாயகம் அழைக்கிறது சிலை 87 மீட்டர்.
182 மீட்டர்:
சர்தார் வல்லபாய் பட்டேலின் பெருமைகளைப் போற்றும் சிலை என்றும் 182 மீட்டர் உயரமுள்ள
உலகின் மிக நீளமான சிலை என்றும் படேல் சிலை தனிப் பெருமையை பெற்று உள்ளது. மேலும்
இந்த சிலைக்கு “ஒற்றுமையின் சிலை” என்று பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த சிலையின் முக்கிய அம்சங்களாக சர்தார் படேலின் வாழ்க்கை பற்றிய அருங்காட்சியகம்,
பாரத் பவண் கண்காட்சி அரங்கம், முப்பரிமாண காட்சி, 153 மீட்டர் உயரத்திலிருந்து இயற்கை
காட்சிகளை காண்பதை சுற்றுலாப் பயணிகள் விரும்புவார்கள், 250 கூடாரங்களுடன் கூடார
நகரம், பழங்குடியின அருங்காட்சியகம் கைவினைப் பொருட்கள் சந்தை, மலர்கள் பள்ளத்தாக்கு,
மாநிலங்கள் அமைக்கவுள்ள சொந்த விருந்தினர் விடுதிகள் போன்றவை அமைந்து உள்ளனர்.
விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்ட தலைவர்:
இந்திய சுதந்திர போராட்டத்தின் போது பெரும் பங்கு வகித்த தலைவர் சர்தார் வல்லபாய் படேல்.
சுதந்திர இந்தியாவின் சிற்பி என்றழைக்கும்படும் அவர் 550 க்கும் மேற்பட்ட மன்னர் ஆட்சி
சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியவர் என்றும் சர்தார்
வல்லபாய் படேலுக்கு சிலை வைக்கும் அளவுக்கு பல பெருமைகள் இருந்தாலும் விவசாயிகளின்
நலனுக்காக பாடுபட்ட தலைவர் என்ற பெயரும் இருக்கிறது. இந்நிலையில் அவருடைய சிலை
திறப்பு விழாவை விவசாயிகளே புறக்கணிக்கும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது மோடி அரசு.
75,000 மலைவாழ் மக்களை பாதிக்கும்படி 3000 கோடி ரூபாய் செலவில் 597 அடியில் திறந்து
வைக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கிறதா என்ன? இந்த சர்தார் வல்லபாய் பட்டேல் தான்
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்தார் என்பது மோடிக்கு தெரியுமா? என்று பல கேள்விகளை
மோடி அரசை நோக்கி சமூக ஆர்வலர்கள் எழுப்பி உள்ளனர்.
காசை கரியாக்கும் அரசு:
மக்கள் வரிப்பணத்தை எப்படி நாசம் செய்வது என்பதற்கு உதாரணமாய் இருந்து வருகிறது மோடி அரசு. அவ்வகையில் இந்திய விவசாயிகள் என்ன நிலைமையில் இருக்கிறார்கள்? எவ்வளவு மன உளைச்சலோடு இருக்கிறார்கள்? என்பது தற்போதைய மத்திய அரசுக்கு தெரியாமல் இல்லை. அப்படி இருந்தும் 3000 ம் கோடி ரூபாயை சிலை வைப்பதற்கு செலவிட்டு உள்ளது இந்த அரசு.
அடுத்தவரின் பெருமையை வைத்து பெருமை தேடுவது அரசியல்வாதிகளுக்கு பழக்கமான ஒன்று. அவ்வகையில் பாஜக ஆட்சி இன்னும் சில மாதங்களில் கேள்விக்குறியாகப் போகிறது என்பதால் இவ்வளவு செலவு செய்து நாங்கள் உலகமே வியக்கும்படி இப்படி ஒரு காரியம் செய்திருக்கிறோம் தெரியுமா? என்று சொல்லிக் காட்டுவதற்காகவே அதை வைத்து தேர்தலின் போது வாக்குப் பிச்சை எடுப்பதற்காகவே இது போன்று பெருமை தேடும் செயலில் இறங்கி வருகிறது என்று விவசாயிகள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து உள்ளனர்.
Be the first to comment on "சர்தார் வல்லபாய் படேல் சிலையும் விவசாயிகள் தற்கொலையும்! – ஆடம்பர மோடி அரசு"