அரசியல்வாதிகளின் கரங்கள் கறை படியாதிருத்தல் அறம். ஆனால் மற்றுமொரு அரசியல்வாதியின் கரங்களில் கறை பட்டிருக்கிறது. இம்முறை நேர்மறையாக. மத்திய பிரதேசம் ரேவா தொகுதி பாஜக எம்பி ஜனார்தன் மிஸ்ரா எந்தவொரு உபகரணங்களும் இல்லாமல் தனது தொகுதிக்கு உட்பட்டிருக்கும் பள்ளிக்கூடம் ஒன்றின் கழிப்பறையை சுத்தம் செய்துள்ளார். மண் அடைப்பால் பல நாட்கள் பயன்பாடின்றி இருந்த அந்தக் கழிப்பறையை ஜனார்தன் சுத்தம் செய்த காணொளி செய்தி ஊட்டங்களில் வெளிவந்து மிக வேகமாகப் பரவி வருகிறது. டிவிட்டரில் வெளியான சில மணி நேரங்களிலேயே 30000 பார்த்துள்ளனர், 3000 பேர் விருப்ப குறி இட்டிருக்கின்றனர் . 1600 முறை மறு ட்வீட் செய்யப்பட்டிருக்கிறது. பிரதமரின் ஸ்வச் பாரத் திட்டத்தின் தீவிர ஆதரவாளர் ஜனார்தன் மிஸ்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
வெறும் கையால் கழிப்பறையைச் சுத்தம் செய்த பாஜக எம்பி

February 20, 2018
Related Articles
ஐடி துறை பெண்கள் கலாச்சார சீரழிவுக்கு மு...
ஐடி துறையில் பணியாற்றும் பெண்களின் குறைகள் என்னென்ன என்று பார்த்தால் அதை இந்த பொது சமூகம் எண்ணிக்கையே இல்லாமல் தன் இஷ்டத்திற்கு அடுக்கிக் கொண்டே போகி...
அடுத்த பிரதமர் சீமான்! அடுத்த சிஎம் சிம்...
சிவனேன்னு சினிமாவில் இருந்த சீமானை வாங்கண்ணே... வாங்கண்ணே... என்று இழுத்து வந்து தொண்டை கிழிய பேச மேடை அமைத்து தந்து... இயக்கம் ஆரம்பிக்க வைத்து... அத...
விஸ்வரூபம் 2 படத்துக்கு வந்த புதிய பிரச்...
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த விஸ்வரூபம் முதல் பாகம் பலத்த எதிர்ப்புகளை சந்தித்தது. அதனால் கடும் மன உளைச்சலுக்கான கமல் இந்தியாவை விட்டு வெளியேறுவ...
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) 2018 ஐபிஎல் அணி...
வரிசை எண்
போட்டி எண்
தேதி
ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டிகள்
நேரம்
இடம்1
4
9-ஏப்ரல்
ஹைதராபாத் vs ராஜஸ்தான்
8:00 PM
ஹைதராபாத்
...
Be the first to comment on "வெறும் கையால் கழிப்பறையைச் சுத்தம் செய்த பாஜக எம்பி"