ஜெயமோகனுக்கும் சினிமாவுக்கும் ராசியில்லை – வயிற்றெரிச்சலில் சிலர்!

Jeyamohan has bad luck with the cinema

எழுத்தாளர் ஜெயமோகன் இந்தக் காலகட்டத்தின் மிக முக்கியமான எழுத்தாளர் என்பதும்
அவருடைய வாசகர் வட்டம் எப்படிபட்டது என்பதும் தீவிர புத்தக வாசிப்பாளர்களுக்குத் தெரிந்த
விஷியமே.

சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் சர்கார் படத்திற்கு
அவர் வசனம் எழுதியுள்ளார். ஏ. ஆர். முருகதாஸின் கதை விவகாரத்தில் தலையிட்டது முதல்
அவரைப் பற்றி பல விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆசான் என்று அழைக்கப்படும் ஜெயமோகன் இயக்குனர் பாலாவுடன் ” நான் கடவுள் ”
படத்திலும், இயக்குனர் மணிரத்னத்துடன் ” கடல் ” படத்திலும், இயக்குனர் வசந்த பாலனுடன்
“அங்காடித் தெரு” “அரவான்” படத்திலும், ஏ.ஆர்.முருகதாசுடன் “சர்கார்” படத்திலும், இயக்குனர்
ஷங்கருடன் ” 2.O ” படத்திலும், இயக்குனர் சாமியுடன் ” சிந்து சமவெளி ” படத்திலும் பணியாற்றி
இருக்கிறார். வசனம் எழுதுவது, திரைக்கதை உதவி என்று அவர் பணியாற்றிய படங்கள்
அனைத்துமே முக்கியமான படங்கள். ஆனால் அவற்றில் “அங்காடித் தெரு” மற்றும் ” நான் கடவுள்
” ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே நல்ல வரவேற்பை பெற்றது. கடல் படம் பலத்த அடியை
சந்தித்தது.

ஆனால் கடல் படத்தை இப்போது பார்த்தால் அந்தப் படம் பலருக்குப் பிடிக்க வாய்ப்பு
இருக்கிறது. கடலில் எடுக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் பிரமிக்க வைக்கும் வகையில் இருக்கும்
என்பதை இயக்குனர் வெற்றிமாறன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். அதே போல
தற்போது “சர்கார்” படமும் பல எதிர்ப்புகளை சந்தித்து வருவதால் எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் சினிமாவுக்கும் ராசியில்லை என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதே ராசியில்லாத ஜெயமோகன் தான் “நான் கடவுள்” படத்தில் பணியாற்றி இருக்கிறார்
என்பதையும் அந்தப் படம் தேசிய விருது வாங்கியது என்பதையும் விமர்சிப்பவர்கள் ஏனோ
மறந்துவிடுகிறார்கள். தன்னுடன் பணியாற்றும் எழுத்தாளருக்கு இயக்குனர் எவ்வளவு
முக்கியத்துவம் தருகிறார் என்பதை ஏனோ கவனிக்க மறந்துவிடுகிறார்கள். வாசிப்பு பழக்கம்
இல்லாத இயக்குனர்களுடன் பணியாற்றினால் ஜெயமோகன் மட்டுமல்ல எந்த எழுத்தாளருக்கும்
மரியாதையும் நிம்மதியும் கிடைக்கப் போவது இல்லை.

எழுத்தாளர் ஜெயமோகன் மீது தமிழின் மற்ற எழுத்தாளர்கள் உட்பட பலருக்கு ( சமீபத்தில்
எழுத்தாளர் ஷான் கருப்பசாமி எழுதிய வெட்டாட்டம் நாவல் குறித்து ஜெயமோகன் பேசியது
சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது ) தனிப்பட்ட முறையில் கருத்து முரண்பாடு

இருந்தாலும் ஒரே அடியாக ராசியில்லாத மனிதர் என்று சொல்வது எல்லாம் முட்டாள் தனமே
என்கின்றனர் ஜெயமோகனின் வாசகர்களில் சிலர்.

Related Articles

ரிமோட்டில் இயங்கப்போகிறது சென்னை மெட்ரோ ... சிறுவயதில் நாம் அனைவருமே பொம்மை கார வைத்து விளையாடியிருப்போம் அல்லவா, மிகவேகமாகக் காரை இழுத்து விட்டால் அது சுவரில் டம்மென்று இடித்து நிற்கும். பிறகு ...
கைது பண்ண வேண்டிய எஸ்வி சேகருக்குப் பாது... தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட அப்பாவி பொதுமக்களை வீடு தேடி சென்று கைது செய்தது காவல் துறை. ஆனால் நீதிமன்றங்கள் ...
ஹெச். வினோத்! – இவர் வெற்றிமாறனும்... வேலூர் மாவட்டத்தை சொந்த ஊராகக் கொண்ட இயக்குனர் ஹெச். வினோத், ஆரம்பகாலத்தில் ஆர். பார்த்திபனிடம் பச்சைகுதிரை என்ற படத்திலும், விஜய் மில்டனின் கோலி சோடா...
பள்ளிப்பருவத்தில் வருவது காதலா? வெறும் இ... 96 (Tamil Movie) IMBD Rating - 9.4/10இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிரு...

Be the first to comment on "ஜெயமோகனுக்கும் சினிமாவுக்கும் ராசியில்லை – வயிற்றெரிச்சலில் சிலர்!"

Leave a comment

Your email address will not be published.


*