சு. தமிழ்ச்செல்வியின் “கண்ணகி” நாவல் ஒரு பார்வை!

The vision of Kannagi novel by Su.tamilselvi

சற்றுப் பொறுமையாகப் படிக்கவும். எழுத்தாளர் சு. தமிழ்ச்செல்வியின் கண்ணகி நாவல் கொண்டுள்ள கதையை முதலில் இங்கு சுருக்கமாக காண்போம்.

லஞ்சங்களும் அதிகாரங்களும் தலைவிரித்தாடும் அரசு அலுவலகங்கள் நிறைந்த சாலை அது. அரசு விருந்தினர் “மாளிகை” உள்ள சாலையில் இளநீர் முதல் இறைச்சி வரை கூவிக்கூவி விற்கும் சிறுவியாபாரிகள். அவர்களில் ஒருத்தி தான் அதிகாலையிலயே தனது ஜொலிப்பான மீன் கடையை விரித்து திறமையான பேச்சுத்திறமையோடு வியாபாரம் செய்யும் கண்ணகி. உதாரணமாக ஒருகிலோ மீன் வாங்க வந்த வாத்தியாரை 2அரை கிலோ மீன் வாங்க வைத்தல்.  அவளிடம் வேலை செய்யும் (மீன் கழுவி அரிந்துபோடும்) நான்கு பெண்கள். நான்கு பெண்கள் கண்ணகியைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? இரவு சமைப்பதை மட்டுமே உண்டு வாழும் இந்த கண்ணகி யார்? எப்படி இவ்வளவு துணிச்சலான பெண்ணாக இருந்து வருகிறாள்? விரிகிறது ப்ளாஸ்பேக்!

சித்தேரிக்குப்பம் ஊர்த்தெருவை விட்டு ஒதுங்கி இருந்த காலனியில் வசித்து வந்தார் காசாம்பு. மாட்டுக்கறி கூறுபோட்டு விற்பவர். காசாம்புக்கு 3 பொண்டாட்டிகள், 17 மகன்கள், ஆசைக்கு ஒரேயொரு பெண். மகள் கசந்தாமணி மீது தனிப்பாசம். தன்னுடன் மாட்டுத் தரகு செய்யும் அஞ்சாம்புலிக்கு கட்டிக்கொடுத்தார். கொளப்பாக்கம் தான் அஞ்சாம்புலியின் சொந்த ஊர். திருமணம் ஆன பிறகு குடிசைபோட்டு வாழத்தொடங்குகிறார்கள். மாடு வாங்கி வளர்க்கிறார்கள். கண்ணகி பிறக்கிறாள். அவள்மீது காசாம்புக்குப் பாசம் அதிகமாகிறது.

தாத்தா காசாம்பு போட்டுத்தரும் மஞ்சள்தூள் போட்டு அவித்து தந்த கறியை வழிநெடுக தின்றுகொண்டே செல்லும் கண்ணகி… அவளை அடுத்து பிறக்கும் தம்பி…

தன் வீட்டிலிருந்து மறுபக்கம் உள்ள ஆற்றங்கரை பிள்ளையார் கோயில்… அதையடுத்து உள்ள ரைன்கர தெரு… இரவுநேர ரகசியம்… புஷ்பா அக்காவைப் பற்றிய ரகசியம் அறிய முற்படும் கண்ணகி…

பள்ளிக்கூடத்தில் கூரை இல்லை என்பதால் கோயிலில் பாடம் நடத்தும் முருகன் வாத்தியார்… பணிச்சுமையை முருகன் வாத்தியார் மேல் தள்ளிவிட்டுச் செல்லும் காமராசு வாத்தியார்… பொங்கல் வாங்கித் தின்று கோயிலுக்குள்ளயே இரவு முழுதூம் படுத்துக்கிடந்த கண்ணகி.., அதோடு அவளுடைய பள்ளிப்படிப்பை நிறுத்திய கசாந்தமணி…

பதினோரு வயதிலயே இருபது வயது தோற்றமளித்த கண்ணகியை அந்தப் பகுதி ஆண்களிடமிருந்து காப்பாற்ற தன் தந்தை காசாம்பு வீட்டிற்கு அனுப்புகிறாள். அங்கே அஞ்சாம்புலிக்கு சிநேகிதன் காசிக்குச் சொந்தக்காரனான ஆசைத்தம்பியுடன் கண்ணகிக்கு காதல் உண்டாகிறது. போஸ்ட்கம்பம் ஊன்றும் ஆசைத்தம்பியோடு ஓடிப்போகிறாள். அவளுக்கு ஆதரவு தருகிறார்கள் காசி மற்றும் சின்னவெடை தம்பதி.

வீட்டிற்கு வெளியே உள்ள சந்துபொந்துகளில் விடியவிடிய மேட்டர் செய்கிறான் ஆசைத்தம்பி… தாத்தா ஆயா என்று பலர் வந்து கண்ணகிக்கு புத்திமதி சொல்லி வீட்டிற்கு அழைத்துச் செல்ல முற்பட, அவள் மறுக்கிறாள். மாமன்களில் ஒருத்தன் சீக்கிரமே அரசு வேலை வாங்கிவிடுவான் அவனுக்கு உன்னைக் கட்டித் தருகிறேன் வா என்று அழைக்கிறார்கள் அவள் மறுக்கிறாள். பின்னாளில் ஆசைத்தம்பியின் புத்தி தெரிந்ததும் அதை நினைத்து வருந்துகிறாள்.

புளியந்தோப்புக்குப் பாதுகாப்பாக இருக்கும் கிழவன் அய்யாக்கண்ணு… அவனை ஏமாற்றி புளியங்காய் திருடி வரும் காலணி மக்கள்…

ஊரே காலராவுக்கு ஊசி போட இருந்த சமயத்தில் அய்யாக்கண்ணு தன் மனைவியை பாதுகாப்புக்கு நிறுத்திவிட்டு போய்விட அவளோ யார் வந்து பறிச்சிட போறாங்க என்று அலட்சியமாக ஊசி போட சென்றுவிட அந்தச் சமயத்தில் நாத்தனார் சகுந்தலாவுடன் புளி பறித்து புடவையில் முடிச்சுகட்டி பாவாடையை நெஞ்சுவரை தூக்கிக்கட்டி குளித்துவிட்டு துணி துவைத்து மூட்டைகட்டி வருவதுபோல் புளியை தலைக்குமேல் வைத்து யாருக்கும் சந்தேகம் வராதபடி ஊருக்குள் நுழைகிறார்கள். வேகவைத்து பத்திரப்படுத்தி வைக்கிறார்கள். மாமியார் நாகம்மாள் இவளுடைய வேலை செய்யும் திறமையைக் கண்டு வியந்து தன் வீட்டில் சேர்த்துக் கொள்கிறாள்.

தம்புசாமி கரும்பு விற்பனைக்கு பிள்ளைகள் தொல்லையில்லாத இரவில் சந்தைக்குச் செல்கிறார். அப்போது குளிருக்கு இதமாக இருக்க ஒரு கரும்பு கேட்கும் கிழவனை உதாசினப்படுத்திவிட்டு சந்தைக்குச் சென்றால் கரும்பு வாங்கும் அனைவரும் கரும்பு கசக்கிறது என்று சண்டைக்கு லர தம்புசாமி தன் தவறை உணர்ந்து கிழவனை தேடி வருகிறான். அவர் கருப்பசாமி என்று தெரியவர கரும்பால் பந்தல் போடுகிறேன் என்று வேண்டிக்கொள்கிறான். அன்று முதல் கருப்பசாமி கரும்பாயிரமாகிறது. அந்தச் சாமிக்கு மண்குதிரை வைத்து புல்லறுத்துப் போட்டு வேண்டிக்கொள்வார்கள். அடுத்தநாள் புல் சாணமாகி கிடக்கும். இதை சோதனை செய்ய திட்டம் தீட்டிய குழந்தைவேலுவும் சக்கரையும் குதிரை சத்தம் கேட்டு ஈட்டி எறிய ரத்தம் கக்கி சாகிறார்கள். அதனால் சாமியின் கோபம் தணிக்க அவன் உறவுகள் குதிரையை குலதெய்வமாய் படைக்க ஆரம்பித்தார்கள். அதனால் குதிரைக்காரன் வகையறா பெயர் பெற்றார்கள்.

பதினோரு நாள் திருவிழாவின் போது ஆசைத்தம்பி ஏழுமாத கண்ணகியை அடிக்கிறான். அவள் வீட்டிற்குள் உள்ள தூணைப் பிடித்தபடியே குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். குழந்தை இறக்கிறது. வெறிகொண்டு நிற்கும் கண்ணகியை பார்த்து ஊரே மிரள்கிறது. அவளை பாதுகாக்கிறாள் நாகம்மாள்.

சின்னவெடையுடன் நடவுநடப் போகிறாள். பண்ணக்காரிங்க வீட்டுல அடிமயா வேல செய்ய எனக்குப் பிடிக்காது என்ற சின்னவெடை மாமியாள் நாகம்மாள் பற்றி பழித்துப் பேசுகிறாள்.

பொட்டுக்கடலை பட்டாணி வாங்கிச் சாப்பிட பணம்கொடுக்கும் பழனிபடையாச்சி…

ஆசைத்தம்பி வேலைக்குப் போன ஊரில் இழுத்துவந்த சூடாமணி… என் புருசனை மடக்கப் பார்க்கிறாள் என்று கண்ணகியை வம்பு இழுக்கும் சூடாமணி… வாயை மூடிக்கொண்டு இருக்கும் நாகம்மா… நியாயம் கேட்கும் சின்னவெடை… அண்ணன் செய்த ஏமாற்று வேலையால் மனம் வருந்தும் சூடாமணி… இருந்தாலும் கண்ணகியிடம் அதிகாரம் செய்யும் சூடாமணி…

கண்ணகி ஒருவளே எல்லா வேளையும் இழுத்துப் போட்டு செய்ய சூடாமணி ஆசைத்தம்பியுடன் மினுக்கிக் கொண்டு சினிமாவிற்குப் போய் வருகிறாள். உலக்கையால் கம்பு குத்திக்கொண்டிருந்த கண்ணகி ஆத்திரத்தில் சூடாமணியைத் திட்ட சூடாமணிக்காக ஆசைத்தம்பி, உலக்கையால் 8 மாத கற்பிணி கண்ணகியை உலக்கையால் அடிக்கிறான். அடுத்தநாள் வயல்காட்டில் ஆண் குழந்தை பிறக்கிறது. இந்த முறையும் குழந்தை இறக்கிறது.

புருசனிடம் சண்டையிட்டு குழந்தைகளோடு ஊரைவிட்டு வந்த பெண் பாழாற்று ஓடையில் இறங்க வெள்ளத்தால் அம்மாவின் கண்முன்னே குழந்தைகள் இறந்துபோக அப்பெண் இட்ட சாபத்தால் அங்கு தண்ணீர் இல்லாமலே போய்விட்டது.

மதிய வேளையில் கருப்பசாமி கோயிலுக்கு தனியாகச் சென்று சோளக்காட்டில் கருது திருடி வந்த கதையை கூறும் கண்ணகி…

கரும்பசாமி அண்ணன்களின் கதை கூறும் சின்னவெடை… ஐப்பசி முததேதி மொதமுழுக்கு… 30ம் தேதி கடமுழுக்கு… கார்த்திகை 1 மொடவன் முழுக்கு…

சாதிய ஆதிக்கத்தைப் பற்றி… நிலம் இல்லாததைப் பற்றிக் கூறும் சின்னவெடை… கார்குடலில் எப்படியாவது நிலம் வாங்கவேண்டுமென்று திட்டமிடும் கண்ணகி…

பெரிய வூட்டுலருந்து சோறு வாங்கியேறேன் என்று சென்ற நாகம்மா… வரும்போது புளியங்காய் கொண்டுவர… வெகுண்டெழுந்து கண்ணகி அத்தனை இருட்டுக்குள் நெடுந்தூரம் சென்று கம்பு எடுத்துவந்து கொழுந்தன்களுக்கு ஆக்கிப் போடுதல்…

எட்டுக்கூட்டாளியைச் சார்ந்தவன் சகுந்தலாவை மணம்முறித்தல்… முறைசெய்யாமல் சும்மா வந்துசென்ற ஆசைத்தம்பி…

தன்னந்தனியாக காட்டுக்குள் சென்ற கண்ணகி… வயதானவரை பார்த்து மிரள்கிறாள்… மிளகாப் பூண்டு, ஜகன்நாதன் பூண்டு போல சித்தம் மழுங்கடிக்க வைக்கும் தெவப் பூண்டு மேலே நிக்க வைத்து தம் சித்தம் கலங்க வைத்து எதற்காவது பலி கொடுத்துவிடுவாரோ என்ற பயம் கொள்கிறாள்.., இறுதியாக இன்னொரு முதியவருடன் ஊருக்குள் நுழைகிறாள்…

புருசனுடன் சினிமாவுக்குச் சென்றதை சின்னவெடையிடம் கூறுகிறாள்… சூடாமணியின் தங்கச்சியும் தனக்குச் சக்காளத்தியாக வரப் போவதை கூறி வருந்துகிறாள்… கட்டிக்கிறேன் என்று சொன்ன சின்னமாமனிடம் சென்றுவிடலாமா என்று எண்ணுகிறாள்… பிள்ளை மேல் ஆசை இல்லை என்கிறாள்…

ஆசைத்தம்பி சூடாமணியின் தங்கை பச்சையம்மாளை கட்டிக்கொண்டான்.., சூடாமணியும் பச்சையம்மாளும் குடுமிப்பிடி சண்டைபோட… ஆசைத்தம்பி சிலநாட்கள் சிறுவரப்பூரில் குடித்தனம் நடத்துகிறான்…

சின்னதுரைக்கு கரும்பு எடுத்துக்கொடுக்கும் ஆளாக இருக்கும் கண்ணகி திடீரென ஒருநாள் தன் கொழுந்தனுடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறாள்… கொழுந்தன் பள்ளிக்குப் போக கண்ணகி தன் வீட்டுக்குச் செல்கிறாள்… கசந்தாமணி அவளை விரட்டியடிக்க…  பாண்டிச்சேரியில் வந்து இறங்குகிறாள்… எங்கே போவது என்ன செய்வது என்று தெரியவில்லை…

திவ்யநாதன் ஆதரவு கிடைக்கிறது… மாற்றுத்துணிகூட இல்லாதபோது உடுத்தியிருக்கும் துணியையே அட்ஜஸ்ட் செய்து காலத்தை தள்ளுகிறாள்… அக்கா மரியபுஷ்பம் உதவி கிடைக்கிறது… அவளிடம் மீன் பொட்டி தூக்கும் வேலை செய்கிறாள் கண்ணகி… திவ்யநாதனால் கற்பமாகிறாள்… பக்கத்து வீட்டு ராணி,  கற்பத்துக்கு யார் காரணம் எனக் கேட்டும் அவள் சொல்லவில்லை… மரியபுஷ்பத்தின் கணவர் அமுல்தாசு காரணமா என்கிறாள்… இல்லை என மறுக்கிறாள் கண்ணகி…

கவுர்மெண்ட் ஆஸ்பத்திரியில் படுக்க இடமெல்லாம் அலைந்து திரிந்து கடைசியாக கழிவறைக்குள் செல்கிறாள்… பனிக்குடம் உடைந்து பொளக்கென்று குழந்தை வெளியே வந்து விழுகிறது… அவள் நடந்துசெல்லும் இடமெல்லாம் ரத்தம்… நர்ஸ் கண்டபடி திட்டுகிறாள்… ராணி உதவியுடன் குழந்தையை காப்பகத்தில் சேர்த்து விடுகிறாள்…

வீட்டுவேலை என நினைத்து சிங்கப்பூருக்குச் செல்கிறாள்… அங்கே அன்சாருக்கு உதவியாளராக இருக்கிறாள்… நல்ல சம்பாதித்யம்… ஒருநாள் திடீரென வீட்டுக்கு கடிதம் எழுதுகிறாள்… தன் பிள்ளை பாரதியை எடுத்து வளர்க்கச் சொல்கிறாள்… கண்ணகி நல்ல பணம் சம்பாதிக்கிறாள் எனத் தெரிந்ததும் ஆசைத்தம்பி நைசாக அவர்களுடன் கூட்டு சேர்கிறான்…

சிங்கப்பூரிலிருந்து வருகிறாள்… தன் மகனுக்கு அன்சாரிடம் வேலை வாங்கித் தருகிறாள்… அன்சார் கண்ணகியுடனான உறவைப் பற்றி சொல்லிவிட பாரதிக்கு அம்மாவின் மீது வெறுப்பு ஏற்படுகிறது… சூடாமணியின் மகன் மகள்களுக்கு திருமண செலவுகளையும் ஆசைத்தம்பி கண்ணாகியிடம் இருந்தே வாங்கினான்… கடைசியாக ஆசைத்தம்பி படுக்கையில் விழ, கண்ணகி உரிமையோடு பார்த்துக்கொள்கிறாள்… சூடாமணியும் அவள் தங்கையும் வேலை மிச்சம் என்றிருக்க… அரசு தொகையை ஆசைத்தம்பி கண்ணகிக்கே கொடுக்க வேண்டும் என்று கையெழுத்து போடுகிறான்… இப்பொழுது சூடாமணி வெளுத்து வாங்குகிறாள்… சில நாட்களில் ஆசைத்தம்பி உயிரிழக்கிறான்… அனைத்திலும் தனது உரிமையை விட்டுக்கொடுக்காமல் கண்ணகி பங்கெடுக்கிறாள்…

மீன் வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பி தன் உடன்பணியாற்றும் பெண்களுடன் கதையடிக்கிறாள். அப்போது பாரதி வருகிறான்… இவ்வளவு நாள் கண்டுகொள்ளாத மகன் இப்போது வீடேறி வந்து பிள்ளைகளின் காதுகுத்துக்கு அழைக்கிறான்… அப்போது கண்ணாகிக்கு உற்சாகம் தாங்கவில்லை… அதே சமயம் அன்சார் சிங்கப்பூரிலிருந்து தன் குடும்பத்துடன் திருச்சிக்கு வர இருப்பதாக கூறுகிறான்… இரண்டும் ஒரு சமயத்தில்.., கண்ணகி எங்கே போவாள்… என்று உடன் பணியாற்றும் பெண்கள் குழப்பமடைய திடீரென்று புறப்பட்டு திருச்சி பஸ்ஸில் ஏறி அமர்ந்து அன்சாரைப் பார்க்கச் செல்கிறாள்…

எப்படி கதை? இன்னும் முழு புத்தகத்தையும் படித்தால் வியப்பில் மூழ்கிவிடுவீர்கள். அந்த அளவுக்கு நாவல் சடசடவென வேகமாக செல்கிறது. நாவலை படிக்கும் போது உங்களுக்கு இந்த கண்ணகியை பளார் என்று அறையத் தோன்றும், கட்டிப் பிடித்து அரவணைக்க தோன்றும் இப்படி பல உணர்வுகள் கண்ணகியை படிக்கும்போது நமக்கு ஏற்படும். பெண்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகங்களில் கண்டிப்பாக இந்தப் புத்தகம் இடம்பெறும்.  

Related Articles

தமிழ்பிரபாவின் “தெய்வத்தால் ஆகாதென... செருப்பு வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றும் இரண்டரை அடி உயரமுள்ள நாகேஷ்...க்ளவுனிங் டாக்டர் மாயா...தேசிய அமைப்பொன்றால்  அங்கீகரிக்கப்பட...
சமூக வலைதளங்களில் சாலை பாதுகாப்பு விழிப்... இளைஞர்களை கவரும் வகையில் சாலை விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் சின்ன சின்ன போஸ்டர்கள் தயார் செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறது குஜர...
கொள்ளையடிக்கும் போட்டித்தேர்வு பயிற்சி ம... தமிழகத்தில் பால்வாடி முதல் பட்டப்படிப்பு வரை அத்தனையும்  வியாபாரம் தான். பஸ் கண்டக்டர் டிக்கெட்டை தருவது போல பணத்தை வாங்கிக்கொண்டு சர்வ சாதாரணமாக டிகி...
தனியார் பள்ளிகளின் விளம்பர பதாகைகளில் மா... இந்த ஆண்டு முதல் மாணவ மாணவிகளின் புகைப்படங்களை  விளம்பரங்களுக்கு உபயோகிக்க கூடாது என்று தடை விதித்து உள்ளது தமிழகப் பள்ளிக் கல்வித்துறை. இது சமூக ஆர்வ...

Be the first to comment on "சு. தமிழ்ச்செல்வியின் “கண்ணகி” நாவல் ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*