அம்மாவையும் காதலியையும் அதிகம் நேசிக்க வைக்கும் படம்! -இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Ispade Rajavum Idhaya Raniyum movie review

யார அதிகம் நேசிக்கிறமோ அவிங்கள தான் அதிகம் வெறுக்கிறோம்… என்ற தத்துவத்துடன் தொடங்குகிறது படம்.  ஸ்டைலிசான லவ் படம்ங்கற பேருல என்னத்தயோ எடுத்து வச்சிருப்பானுங்க போல என்று நினைப்போடு திரைக்குள் அமர்ந்திருந்தால் உள்ளே சென்ற சில நொடிகளில் அந்த அலட்சியத்தை சுக்குநூறாக உடைத்து தள்ளி வாங்க எங்களோடு கொஞ்சம் பயணிங்க என்று விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் செல்கிறார் இயக்குனர். எந்த இடத்திலும் நெளிய விடாத திரைக்கதை.

கடவுளே அவிங்க பிரிஞ்சுறக் கூடாது, அவிங்க ஒன்னு சேந்தரனும் என்று ரசிகர்கள் வேண்டிக்கொள்ளும் அளவுக்கு நாயகன் நாயகி கெமிஸ்ட்ரி இருக்கிறது. இனி மாதவன், சூர்யா, ஆர்யாவுக்கு அடுத்து பெண்களுக்கு அதிகம் பிடித்த நாயகனாக ஹரிஷ் கல்யாண் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஓவர் ஆக்டிங் செய்துவிடாமல் தேவையான நடிப்பை மட்டும் தந்து மனதை கவர்கிறார். அவருடைய நண்பர்களாக வரும் மா கா பா ஆனந்த், மாரி, பால சரவணன் மூவரும் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள்.

யார் அந்த நாயகி? விஜய் டிவி பிரியங்காவையும் நடிகை டாப்சியையும் நினைவூட்டும் முகச்சாயல். கோர்ட்டில் நாயகனுக்கு ஆதரவாக பேசுதல், வீட்டில் யாருமில்லாத போது நாயகனை அழைத்தல், திருமணத்திற்கு முந்தைய நாள் காதலனை தேடி வருதல், பிரிந்து போன காதலனை தேடிப் போதல் என்று தோன்றிய அனைத்துக் காட்சிகளிலும் போதுமான அளவுக்கு மட்டுமே நடித்து மனதை கவர்கிறார்.

படத்தின் இன்னொரு பலம் இசையமைப்பாளர் சாம் சிஎஸ். ஏய் சண்டாளி, கண்ணம்மா உன்ன ஆகிய இரண்டு பாடல்களும் மனதை கவர்கிறது. பின்னணி இசை ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைக்கிறது. ஒளிப்பதிவு பக்கா. குறிப்பாக இரவு நேரக்காட்சிகளிலும் கிளைமேக்ஸில் வரும் டப்பாங்குத்து பாடலிலும் கேமரா மேன் கவனத்தை ஈர்க்கிறார்.

இடைவேளைக்கு முன்பு காட்டப்படும் அம்மா பிளாஸ்பேக் காட்சிகள் அவ்வளவு சுவாரஸ்யமில்லாத காட்சிகளாக தெரிந்தாலும் கிளைமேக்ஸில் அம்மாவின் கடிதங்களையும் அம்மா பலமுறை தன்னை தேடி வந்ததையும் நினைவில் கொண்டு நாயகன் தன் காதலியை தேடிப்போகும் இடத்தில் கைதட்டல் குவிகிறது. கிளைமேக்ஸ் எங்கே அமரகாவியம் படத்தைப் போல அமைந்துவிடுமோ என்று பதற வைத்து வேறொரு கிளைமேக்ஸ் தருகிறார் இயக்குனர். மொத்தத்தில் இந்தப் படம் அம்மாவையும் காதலியையும் அதிகம் நேசிக்க வைக்கும் ஒரு குடும்ப படம். என்னை நிராகரித்த என் காதலியை கொல்லனும் என்று நினைப்பவர்களுக்கு இந்தப் படம் ஒரு பாடம்! இந்தாண்டின் சிறந்த காதல் படங்களில் ஒன்றாக இந்தப் படம் நிச்சயம் இடம் பிடிக்கும்!

Related Articles

நான் உங்களுக்கு வாட்ச்மேன்! – வாட்... விஜய் சேதுபதியை அடுத்து கையில் நிறைய படங்களை வைத்திருப்பவர் நடிகர் ஜீவி பிரகாஷ் குமார். கடந்த வாரம் குப்பத்து ராஜா என்றால் இந்த வாரத்திற்கு வாட்ச்மேன்...
கண்டிப்பாக பார்க்க வேண்டிய மூன்று திரைப்... கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்: இயக்குனர் ராஜீவ் மேனனின் இயக்கத்தில் மம்முட்டி, அஜீத், தபு, ஐஸ்வர்யா ராய் நடித்த படம் இது. இந்தப் படம் பார்த்து முடித்த ...
ஐபிஎல் அட்டவணை 2018... போட்டி எண் தேதி போட்டி நேரம் இடம்1 7-ஏப்ரல் மும்பை vs சென்னை 8:00 PM மும்பை2 8-ஏப்ரல் டெல்லி vs பஞ்சாப் 4:00 PM டெல்லி...
ஜெயகாந்தனின் ” ஒரு மனிதன் ஒரு வீடு... கதாபாத்திரங்கள் : டிரைவர் துரைக்கண்ணு, தேவராஜன் -  கிருஷ்ணராஜபுரத்து ஆசிரியர், கிளீனர் பாண்டு, ஹென்றி, சின்னான் - கிருஷ்ணராஜபுரத்த...

Be the first to comment on "அம்மாவையும் காதலியையும் அதிகம் நேசிக்க வைக்கும் படம்! -இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்"

Leave a comment

Your email address will not be published.


*