“தப்ப நான் செஞ்சுட்டு தண்டனைய அவனுக்கு கொடுத்துட்டேன்!” – காதல் ஒன்று கண்டேன் குறும்பட விமர்சனம்!

Kadhal Ondru Kanden Short Film review

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் புனித். இவர் இயக்கி உள்ள ” காதல் ஒன்று கண்டேன் ” என்ற குறும்படம் யூடூப்பில் வெளியான ஒரே நாளில் பத்து லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. 

காதல் ஒன்று கண்டேன் என்ற இந்தக் குறும்படத்தில் ரியோ ராஜ், அஸ்வின் குமார், நட்சத்திரா, சார்லி, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். 

ரியோ ராஜ் சீரியல், திரைப்படம் என பலவற்றில் முகம் காட்டியிருந்தாலும் நடிப்பில் பட்டைய கிளப்பி இருக்கிறார் என்றால் அது இந்தக் குறும்படத்தில் தான். புதிதாக வந்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் பொது இடத்தில் பைக் ரேஸ் நடத்தியதற்காக கன்னத்தில் அறை வாங்கும் காட்சி, சாப்பாட்டு தட்டை உடைத்துவிட்டு ‘அப்றம் நான் எதாவது பண்ணிடுவேன்… அசிங்கமாயிடும்…’ என்று அப்பா சார்லியிடம் சொல்லும் காட்சி, நட்சத்திராவிடம் காதலை சொல்லும் காட்சி ரியோவின் நடிப்பு முதிர்ச்சிக்கு நல்ல உதாரணம். 

போலீசாக நடித்துள்ளார் அஸ்வின் குமார். முக அழகு, கவர்ந்திழுக்கும் உயரமான உடலமைப்பு ஆகியவை இவரது பலம். ரியோவை கன்னத்தில் அறையும் காட்சியில் அவருடைய உடல்மொழி சற்று திணறியுள்ளது. அந்த இடத்தில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம். நட்சத்திராவுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் நம்மை அதிகமாகவே கவர்கிறார். தனது உயர் அதிகாரியிடம் பெண்களுக்கு நேரும் கொடுமைகளை பற்றி உடைந்து அழுது பேசும் காட்சி, கிளைமேக்ஸில் காதலியின் விரலில் மோதிரம் மாட்டிவிட்டு ஐ லவ் யூ சொல்லி, வழக்கம்போல திரும்ப சொல்ல மாட்டியா என அழுதுகொண்டே கேட்கும் காட்சி அஸ்வின் குமார் தமிழ் சினிமாவில் ஒரு வலம் வருவார் என்பதை தெரியப்படுத்துகிறது. 

நட்சத்திராவுக்கான மேக்கப்பை குறைத்திருக்கலாம். இயற்கையாகவே அவர் நல்ல அழகு அப்பறம் ஏன் ஓவர் மேக்கப். நிறைய இடங்களில் அவருடைய லிப்ஸ்டிக் கண்ணை உறுத்தியது. ஒரு சில இடங்களில் அவருடைய நடிப்பு செயற்கையாக இருப்பது போல் முதலில் தோன்றியது, ஆனால் ரியோ தன்னுடைய காதலை சொன்னதும் நட்சத்திரா கொடுக்கும் ரியாக்சன் அவர் மீதான தரக்குறைவான எண்ணத்தை போக்கியது. 

மிகச் சில நிமிடங்களே வந்தாலும் அஸ்வின் குமார், ரியோ ராஜ், நட்சத்திரா ஆகியோரை தன்னுடைய நடிப்பால் தூக்கி சாப்பிடுகிறார் சார்லி. லவ் யூ சார்லி! 

“நம்ம பொண்ணுக்கு இதுமாதிரி நடந்திருந்தா நாம என்ன செய்வோமோ அத தான் செய்றாங்க”, 

“தினமும் திட்றதுக்காகவாவது அவன் முகத்த பாப்பேன்… இனிமே அதுவும் முடியாது”, 

“ஒழுங்கா கண்டிச்சு வளக்காதது என் தப்பு… தப்ப நான் பண்ணிட்டு தண்டனைய அவனுக்கு கொடுத்துட்டேன்…” போன்ற வசனங்களை பேசும்போது சார்லி எனும் மிகப் பெரிய கலைஞன் நம்மை கலங்கடித்துவிடுகிறார். குறிப்பாக அழுதுகொண்டே மகனை சுடும் காட்சி… ப்பா… சார்லி சார் நீங்க வேற லெவல்…

ஒளிப்பதிவு மிக அழகாக இருந்தது. நிறைய காட்சிகள் ஓவியம் போல ரம்மியமாய் இருந்தன. எடிட்டிங் நன்றாக இருந்தது. கலை இயக்கம், உடை வடிவமைப்பு, லொக்கேஷன் அனைத்தும் செம. 

படத்தின் முதல் பத்து நிமிடம் இது அமெச்சூர்டான இயக்குனரால் இயக்கப்பட்ட காஸ்ட்லி குறும்படம் என தோன்றியது, ஆனால் ரியோ நட்சத்திராவை வதைக்கும் காட்சியிலிருந்து அந்த எண்ணம் மாறிவிட்டது. சார்லியை தேர்வு செய்தது இயக்குனரின் புத்திசாலித்தனம், பலம். 

சிரிப்பே வரவழைக்காத பால சரவணன் இந்தக் குறும்படத்திற்குத் தேவை தானா? அதே போல பாடல் காட்சிகளும் தேவையா? என்னால் நல்லதொரு கமர்ஷியல் திரைப்படம் கொடுக்க முடியும் என்பதற்காக இயக்குனர் இந்த இரண்டு விஷியங்களை சேர்த்திருப்பார் போல. இந்தக் குறைகள் இல்லாமல் இருந்திருந்தால் படம் இன்னும் ஷார்ப்பாக இருந்திருக்கும். 

Related Articles

ஜூலை18 – 5 years of வேலையில்லா பட்... * முதல் நாள் காலேஜ் வாசல்ல நின்னு அய்யா நாம இன்ஜினியர் ஆகப்போறங்கறது நினைச்சது என்னால மறக்கவே முடியாது... தம் அடிச்சேன் தண்ணி அடிச்சேன் கட் அடிச்சேன் ...
மெல்போர்னில் நடக்கவிருக்கிறது உலகக் கோப்... 2020 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டம் மெல்போர்ன் நகரில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. போட்டிகள் நடை...
2020ஆம் வருடத்திலும் வெறும் மூவாயிரம் நா... கற்றது தமிழ் படம் வந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.  அந்தப் படத்தின் கதை எழுதி 15 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும்.  அப்போது ஒரு பட்டதாரி இளைஞனுக்கு ம...
இவர்களுடைய பிள்ளைகள் எல்லாம் அரசுப்பள்ளி... இந்தியா முழுக்க கல்வி வியாபாரமாகிவிட்டது. அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதில்லை. அனைவருக்கும் இலவசமான கல்வி வேண்டும். அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த...

Be the first to comment on "“தப்ப நான் செஞ்சுட்டு தண்டனைய அவனுக்கு கொடுத்துட்டேன்!” – காதல் ஒன்று கண்டேன் குறும்பட விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*