கூகுளின் அடுத்த அவதாரம் – செயற்கை நுண்ணறிவு கேமரா

google

கைப்பேசியில் நிழற்படம் எடுத்து எடுத்து உங்களுக்கு போரடித்து விட்டதா? அப்படி என்றால் இந்தச் செய்தி உங்களுக்காகத்தான். தேடுபொறி இயந்திரமாக இணைய உலகிற்குள் நுழைந்த கூகுள், இன்று சர்வ வல்லமை பெற்று தொழில்நுட்பம் சார்ந்த அனைத்திலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சூழ்நிலையின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கும் இயந்திரத்தை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவிலும் கூகுள் கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு வடிவமாகச் சிறந்த தருணங்களை யார் உதவியும் இல்லாமல் நிழற்படம் எடுக்கும் கருவியை கூகுள் அறிமுகம் செய்திருக்கிறது.

தானியங்கி செயற்கை நுண்ணறிவு கேமரா

கடந்த அக்டோபர் மாதம் செயற்கை நுண்ணறிவு கேமராவை கூகுள் அறிமுகம் செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இப்பொழுது அந்த கேமராவை விற்பனைக்கு வைத்துள்ளது கூகுள் நிறுவனம். கூகுளால் வெளியிடப்படும் இந்தச் செயற்கை நுண்ணறிவு கேமராவின் விலையாக 249 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் சிறந்த தருணங்களைத் தானாகவே நிழற்படம் எடுத்துக் கொள்ளும் என்பதே இந்தக் கருவியின் சிறப்பம்சம். இந்தத் தானியங்கி செயற்கை நுண்ணறிவு கேமராவுக்கு கிளிப்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

என்ன இருக்கிறது க்ளிப்ஸ் கேமராவில்?

சூழ்நிலைக்கு ஏற்ப, தனது 130 டிகிரி லென்ஸை தானாகவே சரிசெய்து கொள்ளும். குழந்தைகளை அதிகமாக நிழற்படம் எடுக்க விரும்பும் பெற்றோர்களுக்கு இந்தக் கருவி ஒரு வரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கேமரா கிடைக்க கொஞ்சம் காத்திருக்க வேண்டும்

இந்த கேமராவுக்கான ஆர்டர்கள் பெறுவதைக் கூகுள் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. கேமராவை பெற விரும்புபவர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு, பிறகு மின்னஞ்சல் மூலம் உறுதி செய்யப்படுவார்கள். ஆகவே இந்த கேமராவை உடனடியாக பெற விரும்புபவர்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.

அப்போ இனிமே வித விதமா போஸ் கொடுக்க முடியாதா?

Related Articles

தீக்காயத்தால் பாதிக்கப்படுவோரை தோல் தானம... சமீபத்தில் குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி பதிநான்கு பேர் இறந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு குடும்...
சுட்டுப் பிடிக்க உத்தரவு – விமர்சன... தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் எனும் அட்டகாசமான படத்தை தந்தவர் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா. அதை தொடர்ந்து ஜீவா மற்றும் ஹன்சிகாவை வைத்து போக்கிரி ராஜ...
மனைவிக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுக்கும் ... சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் துரைவேலன் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி. இவர்களது ஏழு வயது மகள் பவித்ரா யாரும் எதிர்பாராத வகையில் கார் விபத்தில்...
2020ம் ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவை ... நீலம் பதிப்பகம்அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள் - தொகுப்பு: வாசுகி பாஸ்கர்  எம்.சி.ராஜா சிந்தனைகள் - தொகுப்பும் பதிப்பும்: வே.அலெக்ஸ்  பௌத...

Be the first to comment on "கூகுளின் அடுத்த அவதாரம் – செயற்கை நுண்ணறிவு கேமரா"

Leave a comment

Your email address will not be published.


*