பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து
பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்குப் பேட்டி அளித்துள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். அவற்றின் சில கேள்விகளும் பதில்களும் இங்கே தொகுக்கப் பட்டுள்ளது.
- கடந்த 5 வருடங்களா இதப்பத்தி பேசுறோம், போராட்டம் பன்றோம்… அப்பிடி இருந்தும் செக்சுவல் வயலன்ஸ் அதிகமாயிட்டே தான் இருக்கு… பிரச்சினை எங்க இருக்குனு நினைக்குறிங்க… ?
பதில் : தப்பு செய்றவங்களுக்கு பயம் இல்ல… என்ன ரெண்டு நாள் ஜெயில்ல இருக்கனும் அவ்வளவு தானனு ரொம்ப அலட்சியமா இருக்காங்க… எப்ப தண்டனைகள் மாறுதோ அப்பத்தான் குற்றங்கள் குறையும்…
- தண்டனைகள் ஒருபக்கம் இருக்க… கவுர்மெண்ட், போலீஸ் இவிங்களாம் எப்படி இத கையாள்றாங்க ? அதுல உங்களுக்கு திருப்தி இருக்கா ?
பதில் : எப்ப இந்த மாதிரி ரேப் நடக்குதோ அப்ப மட்டும் பேசிட்டு அதுக்கப்புறம் மறந்துட்றோம்…
தீர்ப்புகளும் தண்டனைகளும் மாறனும்… உடனடி தீர்ப்பு வரனும்…
- இது குறித்து நாம தொடர்ச்சியா பேசிட்டு வரோம்… விவாதம் பன்றோம்… இதனால முன்னேற்றம் கிடைச்சிருக்குனு நினைக்கிறிங்களா?
பதில் : உண்மைய சொல்லனும்னா எதுவுமே நடக்கல… அந்த விஷியத்த வச்சு அப்பப்ப பலபேரு பேமஸ் ஆகிக்கிறாங்க… கடைசி வரைக்கும் பாதிக்கப்பட்றவங்களுக்கு எந்த நல்லதும் நடக்குறது இல்ல…
- என்ன நடவடிக்கை எடுக்கனும், எந்த மாதிரியான சட்டங்கள் வரனும்னு நினைக்குறிங்க… ?
பதில் : சட்டங்கள் இருக்கு ஆனா அத செய்லபடுத்த மாட்டிங்குறாங்க… எவிடன்ஸ் கிடைச்சிருக்கு… உடனே நான் பெயிலபிள் கேஸ் போட வேண்டியதுதானே… தப்பு செஞ்சவங்களாம் நாலே நாள்ல திரும்பி வந்துட்டா அப்றம் பெண்களுக்கு என்ன மரியாதை… ஆண்கள மட்டுமே மேல வச்சுக்கிட்டு பெண்கள கீழ வச்சே பாத்தா இப்படித் தான் நடக்கும்… தப்பு செஞ்சவன் மறுபடியும் பொண்ணுங்கள ஒரு பொருளா தான் பாக்க ஆரம்பிப்பான்…
- சோஷியல் மீடியாவ நம்மளுக்கு இன்னும் முறையா பயன்படுத்த தெரிலயோ?
பதில் : சோஷியல் மீடியாங்கறது இங்க இப்பத் தான் வந்துட்டு இருக்கு… அமெரிக்காவல இது ஆல்ரெடி பழக்கப்பட்ட ஒன்னு… நாம இப்பத்தான் அமெரிக்காவ பாத்து பழக ஆரம்பிச்சிருக்கோம்… இன்னும் எப்படி முறையா யூஸ் பன்னனும்னு நமக்குத் தெரியல… சோஷியல் மீடியால என்ன எழுதனும் என்ன சொல்லனும்ங்கற விவரம் இன்னும் மக்களுக்குப் பத்தலு… சோஷியல் மீடியால இன்னிக்கு நிறைய குட்டி குட்டி சேனல்ஸ் இருக்கு… அவிங்க போட்ற நியூச பாத்தா இதெல்லாம் நியூசான்னு கேட்கற மாதிரி இருக்கும்… அதனால சோஷியல் மீடியாவ யூஸ் பன்ற எல்லாருக்குமே பொறுப்புணர்ச்சி வேணும்…
- இந்த குற்றம் தொடர்ந்து 7 வருசம் நடந்திருக்கு, ஆரம்ப காலகட்டத்துலயே ஏன் இத பத்தி பேச யாரும் முன்வரல… அதுக்கான அமைப்பு இங்க இல்லைங்கறது தான் பிரச்சினையா ?
பதில் : பெண்கள் வெளிய வந்து தனக்கு நடந்த கொடுமைய பத்தி பேசனும்… பாதிக்கப்பட்டுடோமே இனி வாழ்க்கை அவ்வளவு தான்னு பயந்துட்டு இருக்க கூடாது… பாதிக்கப்பட்டவங்க குற்றவாளிங்க கிடையாதுங்கறத பொண்ணுங்க புரிஞ்சுக்கனும்…
- வெளிப்படையா சொல்லனும்னு சொல்றிங்க… குடும்பம் எப்படி எடுத்துக்குது இத… குடும்பம் எப்படி சப்போர்ட் பண்ணனும்… எப்படி டீல் பண்ணனும்னு நினைக்குறிங்க ?
பதில் : கண்டிப்பா குடும்பம் சப்போர்ட் பண்ணனும்… ஆனா கோவத்த அவிங்க தப்பு செஞ்சவன் மேல காட்டாம பொண்ணு மேல காட்டுவாங்க… நீ ஏன் பேஸ்புக் யூஸ் பண்ண… உன்னை யாரு காலேஜ் போயி படிக்க சொன்னா… இப்படி கோவத்த தவறான கோணத்துல காட்டுறது தப்பு… பையன் மேல கோவத்த காட்டனும்… உண்மைய வெளிய சொல்லனும்…
- இந்த விவகாரத்த ஒரு பெரிய பவர் ஸ்ட்ரச்சர் ( பணக்கார ஆதிக்கம் ) இருக்கு இத எப்படி பாக்குறிங்க… ?
பதில் : ஒரு ஆள் பண்ண தப்புக்கு நாம அவிங்க குடும்பத்த சமூகத்த குற்றம் சொல்ல முடியாது… அது அவிங்களோட தப்பு… அவிங்க இத போயி செய்யுனு அனுப்பல… பல பேரு பல டைம்ல செட் ஆகிருப்பாங்க… இப்ப டாக்டர்ஸ்லாம் கூட அந்த மாதிரி பன்றாங்க… அதுக்குன்னு எல்லா டாக்டரையும் சொல்ல முடியாது… யாரு தப்பு செய்றாங்களோ அவிங்கள தான் தண்டிக்கனும்… அவிங்க எங்க இருந்து வந்தாங்ககறது முக்கியமல்ல…
- மீ டூ க்குப் பேசுன பெரிய நடிகர்கள் கூட பொள்ளாச்சி விவகாரம் பத்தி பேசலயே… ?
பதில் : மீ டூ வுக்கு நிறைய பேரு பேசாம தான் இருந்தாங்க… ரொம்ப பாதுகாப்பா இருக்கறதா நினைக்குறாங்க… நமக்கு எதுக்குப்பா நம்ம வேலைய பாப்போம்னு இருக்காங்க… நாளைக்கு அவிங்க வீட்ல நடந்தா தான் அப்ப அதோட கஷ்டம் புரியும்… அதான் பாதிக்கப்பட்றதுக்கு முன்னாடியே நாம மாறுனா அது நல்லது… நிறைய நடிகர் செல்பிஷ்ஷா இருக்காங்க… டாப்ல நம்பர் ஒன்ல இருப்பாங்க… ஆனா எதுக்குமே குரல் கொடுக்க மாட்டாங்க… ஆனா அவிங்க குரல் கொடுத்தா ஜனங்க கேட்பாங்க…
அந்த நேர்காணலில் இன்னும் சில முக்கியமான கேள்வி பதில்கள் உள்ளன. அவற்றை கண்டிப்பாக முறையாவது பாருங்கள்.
Be the first to comment on "பெரிய நடிகர்கள் சுயநலமா இருக்காங்க – வெளிப்படையாக பேசிய வரலட்சுமி சரத்குமார்"