சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாக இருக்கும் இரண்டாவது படத்தில் இணைகிறது blacksheep குடும்பம்!

The-second-film-to-be-produced-in-the-production-of-Sivakarthikeyan-is-the-blacksheep-family!

பிரபல தமிழ் யூடுப் சேனலான Blacksheep குடும்பம் நாங்கள் அடுத்தகட்ட நிலையை அடையப் போகிறோம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தனர். இவ்வளவு நாள் சின்ன சின்ன வீடியோக்கள் மூலமாக மக்கள் மனம் கவர்ந்தவர்கள் இப்போது படம் எடுக்கப் போகிறார்கள் அதானே என்று பலர் முன்பே இந்த அறிவிப்பை யூகித்தனர். ஆனால் அது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

வருமானம் வருகிறதோ இல்லையோ திறமையை வெளிப்படுத்தியே ஆக வேண்டும் என்று தைரியமாக களத்தில் இறங்கி தனக்கென்று கணிசமான பிரியர்களைப் பெற்று உள்ளது பிளாக்ஷீப் குடும்பம். பீப் ஷோ வில் தொடங்கி இலுமினாட்டி ஷோ வரை பல அரசியல்வாதிகளின் கருத்துக்களை தைரியமாக கலாய்த்து தள்ளிய கூட்டம் சில தினங்களுக்கு முன்பு நவயுக ரத்தக்கண்ணீர் என்று டூட் விக்கியின் எழுத்தில் மேடை நாடகம் நடத்துவதாக அறிவிப்பு செய்தனர். அது பல மாவட்டங்களில் நல்ல வெற்றி பெற்றது.

தற்போது சேட்டையன் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்தப் படத்தின் மீது பிளாக்ஷீப் பிரியர்கள் இப்போது முதலே ஆர்வமாக இருக்கின்றனர். முயன்றால் எதையும் சாதிக்கலாம் என்பதை கண்முன்னே ஒரு இளைஞர்படை  என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறது. பல சிவகார்த்திகேயன்கள் உருவாகட்டும்!

 

Related Articles

பிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரத்தில் பாட்... வதோதரா ரயில்வே நிலையத்தில் பிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்த இயந்திரம் நிறு...
பெண்களின் ஆடைகளை ஆண்கள் துவைப்பது, பயன்ப... சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை. ரோஜாக்கூட்டம், சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன் போன்ற வெற்றிப் படங்களைத் த...
மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்வதற்காக மலையை... எது அடிப்படை தேவையோ அதை மட்டும் செய்து தராது இந்திய அரசு. தேவையில்லாத விஷயங்களில் அதிக கவனத்தை செலுத்தி கால விரயமும் பணவிரயமும் செய்து பழக்கப்பட்டதாலோ...
உலக புகழ்பெற்ற முதல் நடிகர் சார்லி சாப்ள... வசனங்கள் இல்லாத காலத்திலயே உலகம் முழுவதும் புகழோடு விளங்கியவர் சார்லி சாப்ளின். சிரிப்பு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தார். அவர் நடித்த படங்களின்...

Be the first to comment on "சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாக இருக்கும் இரண்டாவது படத்தில் இணைகிறது blacksheep குடும்பம்!"

Leave a comment

Your email address will not be published.


*