பொறியியல் கல்லூரிகளுக்கு ஆயுசு முடியப் போகிறது! – காலியாக இருக்கும் கல்லூரிகள்!

Seats vacant in engineering colleges in tamilnadu

கடந்த சில தினங்களுக்கு முன்பு பொறியியல் கலந்தாய்வு நடைபெறத் தொடங்கியது. அப்போது இருந்தே பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்து உள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேலான இடங்கள் நிரப்ப படாமலே இருக்கிறது என்ற செய்திகள் வரத் தொடங்கி இருந்தது. இப்போது அதைவிட சற்றுத் தூக்கலாக ஏராளமான  பொறியியல் கல்லூரிகள் கூடிய விரைவில் மூடப்பட இருக்கிறது என்பது தான் அதிர்ச்சிகரமான செய்தி.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 596 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அதில் 509 கல்லூரிகள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்றன. இவற்றில் பத்து கல்லூரிகளில் மட்டுமே நூறு சதவீத மாணவர் சேர்க்கை நடந்து உள்ளது. இவற்றிலும் ஒன்பது கல்லூரிகள் அரசு பொறியியல் கல்லூரிகள் என்பதால் இந்த அளவுக்கு மாணவர் சேர்க்கை நடந்து உள்ளது. மீதம் உள்ள ஒன்று கோவையில் உள்ள பி.எஸ்.ஜி எனும் தனியார் பொறியியல் கல்லூரி ஆகும்.

268 கல்லூரிகளில் நூற்றுக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்து உள்ளனர். 150க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஐம்பதுக்கும் குறைவான மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். 47 கல்லூரிகளில் பத்துக்கும் குறைவான மாணவர்களும், 27 கல்லூரிகளில் ஐந்துக்கும் குறைவான மாணவர்களும் சேர்ந்து உள்ளனர். விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி போன்ற ஐந்து கல்லூரிகளில் இரண்டு பேர் மட்டுமே சேர்ந்து இருக்கிறார்கள். 9 கல்லூரிகளில் ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்து உள்ளார். 22 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்பது பேரதிர்ச்சியான செய்தி.

மொத்தம் உள்ள 176865 இடங்களில் 74601 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. மீதம் ஒரு லட்சத்து இரண்டாயிரம் இடங்கள் காலியாகவே உள்ளது. அதே போல சி.எஸ்.இ, ஐடி போன்ற படிப்புகளில் அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். மெக்கானிக்கல், சிவில் படிப்புகளில் சேர்க்கை வெகுவாகக் குறைந்து உள்ளது. அதே போல தமிழ் வழி பொறியியல் படிப்பிலும் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து உள்ளது. கல்வித் தரம் அந்த லட்சணத்தில் இருக்கிறது.

 

Related Articles

இசைக்குத் தாய்ப்பாலு நாதஸ்வரம்! – ... 2018ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றது எழுத்தாளர் ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் நாவல். இந்த வருட சென்னை புத்தக கண்காட்சியில் அந்தப் புத்தகம் அதிக...
நகரத்துப் பேத்திக்கும் கிராமத்து பாட்டிக... நகரத்துப் பேத்திக்கும் கிராமத்து பாட்டிக்கும் இடையேயான மோதலும் காதலும்! - செத்தும் ஆயிரம் பொன் படம் ஒரு பார்வை! தமிழ் சினிமா விமர்சகர்கள் எல்லோரும...
கவுண்டமணியின் 49-O திரைப்பட வசனங்கள்!... " பிரச்சினை இல்லாத விவசாயி எவன் இருக்குறான்... " " எவன தலைவராக்குறதுனு உங்களுக்கும் தெரியல... தலைவன்னா எப்டி நடந்துக்கனும்னு அவனுக்...
ஆண்பிள்ளைக்காக 30 வயது பெண்ணை திருமணம் ச... ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சம்ரதா கிராமத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. தடபுடலான சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் நிறைந்த அந்தத் திருமணத்தில் பக்...

Be the first to comment on "பொறியியல் கல்லூரிகளுக்கு ஆயுசு முடியப் போகிறது! – காலியாக இருக்கும் கல்லூரிகள்!"

Leave a comment

Your email address will not be published.


*