இராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட “துப்பாக்கி” படத்தின் வசனங்கள்!

Thuppakki Movie Dialogue

1. ” நீ தப்பிக்க விட்டவன் இப்ப என் வீட்டுல தா கெஸ்ட்டா இருக்கான்.., சாரி… நான் யாருன்னு சொல்லல… என் பேரு ஜெகதீஷ்… இந்தியன் ஆர்மி… ஆனா நா அதுமட்டுமல்ல… DIA – Defence intelligence agency ல ஒன் ஆப் த ஸ்பெசலிட்… ராணுவத்திலே சீக்ரெட் ஏஜென்ட்… இது என் கூட வொர்க் பண்றவங்க… என் ப்ரெண்ட்ஸ்… ஏன் என் பேமிலிக்கே கூட இது தெரியாது… அப்றம் ஏன் இதெல்லாம் உங்கட்ட சொன்னேன்னு யோசிக்கறல… நீதான் உயிரோட இருக்கப் போறதில்லையே…

நாங்க கேம்ப்ல இருக்கும்போது அந்த நாட்டுக்காரன் எங்களப் பாத்து சுட்றதும் பதிலுக்கு நாங்க அவிங்கள சுட்றதும் அப்பப்ப நடக்கும்… ஒரு நாள் எங்க கேம்ப்ல செல்வராஜூனு ஒருத்தன்… நம்ம புதுக்கோட்டை பையன் தான்… திடீர்னு காணாம்… ஏழுநாள் எங்க தேடியும் கிடைக்கல… எட்டாவது நாள் கிடைச்சான்… பாவம் அவிங்ககிட்ட மாட்டிக்கிட்டான்… அவன ஏழு நாள் சித்ரவதை பண்ணி அவன் கண்ணு ரெண்டையும் நோண்டி இந்த பியர் பாட்டில் இல்ல… பியர் பாட்டில்… அத கீழ் வழியா அமுக்கி முழுசா உள்ள அனுப்பிட்டு உடைச்சிருக்காங்க… நாங்க தா அவிங்க வீட்டுக்குப் போயி பாடிய கொடுத்துட்டு வந்தோம்… அம்மா அழுகுறாங்க… அப்பா அடிச்சிக்கிறாரு… அக்கா தங்கச்சிங்க கதற்றாங்க…

14 வது நாள் அவன் தம்பி வந்துட்டான்டா மிலிட்டிரிக்கு… நீங்களாம் இங்க சந்தோசமா வாழனும்னு தாண்டா நாங்க அங்க தினம்தினம் செத்துட்டு இருக்கோம்… ”

 

2. ” நா உன்ன சுட்டா… எதுக்காக சுட்டேன்னு சொல்ல வேண்டி வரும்.,. செத்தும் உன்ன உன் குடும்பம் காரித்துப்பும்… உன் பிள்ளைங்க சிக்னல்ல பிச்சையெடுக்கும்… உன் பொண்டாட்டி ராத்திரி ரோட்ல ஓரமா நின்னுக்கிட்டு கைகாட்டி கூப்டுவா… இதுவே நீயே உன்ன சுட்டுக்கிட்டன்னா… டியூட்டி பீரியட்ல சூசைட்ன்னு உன் வீட்ல ஒருத்தருக்கு வேலை கிடைக்கும்… பிஎஃப் பணம் வரும்… பென்சன் மாசம் தவறாம வரும்… நீயே முடிவு பண்ணிக்கு… அந்தக் கன்னு எதாவது என் பக்கம் திரும்புச்சு… நான் உன்ன சுட்ருவேன்… ”

” நீ பெரிய ஆபத்த தொட்டுட்ட… ”

” ம்ம் ம்ம்… ”

 

3. ” அழகா இருக்குறவன் சாதிக்க மாட்டான்… சாதிக்கறவன் அழகா இருக்க மாட்டான்… ”

 

4. ” ஒருத்தன் அழகாவும் இருந்து நல்லா சம்பாதிக்குற மாதிரியும் இருந்தா… ”

” கும்புடு போட்டு கல்யாணம் பண்ணிக்கு… ”

 

5. ” போலீஸ்காரனுக்கும் மிலிட்டிரிக்காரனுக்கும் வித்தியாசம் என்ன தெரியுமா? ”

” நீங்க மூளையே யூஸ் பண்ண வேண்டியதில்ல… அட்டேன்சன்னா கால குறுக்க வேண்டியது… ஸ்டாட்டன்டிஸ்னா கால விரிக்க வேண்டியது… ஷூட்னா திடுதிடுனு சாட் பண்ணனும்…

ஆனா போலீஸ்காரங்க நாங்க மூளைய யூஸ் பண்ணனும்… பிக்பாக்கெட் காரன பிடிக்க போகும்போது பிக்பாக்கெட் காரன் மாதிரி யோசிக்கனும்.,. கொல காரன பிடிக்கப் போகும்போது கொலகாரன் மாதிரி யோசிக்கனும்… தீவிரவாதிய பிடிக்கப் போகும்போது தீவிர வாதியாவே மாறனும்.,. ”

 

6. ” நான்… ஐ… உங்கள… யூ… ”

” என்னங்க ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்ல இருந்து வர்றீங்களா… ”

 

7. ” ஓகே சொல்ட்டு அப்றம் ஓகேல்லன்னு சொல்றது… எனக்கொன்னும் பிரச்சினை இல்லை… ”

 

8. ” நம்ம லவ்வ பிரேக்கப் பண்ணிக்கலாம்… ”

” ஒன் அவர் கூட ஆகல… அதுக்குள்ள பிரேக்கப்பா… ”

 

9. ” உனக்கு சஸ்பெண்ஸ் பிடிக்காது… எனக்கு சஸ்பென்ஸ ஓப்பன் பன்றது பிடிக்காது… ”

 

10. ” எதாவது பண்ணி ரிஸ்க் ஆயிடப் போகுதுடா… ”

” பண்லனா தாண்டா ரிஸ்க்கு… ”

 

11. ” அவன இப்டியே வச்சிருக்க கூடாதுடா… போலீஸ்ல ஹேண்ட்ஓவர் பண்ணனும்… ”

” எதுக்கு மறுபடியும் தப்பிச்சு போறதுக்கா… ”

 

12. ” காய்ஸ்… இது கொஞ்சம் சீரியசான கேம்… நம்மளோட ஆப்போசிட் டீம் யாருன்னு இனிமே தான் தெரியப் போவுது… இன்னும் ரெண்டு நிமிசத்துல என் வீட்டு பின்னாடி வழியா ஒருத்தன் வெளிய வருவான்… அவன நாம பாலோவ் பண்ணனும்… நாம அடுத்த ஒரு ஆள மீட் பண்ணும்போது நம்ம குரூப் ரெண்டா பிரிஞ்சு ஆறு பேர் ஒருத்தனையும் ஆறு பேர் இன்னோர்த்தனையும் பாலோ பண்ணனும்… அவிங்க அடுத்தடுத்து மீட் பண்ற ஒவ்வொருத்தரையும் நாம எல்லோரும் பிரிஞ்சு போயி பாலோவ் பண்ணனும்… உங்க செல்போன்ஸ்ஸ எல்லாம் ஆன்ல வச்சுக்குங்க… என் நம்பர தவிர வேற யாரு நம்பரையும் அட்டன் பண்ணாதிங்க… நாம எல்லோரும் கான்ப்ரன்ஸ்ல கனெக்டடடா இருப்போம்… அவிங்களுக்கு 12 இடத்துல வேல இருக்கு… பிரிவாங்க…

காய்ஸ்… நாம இப்ப 12 பேருக்கு 12 பேர் இருக்கோம்… கேம் இஸ் கோயிங் டூ என்ட் நௌ… நாம பார்டர்ல பன்றத தான் இங்க பண்ணப் போறோம்… ஒரே நேரத்துல நாலு இடத்துல பாம் வைக்கறது சீரியல் பிளாஸ்ட்… அந்த டெக்னிக் நமக்கும் தெரியும்னு காட்டனும்… ஒரு செகண்ட் வித்தியாசம் இல்லாம ஒரே நேரத்துல அடிக்கிறோம்… ”

 

13. ” ஸ்லீப்பர் செல்ஸ் பயன்படுத்திய செல்போன்கள் அனைத்தும் சேட்டிலைட் மூலமாகக் கூட கண்டுபிடிக்க முடியாத அதிநவீன தொழில்நுட்பம் கொண்டவை. சார் இன்னிக்கு இந்த உலகத்துக்கு ரொம்ப த்ரெட்டனிங்கா ஆபத்தா இருக்கறது ஸ்லீப்பர் செல்ஸ்…

ஸ்லீப்பர் செல்ஸ்ங்கறது என்ன? யார்? தீவிரவாதம் எங்கெங்கெல்லாம் இருக்கோ அங்கெல்லாம் ஸ்லீப்பர் செல்ஸ் இருக்காங்க… அவிங்க எங்க இருக்காங்கன்னு தெரியாது… ஆனா 12 பேருமே சாதாரண மக்களோடு மக்களாக வாழ்ந்தவர் தான்… நாட்டு மேல அரசாங்கத்து மேல வெறுப்படைஞ்சவங்க பழிவாங்கும் உணர்வோட இருக்கறவங்கள டெரரிஸ்ட்கள் உபயோகப் படுத்திக்கிறாங்க… ”

 

14. ” I dont know who u r, where u r, you kill my 12 men including my brother, im coming for u,  I will kill u… ”

” Im waiting… ”

 

15. ” அமெரிக்கால கோர்ட் போட்டா அது சாதாரண விசியம்… ஆனா இந்தியால கோர்ட் போட்றது சாதாரண விசியம் அல்ல… ”

 

16. ” ஸ்லீப்பர் செல்ஸ்ஸ பிடிச்சும் நோ யூஸ்… அவிங்கள ஒருத்தர ஒருத்தர் முன்னபின்ன தெரியாதவங்க… அவிங்களுக்கு ஆர்டர் கொடுக்கறவன் தான் முக்கியம்… ஆர்டருக்காக காத்திருந்து காத்திருந்து கடைசி வரைக்கும் வாழ்றவங்க தான் ஸ்லீப்பர் செல்ஸ்… ”

 

17. ” ஒரு மேட்டரே உன்ன பிடிக்கலன்னு சொல்லிட்டாளே… ஹாஹா… ”

 

18. ” டேட்டிங்கோட பர்ஸ்ட் ரூலே பாய்ப்ரெண்டு என்ன கேட்டாலும் கொடுக்கறதுதான்… நீ பாட்டுக்கு கிஸ் கீது கேட்டுட்டின்னா… ”

” எனக்கு கிஸ் எப்படிக் கொடுக்கனும்னு தெரியாதே… ”

 

19. ” நான் நினைச்சத விட ஃபாஸ்ட்டா இருக்கான்… ”

 

20. ” நாம கெஸ் பண்ணது நடக்கலனா அவன் வேற ப்ளான் பன்றான்னு அர்த்தம்… ”

 

21. ” ஏன் பிரச்சினைனு வந்தா போலீஸ்காரனும் மிலிட்ரிகாரனும் தான் சாகணுமா… நீங்க எல்லோரும் வீட்ல உக்காந்துட்டு நியூஸ் சேனல்ல மாத்தி மாத்தி பாத்துக்கிட்டு அத அப்டி பண்ணிருக்கலாம்… இத இப்டி பண்ணிருக்கலாம்னு நொட்டந்தான் சொல்விங்களா… ”

 

22. ” ஆயிரம் பேர அழிக்கனும்னு நினைக்குற அவனுங்களே உயிரக் கொடுக்க தயாரா இருக்கானுங்க… காப்பாத்தனும்னு நினைக்குற நாமெல்லாம் உயிரப் பத்தி கவலப் படக் கூடாது… ”

 

23. ” ஏன்டா உன் கப்போர்ட்ல இந்த துணிமணி, புக்ஸ்ஸெல்லாம் வைக்குற பழக்கமே இல்லயா… நீ இவன தான் கல்யாணம் பண்ணிக்கப் போறியா… பெட்ரமாஸ் லைட்டே தான் வேணுமா…”

” ஆமா… ”

” அப்ப உன் லைப் கோமா… ”

 

24. ” எல்லா பீல்டலயும் சின்சியரா வேல பாத்தா ப்ரோமசன் கிடைக்கும்… ஆர்மிலயும் போலீசுலயும் மட்டும்தான் ரிட்டையர்மெண்ட் கிடைக்கும்… ”

 

25. ” தமிழ் கொஞ்சம் தெரியும்… ஆனா தமிழன்கள நிறையா தெரியும்… ”

 

26. ” இதுவரைக்கும் இந்தியன் ஆர்மில மட்டும் ஸ்லீப்பர் செல்ஸ் இல்ல… ”

 

27. ” உன் கடைசி ஆச? ”

” என்ன அடிச்சே சாகடிக்கணும்… ”

 

28. ” இப்ப லாக்க ரிலீஸ் பண்ணிட்டு அடி… அந்தப் பயம் இருக்கனும்டா… என் கைய உடைச்சு இத்தனை பேரு துணைக்கு இருந்தும் லாக்க ரிலீஸ் பண்ணிட்டு அடிக்க பயப்படுறல… அந்தப் பயம் எனக்குப் பிடிச்சிருக்கு… ”

 

29. ” புரியல இல்ல… சஸ்பென்ஸோடவே சாவு… ”

 

30. ” உண்மையிலயே ஆர்மி தான்டா கிரேட்டு… இன்னும் 11 மாசம் எங்கேயோ பனிலயோ பாலைவனத்தலயோ சின்ன டென்ட் போட்டு விளக்கு வெளிச்சத்துல இந்த நாப்பது நாள்ல நடந்தத நினைச்சிட்டு பேமிலி போட்டாவ திருப்பி திருப்பி பாத்துட்டு அப்படியே வாழனும் இல்ல… “

Related Articles

திருநங்கைகளின் வேலைவாய்ப்பு கனவுகளை திரு... நல்ல உடல் நலனுடனும், மன நலனுடனும் இருப்பவர்கள் கூட சமுதாயத்தில் படித்து ஒரு அரசு வேலையைப் பெறுவது என்பது இன்றைய கால கட்டத்தில் மிகப் பெரிய சவால். ஆனா...
இணையத்தை கலக்கும் துக்ளக் காமெடி! –... கடந்த ஜனவரி 14ம் தேதி துக்ளக் பத்திரிக்கையின் 50ம் ஆண்டு விழா நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் 'முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் எ...
பாட புத்தகங்கள் பொதுவா நல்ல புத்தகங்களா ... சமீபத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வில் எது மிக தாழ்ந்த சாதி என்ற வினாவை கேட்டிருந்தது சமூக வலை தளங்...
விளம்பர இடையூறற்ற இசையை வழங்குகிறது அமேச... அமேசான் தனது ப்ரைம் செயலியின் மூலம் காணொளி மற்றும் திரைப்பட சேவைகளை வழங்கி வருகிறது. அதை மேலும் இலாபகரமான ஒன்றாக மாற்றத் திட்டமிட்ட அமேசான் இந்தியா நி...

Be the first to comment on "இராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட “துப்பாக்கி” படத்தின் வசனங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*