இணையத்தை கலக்கும் துக்ளக் காமெடி! – மீண்டும் அசிங்கப்பட்டார் ரஜினி!

Super Star Rajinikanth Latest Speech at Thuglak

கடந்த ஜனவரி 14ம் தேதி துக்ளக் பத்திரிக்கையின் 50ம் ஆண்டு விழா நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் ‘முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என சொல்லிவிடலாம் ஆனால் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள் என்று ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

துக்ளக் பத்திரிக்கையின் 50- வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு துக்ளக் 50-வது ஆண்டு விழா மலரை வெளியிட முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

தமிழகம் முழுவதிலுமிருந்து வந்த துக்ளக் வாசகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வீடியோ வாயிலாக உரையாடிய பிரதமர் மோடி, பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து சோ ராமசாமியை புகழ்ந்து பேசினார்.

இதையடுத்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், சோ மீது உள்ள மரியாதையால் தான் பிரதமர் துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இந்த விழாவில் பங்கேற்கின்றனர். முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என சொல்லிவிடலாம் ஆனால் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்.

இப்போது நியூஸ் என்கிற பாலில் பொய் என்கிற தண்ணீரை கலந்துவிடுகிறார்கள். பொய்யை உண்மையாக்காதீர்கள். சோ ராமசாமி ஜனங்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார். தற்போதைய காலத்தில் சோ ராமசாமி போன்ற பத்திரிகையாளர்கள் தேவை. பத்திரிகைகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.

சோ என்றால் துக்ளக். துக்ளக் என்றால் சோ. துக்ளக் பத்திரிக்கையை குருமூர்த்தி ஒரிஜினாலிட்டியுடன் நடத்திவருகிறார். சோ ஒரு ஜீனியஸ். ஜீனியஸ் என்பது படித்து வருவதல்ல பிறந்து வருவது. சோவை பெரியாளாக ஆக்கியவர்கள் அவரை எதிர்த்த கருணாநிதி மற்றும் பக்தவச்சலம். தமிழகத்திற்கு மட்டும் தெரிந்த சோவை இந்தியா முழுக்க பிரபலப்படுத்தியது இந்திரா காந்தி.  அவர் அவசரநிலை கொண்டுவந்த காலத்தில் துக்ளக் பத்திரிகையில் கருப்பு அட்டைப்படத்தைப் போட்டது அவரை, இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. கவலைகள் அன்றாடம் வரும் அதை நிரந்தரமாக்கி கொள்வதும் தற்காலிகமாக கொள்வதும் உங்கள் கையில்தான் உள்ளது.

கவலைகளை நிரந்தரமாக்கி கொண்டால் நீ நோயாளி. தற்காலிகமானதாக ஆக்கிக் கொண்டால் நீ அறிவாளி.  கவலைகளை எல்லாம் தற்காலிகமானதாக ஆக்கிக் கொண்டவர் சோ ராமசாமி. இன்றைய காலகட்டத்தில் சோ போன்ற பத்திரிக்கையாளர் மிக மிக அவசியம்’ என்றார். இப்படி அவர் பேசியதில் துக்ளக் வைத்திருப்பவர்கள் அறிவாளிகள் என்ற வரி இப்போது காமெடி கண்டென்ட் ஆகிவிட்டது. நெட்டிசன்கள் வழக்கம்போல கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். அதில் சில கலாய் கமெண்டுகளை இங்கு பார்ப்போம்.

 1. சார்….நான் இலக்கியம், கதை, கவிதை, அறிவியல், தத்துவம் சம்மந்தப்பட்ட புக் லாம் படிச்சிருக்கேன் சார்…கொஞ்சம் அறிவாளி தான் சார் !!

  ரஜினி: துக்ளக் வாங்கி படிச்சிருக்கியா ?? துக்ளக்…துக்ளக் !!
 2. ரஜினி: துக்ளக் படித்தவர்கள் அறிவாளிகள்
 3. உதாரணம் :

  1.தெர்மாகோல் மூலம் நீர் ஆவியாவதை தடுத்த தமிழகத்தின் நிகோலா டெஸ்லா திரு.செல்லூர் ராஜு

  2.புதிய 2000 ரூபாய் நோட்டில் GPS சிப் உள்ளது என்பதை உலகறியச் செய்த நாசா விஞ்சானி திரு.எஸ்.வி.சேகர்

  மற்றும் பலர்….

 4. என்ன பால்பாண்டி சார்….துக்ளக் படிச்சா அறிவாளி ஆகலாம் ன்னு தலைவர் சொல்லிருக்காரு….படிச்சிருக்கீங்களா ??

  என்னது துக்ளக் ன்னு ஒரு பத்திரிக்கை இருக்கா ?? சொல்லவே இல்ல.
 5. அப்பா – ஏன்டா….எரும மாடு மாதிரி வளந்துருக்கியே… கொஞ்சமாச்சு அறிவு இருக்கா ??

  ~ஹெலோ…டெய்லி ‘துக்ளக்’ படிக்றேன் டாடி நானு.
 6. அறிவிருக்கானு கேட்டாள் மனைவி..

  துக்ளக் இருக்குது என்றேன்.

  அமைதியாக சென்றுவிட்டாள்.

 7. என்ன படிச்சிருக்க..
 8. பத்தாவது..

  துக்ளக் படிச்சிருக்கியா?!?!

 9. மேனேஜர் சார் ,இண்டர்வ்யூக்கு 683 பேர் வந்திருக்காங்க,இதுல அறிவாளி யாரு?னு  கண்டுபிடிக்கறது எப்படி?

  ரொம்ப சிம்ப்பிள்,துக்ளக் புக்கை படிக்கறவன் அறிவாளினு ரஜினியே”சொல்லிட்டாரு,அந்த பார்முலாவை யூஸ் பண்ணுவோம்
 10. இரஜினிகாந்த் சொன்னதுல என்ன தப்பு?
 11. முரசொலி வச்சுருந்தா திமுகன்னு சொல்லுவாங்க

  துக்ளக் வச்சுருந்தா அறிவாளின்னு சொல்லுவாங்க

  அப்படித்தான்யா சொல்லிட்டு இருந்தாங்க?

  இல்லையா என்ன?

  அவ்வளவு ஏன்?

  சோ வையே பெரிய அரசியல் ஞானி, ராஜதந்திரின்னுதான்யா சொல்லிட்டுருந்தாங்க…

  நம்ம ஆடிட்டர் குருமூர்த்தி ரோல்தானே குரு படத்துல மாதவன் பன்னது?

  காலங்காலமா அவங்களை எல்லாம் அதிமேதாவிங்கன்னுதானே சொல்லிட்டு இருந்தாங்க?

  மோடின்னு ஒரு ரட்சகர் வர வரைக்கும் எல்லாரும் அதைத்தானய்யா நம்பிட்டு இருந்தோம்?

  அதுக்கப்புறம்தானே பூரா பயலுகளும் கப்பி பீசுங்கன்னு தெரிஞ்சது?

  பெரியவருக்கு இதுக்கு அப்புறம் இதெல்லாம் தெரிஞ்சு என்ன ஆகப்போகுது?

  விடுங்கய்யா பாவம்

  இப்படி வகையாக ரஜினியை வச்சுசெய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Related Articles

நீர்நிலைகளில் வாத்துகள் நீந்துகையில் ஆக்... கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாபாரதக் காலத்தில் இண்டர்நெட் இருந்தது என்று கூறி சர்ச்சையை உண்டாக்கியவர் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கி உள்ள...
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்! ... இயக்குனர் மணி ரத்னம் மற்றும் இயக்குனர் ஏர்.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து லக்ஷ்மி, மா என்று இரண்டு குறும்படங்களை இயக்கி அதன் மூலம் கவன...
ஆதார் ரகசியங்களை பாதுகாக்க 12 இலக்க ஆதார... தனிநபர் ரகசியம் என்பது இந்திய அரசியலமைப்புச் சாசனப்படி அடிப்படை உரிமை. இந்திய குடிமகன் ஒவ்வொவருக்கும் ஆதார் கட்டாயம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்ட...
சூர்யாவின் கடிதத்துக்கு நெட்டிசன்கள் சொன... சமீபத்தில் அமேசான் பிரைமில் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பில் த. செ. ஞானவேல் இயக்கத்தில் உருவான "ஜெய் பீம்" படம் வெளியானது....

Be the first to comment on "இணையத்தை கலக்கும் துக்ளக் காமெடி! – மீண்டும் அசிங்கப்பட்டார் ரஜினி!"

Leave a comment

Your email address will not be published.


*