வேற்று மொழி படங்களை ரீமேக் செய்யும்போது தமிழுக்கு (ரீமேக் செய்யப்படும் மொழி பேசும் மக்கள் ரசனைக்கு) தகுந்தாற்போல சில மாறுதல்கள் செய்ய வேண்டும்.
ப்ளாஸ்பேக்கை முடிந்தவரை சுருக்கமாக சொல்ல வேண்டும். அரைமணி நேரமெல்லாம் இழுப்பது அவ்வளவு நன்றாக இருக்காது.
ஹீரோவுக்கு 4 பிரண்டு இருக்க கூடாது. 4 பிரண்டுகள் அடிக்கும் மொக்க ஜோக்குகளை தவிர்க்கனும்.
டீட்டெய்லிங் தெளிவாக காட்சிகளாக இருக்க வேண்டும். குறைவான ஷாட்கள் & வசனம் மட்டுமே பத்தாது. ஓவர் பில்டப் கூடாது.
கேரக்டர் வடிவமைப்பு தெளிவாக இருக்க வேண்டும். ஹீரோயினை லூசாக காட்ட கூடாது.
வில்லன்கள் மொக்கையாக இருக்க கூடாது. படம் எந்த பூகோள அமைப்பில் நடக்கிறது என்பது தெளிவாக இருக்க வேண்டும்.
டுவிஸ்ட்டு சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த டுவிஸ்ட்டை வைக்கவே கூடாது.
பங்களா இல்லாமல் பேய் படம் எடுக்க வேண்டும். இரைச்சலான இசை இல்லாமல் எடுக்க வேண்டும்.
எந்த மொழி படத்தை காப்பி அடித்து எடுத்தாலும் அந்தப் படத்திற்கு உரிய கிரிடிட்ஸை நியாயப்படி வழங்க வேண்டும்.
அபத்தமான காமெடி காட்சிகள் இருக்க கூடாது. டபுள் மீனிங் வசனங்கள் இருக்க கூடாது.
படத்தின் கரு கருத்துள்ளதாக இருக்கலாம். ஆனால் கருத்தூ சொல்வதற்காகவே படம் எடுக்க கூடாது. கருத்து கூறும் வசனங்களை தவிர்க்க வேண்டும்.
காமெடி படம் என்றாலும் அதில் லாஜிக் இருக்க வேண்டும். அதே போல பேய் படத்திலும் லாஜிக் இருக்க வேண்டும்.
பாடல் வரிகள் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். பாடல்கள் நன்றாக இருந்தால் வைக்கலாம். இல்லையென்றால் அதை வைக்கவே கூடாது அல்லது படத்தின் கடைசியில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பீரியட் படம் எடுக்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். கன்டினியூட்டி, ஆர்ட் டிபார்ட்மென்ட் போன்றவை சரியாக இருக்க வேண்டும்.
வசனங்கள் ஷார்ப்பாக இருக்க வேண்டும். அதே சமயம் படம் முழுக்க வசனங்கள் இருக்க கூடாது.
நாவலையோ சிறுகதையோ படமாக்கப் படும்போது மிக கவனமாக திரைக்கதை உருவாக்க வேண்டும். புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தை கண்டிப்பாக திரைப்படம் ஏற்படுத்த வேண்டும்.
விவசாயி, இராணுவன், மீனவன், பெண், ஏழை, தலித் ஆகியோர் மீது உண்மையான பற்று இருந்தால் மட்டும் நல்ல தகவல்களோடு படம் எடுக்கலாம்.
பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய த... பிள்ளை வளர்ப்பு என்பதைப் பற்றி இன்னமும் சில பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. அதை எதோ ஒரு தொந்தரவுக்கு உரிய செயலாகவே பார்க்கின்றனர். அப்படிபட்ட பெற்றோர்கள்...
அட்லியின் நிறத்தை கலாய்க்கும் நெட்டிசன்க... கருப்பாக இருக்கும் இளசுகளை கரிச்சட்டி தலையா, கருவாயா இப்படி விளையாட்டுக்கு அழைப்பது தமிழகத்தில் வழக்கம். அதே கருப்பை வைத்து ஒருவரை மட்டம் தட்டுவதும் த...
லிஸ்ட் – பேஸ்புக்கின் புதிய அம்சம்... புதிய பயனாளிகளின் எண்ணிக்கையைக் கூட்டவும், ஏற்கனவே இருக்கும் பயனாளிகளை தக்கவைத்துக் கொள்ளவும் பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தை நிறைய மேம்படுத்தல்களுக்கு ...
Be the first to commenton "ஒரு படம் எப்படி இருக்கனும் எப்படி இருக்க கூடாது – ப்ளூ சட்டை மாறன் டிப்ஸ்!"
Be the first to comment on "ஒரு படம் எப்படி இருக்கனும் எப்படி இருக்க கூடாது – ப்ளூ சட்டை மாறன் டிப்ஸ்!"