கவிஞராக மாறிய மோடி! – கடல் குறித்து மோடி எழுதிய கவிதை ஒரு பார்வை!

Modi's poem about the sea

சீன அதிபரின் வருகையால் பிரதமர் மோடி மாமல்லபுரம் செல்ல வேண்டி இருந்தது. கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டி இருந்தது. அந்த நிகழ்வின் புகைப் படங்கள் அனைத்தும் இணைய தளங்களில் வைரல் ஆகின. அதை அடுத்து தற்போது பிரதமர் மோடி எழுதிய கடல் குறித்த கவிதை ஒன்று வைரலாகி வருகிறது. மோடி இந்தக் கவிதையை இந்தியில் எழுத தமிழ்மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மோடியின் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப் பட்டுள்ளது. அந்தக் கவிதையை இங்கே இணைத்துள்ளோம். 

அலைகடலே! 

அடியேனின் வணக்கம்

அளப்பரிய, முடிவுற்ற, 

ஒப்பில்லாத வர்ணனைகளைக்

கடந்த நீலக்கடலே

உலகிற்கு உயிரளிக்கும் நீ

பொறுமையின் இலக்கணம்

ஆழத்தின் உறைவிடம்

 

அலைகடலே! 

அடியேனின் வணக்கம்

வெளித் தோற்றத்திற்கு 

கோபமாய் வீரத்துடன் 

பேரிரைச்சலோடு எழும் அலைகள்

உன் வலியா ? வேதனையா ?

துயரமா ? எதன் வெளிப்பாடு ? 

இருந்தபோதிலும் உன்னை 

கலக்கமின்றி தடுமாற்றமின்றி

உறுதியுடன் நிற்கச் செய்கிறது 

உன் ஆழம். 

 

அலைகடலே! 

அடியேனின் வணக்கம்

உன்னிடம் உள்ளது

எல்லையில்லாத வலிமை, 

முடிவில்லாத சக்தி ஆனாலும்

பணிதவின் பெருமையை 

நிமிடந்தோறும் நவில்கிறாய் – நீ

கரையைக் கடக்காமல் 

கண்ணியத்தை இழக்காமல், 

 

அலைகடலே! 

அடியேனின் வணக்கம்

கல்வித் தந்தையாய் 

ஞான குருவாய்

வாழ்க்கைப் பாடத்தை 

போதிக்கிறாய் நீ

புகழுக்கு ஏங்காத, 

புகலிடத்தை நாடாத

பலனை எதிர்நோக்காத

உன் பயணம் தரும் பாடங்கள் ஏராளம். 

 

அலைகடலே! 

அடியேனின் வணக்கம்

நிற்காமல், சளைக்காமல்

வீசும் உன் பேரலைகள் 

முன்னேறுவதே வாழ்க்கை என்ற 

உபதேச மந்திரத்தை உணர்த்தும்

முடிவில்லாத பயணமே 

முழுமையான உன் போதனை. 

 

அலைகடலே! 

அடியேனின் வணக்கம்

விழும் அலைகளிலிருந்து

மீண்டும் எழும் அலைகள்

மறைந்து 

மீண்டும் துவங்கும் உதயம்

பிறப்பு – இறப்பு என்பது தொடர் வட்டம்

உனக்குள் மடிந்து பின்

உயிர்த்தெழும் அலைகள்

மறுபிறப்பின்

உணர்வூட்டம்

 

அலைகடலே! 

அடியேனின் வணக்கம்

பழம்பெரும் உறவான

சூரியனால் புடமிட்ட 

தன்னையழித்து, 

விண்ணைத் தொட்டு

கதிரவனை முத்தமிட்டு

மழையாய் பொழிந்து

 

நீர்நிலைகளாய், சோலைகளாய் 

மகிழ்ச்சி மணல் பரப்பி

படைப்பை அலங்கரித்து – எல்லோருக்கும் 

வாழ்வளிக்கும் நீர் நீ. 

 

அலைகடலே! 

அடியேனின் வணக்கம்

வாழ்வின் பேரழகு நீ – 

விஷத்தை அடக்கிய 

நீலகண்டன் போல் – நீயும்

எது வந்தாலும் ஏற்றுக் கொண்டு

புது வாழ்வைப் 

பிறர்க்களித்து

சொல்கிறாய் 

சிறந்த வாழ்வின் 

மறைபொருளை

 

அலைகடலே! 

அடியேனின் வணக்கம்

இவ்வாறு முடிவுறுகிறது பிரதமர் ( கவிஞர் ) மோடியின் கவிதை! 

Related Articles

ஆதார் ரகசியங்களை பாதுகாக்க 12 இலக்க ஆதார... தனிநபர் ரகசியம் என்பது இந்திய அரசியலமைப்புச் சாசனப்படி அடிப்படை உரிமை. இந்திய குடிமகன் ஒவ்வொவருக்கும் ஆதார் கட்டாயம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்ட...
நீங்கள் எத்தனை வயது வரை உயிரோடு இருப்பீர... சாகற நாள் தெரிஞ்சிடுச்சுனா வாழ்ற நாள் நரகமாயிடும். சிவாஜி படத்தில் ரஜினி பேசிய வசனம் இது. வசனமாக இதை ரசித்தாலும், நம்முடைய ஆயுட்காலம் பற்றி தெரிந்துகொ...
இனி கர்நாடக காடுகளைப் பருந்து பார்வையில்... கெனொபி நடை (Canopy Walk) என்பது கானகத்தின் உயரத்தில் நடை பயணிகளுக்காக ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேடை அமைப்பதாகும். உயர்ந்து வளர்ந்து நிற்கும் மரங்கள...
அரை மில்லியன் இந்தியர்கள் நிம்மதி பெருமூ... H1B விசா காலம் முடிந்து, அமெரிக்காவில் நிரந்தரமாகத் குடியேறுவதற்கான  க்ரீன் கார்டுக்காக விண்ணப்பித்துக் காத்திருந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற்ற இருப...

Be the first to comment on "கவிஞராக மாறிய மோடி! – கடல் குறித்து மோடி எழுதிய கவிதை ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*