அசுரன் பாடல்கள் தேசிய விருது வெல்லுமா – அசுரன் பாடல்கள் ஒரு பார்வை

will asuran movie Songs Win National Award

பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய பாடல்கள்

பாடலாசிரியர் யுகபாரதி இந்தப் படத்தில் பொல்லாத பூமி, எள்ளு வய பூக்கலையே, கண்ணழகு ரத்தினமே என மூன்று பாடல்களை எழுதி உள்ளார். மூன்றுமே செம ஹிட். இதில் எள்ளு வய பூக்கலையே, கண்ணழகு ரத்தினமே என்ற இரண்டு பாடல்களின் பாடல் வரிகளும் அருமையாக உள்ளன.  தனக்கு தேசிய விருது கிடைக்காதது பற்றி ஒன்றிரண்டு மேடைகளில் பேசியுள்ளார் யுகபாரதி. இந்த இரண்டு பாடல்களும் தேசிய விருதுக்குத் தகுதியானவை. பொல்லாத பூமி பாடலில் ஓகே ஆல்ரைட் என்று ஆங்கில வார்த்தைகள் வந்துள்ளதால் இந்த பாடலுக்குத் தேசிய விருது கிடைக்காமல் போகலாம்.   

  1. பொல்லாதபூமி பொலிப்போடும் ஆள
    முன்னால போனா நறுக்காதோ கால
    அன்போட நின்னா தல வணங்கும் ஊரு
    ஆவேசம் ஆனா உயிரெடுக்கும் பாரு

    வீராப்புத்தான் வேணாம்மய்யா
    வீட்டோட இரு நீ தொணையாக
    சூலாயுதம் நீ தூக்குனா
    வில்லங்கம் வருமே வெனையாக

    உன் மீச முறுக்கால
    கொடி ஏத்து ஏத்து
    முப்பாட்டன் கொலம் காக்க
    வரலாற மாத்து

    தனுஷ், ஜீவி, டீஜே, கென் நால்வரும் இணைந்து பாடிய பாடல். இந்தப் பாடல் படத்தில் வராதது ரசிகர்களுக்கு ஏமாற்றமே.
  2. எள்ளு வய பூக்கலையே
    ஏறெடுத்தும் பாக்கலையே
    ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா
    அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா

    கொல்லையில வாழ எல
    கொட்டடியில் கோழி குஞ்சு
    அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா
    ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா

    காத்தோட உன் வாசம்
    காடெல்லாம் ஒம் பாசம்

    ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா
    சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா
    சாவையும் கூறு போட்டு கொல்லய்யா

    கல்லாக நின்னாயோ
    கால் நோக நின்னாயோ
    கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு

    ஜீவியின் மனைவி சைந்தவியின் குரலில் ஒலிக்கும் பாடல் இது. கேட்போரை உருக வைக்கும் அளவுக்கு குரலும் பாடல் வரிகளும் உள்ளன. மகனை இழந்த தாய் வலியோடு பாடுவது போல் இந்தப் பாடலை காட்சிப் படுத்தி இருந்தனர் படக்குழுவினர்.     

 

  1. கண்ணழகு ரத்தினமே
    கை அசையும் பொற்சிலையே
    காணலையே கண்ணே
    உன்ன காணலையே

    கையும் காலும்
    உன்ன எண்ணி ஓடலையே

    பொன்னழகு பெட்டகமே
    பூ முடிஞ்ச கட்டடமே
    காணலையே தங்கம்
    உன்ன காணலையே

    ஆடும் மாடும்
    உன்ன எண்ணி மேயலையே

 மிகச்சில வரிகளே இருந்தாலும் தனுஷ் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் மனதை வெகுவாக கவர்கிறது. இன்னும் சொல்லப்போனால் படத்தில் உள்ள பாடல்களில் மிகச்சிறந்த பாடல் என்றால் இந்தப் பாடலை சொல்லலாம். 

எழுத்தாளர் ஏக்நாத் எழுதிய பாடல் 

  1. ஒத்த நிலவை போல
    குத்த வச்ச அழகுதாம்ல
    எனை பிச்சி திங்கிதாம்ல
    எம் மினுக்கிக் காத்திருக்கா
    எனை உலுக்கிப் பூத்திருக்கா

    நெத்தி வகுடுக்குள்ள
    ஆம்பளைய சாச்சிருக்கா
    ஆறப்போட்டு வச்சிருக்கா

    ஹேய் சுத்தி வரும் பூமிக்குள்ள
    என்னை சுத்தும் சாமி புள்ள
    முந்தியில முடிச்சிவைக்க
    உம்ம மினுக்கிக் காத்திருக்கா
    உம்ம உலுக்கிப் பூத்திருக்கா

    கம்மங் கூழைப் போல
    கருவாட்டு துண்டப் போல
    சொல்லாம முழுங்கத்தாம்மயா

    கோழி கூட்டுக்குள்ள
    எதுக்கு புல்லு வைக்கேன் நான்
    மாட்டு தொழுவுல
    எதுக்கு முட்டை தேடுதேன்

    நானும் கோட்டி ஆயிட்டேனே
    அட இது எதனால
    தலை முட்டி ஒட வைக்காம்
    இது அந்த எழவல

    குவிச்சு வச்ச நெல்ல போல்
    கூர்பாயும் நெஞ்சால
    எனை குத்தி கொல்லதம்ல

ஹேய் நண்டு பாதையில
நானும் வண்டியோட்டுதேன்
வண்டு போச்சுன்னா
அதுட்ட நின்னு பேசுதேன்

பனை மேல கலையாம
நான் தொங்கி நிக்கேனே
பறைக்குள்ள இசை போல
நான் ஒளிஞ்சிருக்கேம்ல

அவன் முன்ன வந்துட்டா
அசங்காம கொன்னுட்டா
வலிக்காம வதைக்கதாம்யா

திருநெல்வேலி வட்டார வழக்கில் எழுதப்பட்ட பாடல். இது போன்று வட்டார வழக்கில் பாடல்வரிகள் தமிழ்சினிமாவில் இதற்குமுன் வந்தது இல்லை என்றே கூறலாம். டீஜே, சின்மயி இருவரும் இந்தப் பாடலை பாடியுள்ளனர். அவ்வளவு இனிமையாக இருக்கிறது பாடல். இந்தப் பாடலுக்கு பல விருதுகள் எதிர்பார்க்கலாம்.   

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் எழுதி பாடிய பாடல் 

  1. வா எதிரில் வா
    எதிர்படும் நொடியில்
    தலைகள் சிதற
    வா விரட்டி வா
    விரட்டிடும் விரட்டில்
    பகைகள் கதற

    வா அழிக்க வா
    ஒழிக்க வா
    தீயவர் குலைகள் நடுங்க
    வா நெறிக்க வா
    முறிக்க வா
    கொடிய குருதி தெறிக்க

    அச்சம் துறந்திடு
    துச்சம் அறிந்திடு
    உச்சம் கிளர்ந்திடு
    மிச்சம் என்று எதுவும் இன்றி
    உந்தன் ஆயுதம்
    என்னவென்பதை
    உந்தன் கைகளில்
    ஏந்தி நிற்கிறாய்

    அந்த ஆயுதம்
    என்ன செய்திடும்
    அச்ச கூச்சல் அடங்கும் முன்னே
    மொத்தம் கிள்ளி வீசிடு

    ஏலம் போட்டு பிரிக்குது
    ஓரம் கட்டி அடைக்குது
    பேத பார்வை வேர்வை போல
    ஊறி போன உலகிது

    இறுகி போன மனமிது
    இளகி போக மறுக்குது
    பழகி பழகி கெடுக்க நினைக்கும்
    கலைகள் களையும் வரம் இது

    ஓலம் பரவிடும்
    அந்த ராகம் கொடியது
    காலம் காலமாய் இங்கு
    துன்ப மேகம் பொழியுது 


ஏற்க மறுத்திடு
துரோக தீயை அறிந்திடு
பார்க்கும் அனைத்தையும் வீழ்த்த
மீதி வாளை வீசிடு

குருதி தாகம் அடிக்குது
பலியை தீர்க்க துடிக்குது
பழைய பகையின் மழையில் நனைய
அசுர வேட்டை நடக்குது

எதுக்கு மண்ணில் பொறக்கிறோம்
வெறுப்ப ஊட்ட தவிக்கிறோம்
மனுஷ பயலின் அரக்க மனசில்
உறக்கம் கெட்டு கொதிக்கிறோம்

நீதி எதுவென
இன்று நீயும் கூறிடு
ஆதி எதுவென
கொஞ்சம் நீயும் தேடி ஓடிடு

வீதி வெளியிலே
உந்தன் கோபம் காட்டிடு
மீதி குருதியை
அள்ளி தீர்த்தமாக மாற்றிடு

வா அசுரா வா
அசுரா வா
அசுர தலைகள் சிதற

வா அசுரா வா
அசுரா வா
அசுர பகைகள் கதற

வா அசுரா வா
அசுரா வா
அசுர பலிகள் கொடுக்க

வா அசுரா வா
அசுரா வா
அசுர ரத்தம் தெறிக்க

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அவரே எழுதி பாடிய பாடல் இது. கொலைவெறித்தனத்துடன் இந்தப் பாடலை எழுதி பாடியுள்ளார். படத்தில் எப்போதெல்லாம் சண்டாக் காட்சிகள் வருகிறதோ அப்போதெல்லாம் இந்தப் பாடலை பின்னணியில் ஓலிக்கவிட்டிருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளுடன் இந்தப் பாடலை கேட்கும்போது உடல் சிலிர்த்து விடுகிறது. 

ஏகாதசி எழுதிய பாடல் 

 

  1. கத்தரி பூவழகி
    கரையா பொட்டழகி
    கலரு சுவையாட்டம்
    உன்னோட நெனப்பு அடியே
    சொட்டாங்கல்லு ஆடையில
    புடிக்குது கிறுக்கு

    வரப்பு மீசைக்காரா
    வத்தாத ஆசைக்காரா
    உன்ன நான் கட்டிக்குறேன்
    ஊரு முன்னால
    அட வெக்கப்பட வேணா
    என்ன பாரு கண்ணால


    மையால கண்ணெழுதி
    என் வாலிபத்த மயக்குறியே
    காத்தாடி போல நானும்
    உன்ன நிக்காம சுத்துறேனே

    கழுதை போலத்தான்
    அழக சுமக்காத
    எனக்கு தாயேண்டி
    கொஞ்ச வேணும் நானும்

    அருவா போல நீ
    மொறப்பா நடக்குறியே
    திருடா மொரடா
    இருப்பேன் உன்னோடதான்

கரகாட்டம் ஆடுது நெஞ்சு
உன்ன கண்டாலே தெருவுல நின்னு
நான் குளிக்கும் தாமிரபரணி
கண் தூங்காம வாங்குன வரம் நீ

ஆலம் விழுதாட்டம்
அடடா தலமயிரு
தூளி ஆடிடத்தான்
தோது செஞ்சு தாடி

இலவம் பஞ்சுல
நீ ஏத்துற விளக்கு திரி
பத்திக்கும் தித்திக்கும்
அணைச்சா நிக்காதடி

ஒத்த சொல்லால பாடல்புகழ் வேல்முருகன் மற்றும் ஹே சின்னபுள்ள என்ன மச்சான் பாடல்புகழ் ராஜலட்சுமிசெந்தில் பாடிய பாடல் இது. செம துள்ளலான பாடல் இது. தேசிய விருது வெல்லுமா என்பது டவுட்டு என்றாலும் இனி சூப்பர் சிங்கர் போன்ற பல மேடைகளில் இந்தப் பாடலை கேட்கலாம் என்பது மட்டும் உறுதி.   

 

Related Articles

ஐடி துறையில் வேலை செய்யும் பெண்கள் ஒழுக்... கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்தே நடிகர் சிவக்குமாரின் அட்வைஸ் வீடியோக்கள் பல சமூக வலைதளங்களில் உலாவிக் கொண்டு இருக்கிறது. அவற்றில் கவனிக்கத் தக்...
கமல் – கலையும் கலை சார்ந்த இடமும் ... ஹேராம்நடிகர்கள்: கமல் & ஷாருக்கான் (அகழ்வாராய்ச்சியாளர்கள்), ஹேமா மாலினி, ராணி முகர்ஜி, அப்பாஸ்(டாக்டர்),...இயக்கம்: கமல்இசை: இளையராஜ...
தையல் தொழிலாளிகள் சந்திக்கும் பிரச்சனைகள... உடைகள் என்ற ஒரு விஷயம் கண்டுபிடித்த காலத்திலிருந்தே தையல் என்கிற ஒரு விஷயமும் இருந்துகொண்டு வருகிறது. பல வருடங்கள் கடந்து உடைகள் ஒவ்வொரு காலகட்டத்திற்...
ஹாட்டின்களை அள்ளும் ஹலிதா சமீம்! –... தமிழ் சினிமாவில் ஒரு அழகான படம் வந்து... ஒரு பாஸிட்டிவ் எனர்ஜியை அள்ளிக் கொடுக்கிற மாதிரி ஒரு படம் வந்து... ரொம்ப நாளாச்சுப்பா என்ற ஒரு பேச்சு ரசிகர்க...

Be the first to comment on "அசுரன் பாடல்கள் தேசிய விருது வெல்லுமா – அசுரன் பாடல்கள் ஒரு பார்வை"

Leave a comment

Your email address will not be published.


*