க்ளைமேக்ஸ் டுவிஸ்ட்டுக்காக இந்தப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலம்! – அயோக்யா விமர்சனம்!

Ayogya movie review

சில நாட்களுக்கு முன் வெளியான அயோக்யா டீசரில் நீ தானா அந்தக் குயில் குக்கூ குக்கூ என்று விஷால் பாடியதை வைத்து படம் மொக்கை என்றே கமெண்ட் தெரிவித்து இருந்தார்கள் யூடுயூப்வாசிகள். இன்று தியேட்டருக்குள் நுழைந்தவர்களில் பெரும்பான்மையானோருடைய மனநிலையும் கிட்டத்தட்ட அப்படியே இருந்தது. ஆனால் இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் அனைவருடைய மனநிலையையும் மாற்றி கண் கலங்க வைத்துவிட்டது.

சின்ன வயதில் திருடனாக இருக்கிறார் விஷால். ஒருமுறை போலீஸ் ஸ்டேசனுக்கு செல்ல அங்கிருந்த போலீஸ்களோ திருடிய பொருட்களை எல்லாம் கைப்ப்பற்றுகிறார்கள். திருடனுக்கெல்லாம் திருடன் போலீஸ்… அதனால நாம போலீஸ் ஆவோம் என்று முடிவெடுக்கிறார் அனாதையான நாயகன். ஒரு வழியாகப் போலீஸ் ஆகிறார். போலீஸ் ஆகி குற்றவாளிகளை தண்டிக்காமல் குற்றவாளிக்கு சப்போர்ட்டாக இருக்கிறார். அப்நடி சப்போர்ட்டாக இருந்ததனால் உண்டான விளைவு என்ன? என்பதே படத்தின் கதை.

சத்யம், பாயும்புலி படத்தை அடுத்து இந்தப் படத்தில் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். அவ்வளவு கச்சிதமாக பொருந்திப் போகிறார் விஷால். அவருடைய சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் சிலிர்ப்பை உண்டாக்குகின்றன. கிளைமேக்ஸ் டுவிஸ்ட் வரை அவருடைய கதாபாத்திரம் மீது என்னடா இவன் சரியான கிறுக்கனா இருப்பான் போல என்று எரிச்சல் தான் இருக்கிறது. கிளைமேக்ஸ் டுவிஸ்ட்டில் அந்தக் கதாபாத்திரம் மீது பரிதாபம் வந்துவிடுகிறது. காதலியா ராஷி கண்ணா நடித்துள்ளார். அயோக்யனை யோக்யனாக மாற்றும் வேலை அவருக்கு. முடிந்த வரை அந்தக் கதாபாத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறார். இசையமைப்பாளர் சாம்சிஎஸ் இசையில் கண்ணே கண்ணே பாடல் மற்றும் துறுத்தல் இல்லாத பின்னணி இசை மனதை கவர்கிறது.

யோகி பாபு ஒருசில காட்சிகளுக்கே வருகிறார். முடிந்தவரை சிரிக்க வைக்கிறார். கேஎஸ் ரவிக்குமார் மற்றும் ராதாகிருஷ்ண பார்த்திபன் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறார்கள். தங்கள் வேலையை இருவரும் சரியாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக கே எஸ் ரவிக்குமாருக்கு Best supporting actor க்கான பாடல்கள் ஒரு சில இடங்களில் வேகத்தடையாக தோன்றுகின்றன. ஒவ்வொரு உயிருக்கும் கண்டிப்பா எதாவதொரு கடமை இருக்கும்… அந்தக் கடமைய முடிக்காம கண்டிப்பா உயிர் போகாது என்ற பகவத் கீதை வசனம் மனதை கவர்கிறது. மொத்தத்தில் விஷாலுக்கு கிடைத்த இன்னொரு வெற்றிப் படம் அயோக்யா. கண்டிப்பாக குடும்பத்துடன் தியேட்டரில் கண்டுகளிக்கலாம். அறிமுக இயக்குனர் வெங்ட் மோகன் இந்த ஆண்டு சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை வெல்வார்!

Related Articles

இராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட... 1. " நீ தப்பிக்க விட்டவன் இப்ப என் வீட்டுல தா கெஸ்ட்டா இருக்கான்.., சாரி... நான் யாருன்னு சொல்லல... என் பேரு ஜெகதீஷ்... இந்தியன் ஆர்மி... ஆனா நா அதுமட...
இந்த ஒருநாளில் அரசு அனுமதியுடன் நீங்கள் ... அமெரிக்கா தன் நாட்டில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை குறைக்கும் விதமாக குற்றம் புரிந்தவர்களை மற்ற நாள்கள் கடுமையாக தண்டித்து ஆண்டின் ஒரேயொரு ஒரு நாள் இ...
நீட் தேர்வில் நல்ல சதவீதம் பெற்ற உத்திரப... இந்த ஆண்டு நீட் தேர்வில் நல்ல சதவீதம் பெற்ற மாநிலமான உத்திரபிரதேசத்தைக் கண்டு வியக்காத ஆட்கள் இல்லை. " போயும் போயும் இந்த மாநிலம் எப்படிடா நீட் தேர்வு...
பூ ராமு” – நம் மனதில் நீங்கா... " இவர் தான் உன் அப்பாவா... "" ஆமா சார்... ""இப்படியொரு அப்பாவியான அப்பாவ வச்சிக்கிட்டு ஆள மாத்தி கூட்டி வந்துருக்கியேடா... "" உனக்கொரு விஷ...

Be the first to comment on "க்ளைமேக்ஸ் டுவிஸ்ட்டுக்காக இந்தப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலம்! – அயோக்யா விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*