தீவிரவாதியை நல்லவனாக்க பார்க்கிறாரா இயக்குனர் வெற்றிமாறன்?

தமிழ் சினிமாவின் மிகமுக்கியமான இயக்குனர் வெற்றிமாறன். அவர் நவம்பர் 3ஆம் தேதி வந்த ஆனந்த விகடன் இதழில் தன்னுடைய அடுத்த படமான விடுதலை படம் குறித்து நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொண்டார்.  அப்படி அவர் பகிர்ந்துகொண்ட விஷயங்களில் விஜய் சேதுபதி பற்றியும் சூரி பற்றியும் இளையராஜா பற்றியும் தனுஷ் பற்றியும் நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொண்டிருந்தார்.  இளையராஜாவுடன் இயக்குனர் வெற்றிமாறன் முதல் முறையாக இணைந்து பணியாற்று கிறார் அப்படி முதல் முறையாக பணியாற்றக்கூடிய அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்டதற்கு நான் இளையராஜாவிடம் என்னுடைய முந்தைய படங்களான அசுரன் மற்றும் வெனிஸ் திரைப்பட வெர்ஷன் விசாரணை படத்தையும் போட்டுக் காட்டினேன் என்று வெற்றிமாறன் கூறினார். 

 விசாரணை படத்தின் வெனிஸ் திரைப்பட வெர்சன் பார்த்ததும் இளையராஜா நீ எந்த மாதிரி இயக்குனர் என்று எனக்கு நன்கு புரிகிறது நான் உனக்கு என்று பிரத்யேகமாக இசை அமைக்கிறேன் அந்த இசை அமைத்தது போ நானே பாடல் எழுதுகிறேன் என்று வெற்றிமாறனிடம் கூறி இருக்கிறார் இளையராஜா. அதுமட்டுமின்றி இளையராஜா இசையில் தனுஷ் விடுதலை படத்திற்காக ஒரு பாடலையும் பாடி கொடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் பயிற்சி பெற்று இளையராஜாவின் ஒத்துழைப்பின் பெயரில் இந்த பாடலை விடுதலை படத்துக்காக தனுஷ் பாடி கொடுத்திருக்கிறார். அந்த பாடல் மிக நன்றாக வந்துள்ளதாக இயக்குனர் வெற்றி மாறன் தனது பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்.  விடுதலை படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு அதை கதைக் கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். இருந்தாலும் அந்த படம் முழுக்க முழுக்க வனப்பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் அறியாத விஷயம். அந்த தகவலை வெற்றிமாறன் இந்த வார விகடனில் பகிர்ந்து கொண்டிருந்தார். 

 முதலில் இந்த படத்தில் சூரி தான் கதாநாயகனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளி வந்ததும் எல்லோரும் ஆச்சரியமாக சூரியைப் பார்த்தார்கள். அதன் பிறகு இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது யாரும் எதிர்பார்க்காத செய்தியாக இருந்தது. இப்போது விஜய் சேதுபதி 20 நாட்கள் மட்டும் நடித்தால் போதும் என்ற நிலையிலிருந்து இன்னும் இருபது நாட்கள் அந்த படத்திற்கு கூடுதலாக நடிக்கவேண்டி உள்ளது என்ற செய்தியை வெற்றிமாறன் பகிர்ந்து கொண்டுள்ளார். விஜய் சேதுபதி விடுதலை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றதும் எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தார்கள்.  விஜய் சேதுபதி ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியவர். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் அந்த படத்திலிருந்து விலக வேண்டி இருந்தது. இருந்தாலும் இப்போது வெற்றிமாறனுடன் முதல் முறையாக இணைந்துள்ளார் இது குறித்து ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

 அதேபோல இயக்குனர் வெற்றிமாறன் இந்த பேட்டியில் நடிகர் சூரி பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார். சூரி இந்த படங்களுக்கு முன்பு நிறைய படங்களில் கமிட்டாகி இருந்தார், ஆனால் இந்த படத்திற்கு முழு ஒத்துழைப்பையும் தர வேண்டும் என்பதற்காக அந்த படங்களை எல்லாம் தவிர்த்து விட்டு வருகிறேன் என்று வெற்றி மாறனிடம் கூறியிருக்கிறார்.  ஆனால் வெற்றிமாறனோ இல்லை வேண்டாம் அந்த ங்களை நீங்கள் தவிர்க்க வேண்டாம் அந்த படங்களை முடிந்தவரை சீக்கிரமாக முடித்துவிட்டு வாருங்கள் அதன் பிறகே படத்தை தொடங்கலாம் என்று படத்தை தொடங்கி இருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.  இதனால் சூரிக்கு தேசிய விருது கிடைக்கும் என்றும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.  ஏற்கனவே நடிகர் சூரி மாவீரன் கிட்டு படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் குணச்சித்திர நாயகனாக நன்றாக நடித்திருப்பார். அதாவது எதிரிகளிடம் பணம் வாங்க முற்படுவார்கள். ஆனால் அதை மனசாட்சிக்கு விரோதமாக நினைத்து தவிர்த்துவிடுவார் அதைப் பார்த்திபனிடம் சொல்லி நான் ஒரு நிமிடம் பணத்திற்காக ஆசைப்பட்டு விட்டேன் இனி நான் உங்கள் கூட்டத்தோடு சேர தகுதி அற்றவன் என்று தன்னை தானே விலக்கி கொள்வார். 

 அவ்வளவு நேர்மையான கதாபாத்திரத்தை மிக அழகாக செய்திருக்கிறார் நடிகர் சூரி. அதேபோல விடுதலை படத்திலும் ஒரு நேர்மையான போலீஸ் காரனாக நடித்து இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கு வெற்றிமாறன் நல்ல வாய்ப்பு கொடுப்பார் என்று கருதப்படுகிறது.

 இது ஆனந்த விகடன் பேட்டியில் இயக்குனர் வெற்றிமாறன் அவரது படைப்பு அழகாக அற்புதம்மாள் அவர்களின் வாழ்க்கை போராட்டத்தை படமாக எடுக்க இருப்பதாக கூறியிருந்தார். அந்த செய்தியை பல வருடங்களுக்கு முன்பே ஒரு யூடியூப் சேனலுக்கு பதிலாக அளித்திருந்தார் நீங்கள் யாருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் அற்புதம்மாளின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கிறேன் என்று கூறி இருந்தார். 

 அந்த செய்தி வந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக போகிறது இருந்தாலும் அந்த செய்தியை இப்போது வரை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.  ஆனால் ஆனந்த விகடனில் பேட்டியில் வந்த பதிலுக்கு இப்போது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்று தான் கூற வேண்டும். அதே சமயம் இந்த பதிலை நிறைய பெர் எதிர்க்கவும் செய்கிறார்கள்.  முதலில் அற்புதமாள் யார் என்று பார்ப்போம். அற்புதம்மாள் ஒரு போராளியாக நிறைய பேருக்கு தெரியும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஒரு விஷயத்திற்காக போராடிக் கொண்டு வருகிறார் என்ன விஷயம் என்றால் அவர் தன் மகனை ஜெயிலில் அடைத்து வைத்திருக்கிறார்கள் அதற்கு அதிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறார் என்பது நாம் அறிந்த விஷயம்.  ராஜீவ் காந்தி கொலை வழக்கின் பேரில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் அவர் ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கு திட்டமிட்ட நபர்களுக்கு இரண்டு பேட்டரிகளை வாங்கி கொடுத்தார் என்பது தான் அவர் செய்த குற்றமாகப் பார்க்கப்படுகிறது. விக்கிப்பீடியாவில் கூட அவருடைய குற்றம் இரண்டு பேட்டரிகளை வாங்கி கொடுத்தது என்று காணப்படுகிறது.  பேரறிவாளனை சிறையில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்பதற்காக அவர் தயாராகி பல வருடங்களாக போராடி வருகிறார் அந்த போராட்டத்தை வெற்றிமாறன் படமாக எடுக்கிறார் என்ற தகவலை சமூக வலைதளங்களில் கலைஞர் தொலைக்காட்சியும் சன்நியூஸ் தொலைகாட்சியில் செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர். அப்போது சமூக வலைதளங்களில் அதற்கு நிறைய எதிர்ப்பு கிளம்பியது. அவர்கள் என்ன மாதிரியான கமெண்ட் போட்டு இருக்கிறார்கள் என்பதை கீழே தொகுத்து கொடுத்துள்ளோம் அந்த கமண்ட்களை பாருங்கள்.

 

 1. தீவிரவாதியின் தாயை தியாகியாக சித்தரிக்க முயல்கிறார் .. வெற்றிமாறனின் பெயர் இனி தோல்வி மாறன் ஆக மாறிவிடும்…
 2. மூஞ்சிய பார்க்கும்போதே நெனச்சேன் நீ அந்த group ஆகத்தான் இருப்பன்னு.
 3. குடிகெடுத்தவன் சீமானுக்கு ஒரு காட்சி வைத்து அவனை அம்பலபடுத்துங்கள்
 4. இதுவரை வெற்றி படமாகக் கொடுத்தீர்கள் இதிலிருந்து தோல்வி முகம் துவங்கப் போகிறது
 5. தீவிரவாதியை பெற்றதற்கு ஒரு பெண் எப்போதோ தூக்கு போட்டு செத்திருக்க வேண்டும்..மீறியும் உயிரோடு வாழ்வதன் அர்த்தம் வெட்கம்,  மானம், சூடு, சொரனையற்ற நாத்திக அல்லது எந்த அற்புதமுமே நடக்காத மதமாற்ற கும்பலின் அடிவருடியாய் இருப்பதுதான் காரணம்..

அதனை கதையாய் எடுப்பவன் மேலே குறிப்பிட்ட வகையறாவை சேர்ந்தவனாகத்தான் இருப்பான்…

 1. பேர் என்னப்பா? “கொலைகாரனின் தயார் ” என்று பேர் வெய்டா
 2. ஆமாம் ஆமாம் பேரறிவாளன் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு அவர் சிறை சென்று அவதிப்படுகிறார் அவர்து தாயின் நிலைமை ரொம்ப பரிதாபமாக இருந்தது அதனை கண்டிப்பாக படம் எடுக்க சொல்லுங்க வாழ்த்துக்கள் 
 3. கொலைகார பயலுக்கு ஆதரவு தரும் தமிழ் சினிமாவின் நிலமையை..மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்
 4. அதில் அற்புதம்மாள் ஒடுக்க பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் ஆனால் எதிரிகள் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள்.
 5. ஒரு தருதலையை பெற்றதற்கு பொறம்போக்கு ஒருவன் செய்யும் ஒரு சிறப்பு
 6. ஒரு தேசிய தலைவனை கொன்ற கும்பலுக்கு சொம்படிக்கும் இந்த தி.மு.க போராளி கூட்டம் நாசமாய் போவது உறுதி. 1991 ஐ விட  மோசமான நிலையை தி.மு.க கூடிய சீக்கிரம் சந்திப்பது உறுதி

எப்எப்படி இருக்கிறது இந்த கமெண்ட்டுகள் எவ்வளவு வன்மம் நிறைந்த கமெண்ட்டுகள்… இது எவ்வளவு வக்கிரமான மனிதர்களை எல்லாம் பிரதிபலிக்கிறது.  இந்த கமெண்ட் களுக்காகவே இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தை மிக உன்னதமான படைப்பாக மிக உண்மையான படைப்பாக எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இயக்குனர் வெற்றிமாறனின் பொல்லாதவன் படத்தை தவிர்த்து மீதி படங்கள் அனைத்தும் இந்திய அளவில் சர்வதேச அளவில் கவனம் பெற்ற படமாக விளங்குகின்றன.  ஆடுகளம் படம் இந்திய அளவில் கொண்டாடப்பட்டது ஆறு தேசிய விருதுகளை வாங்கியது.  இதுவரை இந்தியாவிலேயே அதிக விருதுகளை வென்ற படம் என்ற பட்டியல் எடுத்தால் அதில் முதல் ஐந்து இடங்களில் ஆடுகளம் படம் இடம் பிடிக்கும். அதை தொடர்ந்து தனது மூன்றாவது படமான விசாரணை படத்தை வெனிஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கச் செய்தார் இயக்குனர் வெற்றிமாறன்.   வெனிஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை அந்த படம் பெற்றது. லாக்கப் என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த படம் சர்வதேச அளவில் பெயர் பெற்றது. அதுமட்டுமில்லாமல் ஆஸ்கர் விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டது. 

 அதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படம் சீனாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்துகொண்டது ஆனால் அந்த படம் தேசிய விருது பெற வில்லை அதனால் தமிழர்கள் அந்த படத்திற்கு தேசிய விருது கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்கள் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட அசுரன் படம் 3 தேசிய விருதுகளை வென்றது இந்த அளவுக்கு கவனம் பெறக்கூடிய ஒரு இயக்குனர் பேரறிவாளனின் விடுதலை வழக்கு குறித்த விவகாரம் வெற்றிமாறன் அவர்களால் படமாக எடுக்கப் பட்டால் அது இந்திய அளவில் சர்வதேச அளவில் பேசப்படும். அப்படி பேசப்பட்டால் பேரறிவாளனுக்கு கூடிய விரைவில் நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Related Articles

காகிதம் சேர்ப்பவரின் மகன் மருத்துவ படிப்... மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ளது விஜய்கஞ்ச் மண்டி. இப்பகுதியில் உள்ள குப்பைகளைச் சேகரித்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர் ரஞ்சித் மற்ற...
வீட்டுக்குப் பொருட்களை அனுப்பி வைக்கும் ... தொழில்நுட்பம் முன்பு மனிதர்கள் செய்துவந்த மிகக் கடினமான வேலைகளை எளிமையாக்கியது, பிறகு அவர்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிப்போனது. ...
கர்நாடக அரசியலில் புதிய டுவிஸ்ட்! –... நடந்து முடிந்த கர்நாடக தேர்தலை  ஒட்டுமொத்த இந்தியாவே மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. காரணம் கர்நாடகா வழியாக தென் இந்தியாவில் கால் ப...
” பிகில் ” படம் பற்றிய சுவார... தளபதி விஜய்க்கு தந்தை மகன் என்று இரட்டை வேடம். தந்தை மதுரை மார்க்கெட்டில் கசாப்புக்கடை நடத்துகிறார். மகன் மைக்கேல் புட்பால் வீரராக இருக்கிறார். ...

Be the first to comment on "தீவிரவாதியை நல்லவனாக்க பார்க்கிறாரா இயக்குனர் வெற்றிமாறன்?"

Leave a comment

Your email address will not be published.


*