கதாபாத்திரங்கள் :
- வேதாசல முதலியார் – வட்டியூர் ஜமீன்தார்
- சரசா – வேதாசல முதலியாரின் மகள்
- மூர்த்தி – வேதாசல முதலியாரின் மகன்
- அமிர்தம் – வேலைக்காரி
- சொக்கன் – வேலைக்காரன்
- முருகேசன் – அமிர்தத்தின் தந்தை
- சுந்தரம்பிள்ளை – அவ்வூரில் வாழ்பவர்
- ஆனந்தன் – சுந்தரம்பிள்ளையின் மகன்
- மணி – ஆனந்தனின் நண்பன்
- முத்தாயி – அமிர்தத்தின் அம்மா
- பாக்கியம் – 55 வயது மாப்பிள்ளையின் தங்கச்சி
கதைச் சுருக்கம் :
வேதாசல முதலியார் வீட்டுக்கு சொக்கன் துணி பார்சல் கொண்டு வருகிறான். அதென்னது என வே கேட்க சரசம்மா மாதர் சங்கத்துல டான்ஸ் ஆட கேட்ருந்த துணி என சொல்கிறான் சொக்கன். அமிர்தத்திடம் சரசாவை அழைத்துவர சொல்கிறார் வேதாசலம்.
அமிர்தம் ஓடிவந்து சரசாவிடம் சொல்ல என்னடி ஓட்டமும் ஆட்டமும் என எரிந்து விழுகிறாள் சரசா. ஏன் எரிஞ்சு விழுற என மூர்த்தி கேள்வி கேட்க சரசா மூர்த்தியை பழித்து பேசிவிட்டு அப்பாவிடம் செல்கிறாள். அப்பா துணிக்கு காசு சங்கத்திலே வாங்கி தந்திடுமா என சொல்ல சரசா சரிப்பா என்கிறாள். சுந்தரம்பிள்ளை வாங்கிய கடன் என்ன ஆச்சு என சொக்கனிடம் வேதா கேட்க சொக்கன் அவனை அரஸ்ட் பண்ணிடலாம் என ஐடியா கொடுக்கிறான். வேதாசலம் சுபிள்ளையை அரஸ்ட் பண்ணிடுவேன் என மிரட்டி செல்ல… கையில் காசில்லாத சுபி தற்கொலை செய்துகொள்கிறார். சுபியின் மகன் ஆனந்தன் கையில் 2000ம் பணத்துடன் வெளியூர் வேலையிலிருந்து வருகிறான். வரும் வழியில் நண்பன் மணியை சந்தித்து பேசிக்கொண்டே வருகிறான். மணி கேடி ஆன கதையை ஆனந்தனிடம் கூறுகிறான்.
ஆனந்தன் வீட்டிற்கு வந்து பார்க்க அப்பா சுபி மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து அதிர்ந்த ஆனந்தன் அப்பா எழுதிய லட்டரைப் படித்து வேதாசலம் செய்த கொடுமைகளை சொல்லி ஒரே சொந்தத்த்தை இழந்துவிட்டேனே என அழுகிறான்.
மாதர் சங்கத்தில் சரசாவின் நடனம் அரங்கேறி முடிக்க அமிர்தத்தை மட்டம் தட்டிய சரசா தான் பெண் விடுதலைக்குப் போராடுவதாகவும் பெண்கள் அனைவரும் சமம் எனவும் பேசுகிறாள். சரசாவின் சேலையை அமிர்தம் மடித்து வைத்து அழகு பார்க்க சரசா அவளை திட்டுகிறாள், செருப்பை துடைத்து வை என வீசுகிறாள்… இதை பார்த்த மூர்த்தி சரசாவை பணத்திமிர் பிடித்தவள் என திட்டுகிறான்.
ஆனந்தன் வேதாவை வெட்டி பழிதீர்க்க முயல மணி அவனை தடுத்து கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு, எந்த ஊர் வேதாவை கொண்டாடுகிறதோ அதே ஊர் வேதாவை திட்ட வேண்டும் அழிக்க வேண்டும் அதற்கு யோசி என்கிறான். ஆனந்தன் யோசிக்கிறான்.
வேதாசலம் வீட்டில் முனியான்டி என்பவன் தர வேண்டிய கடன் பற்றி பேசுகிறார்கள். அமிர்தத்தின் தந்தை முருகேசன் அமிர்தம் மாப்பிள்ளைக்கு வயசாயிடுச்சு கட்டிக்க மாட்டேன் என்று சொன்னதை வேதாவிடம் கூறுகிறான். வேதா அமிர்தத்ததை அதட்டி அறிவுரை சொல்கிறான்.
அமிர்தம் சரசாவிடம் தன் கஷ்டத்தை சொல்லி அழ, நீ என்ன பெரிய மகாராணியா கிழவனை கட்டிக்க மாட்டியா தகுதிக்கு தகுந்தாப்ல ஆசைப்படு என்று அதட்டுகிறாள் சரசா. மூர்த்தியோ அமிர்தத்திற்கு ஆதரவாக பேசி கல்யாணத்தை நிறுத்த ஒரு ஐடியா கொடுக்கிறான்.
மாப்பிளை வீடு பெண் பார்க்க வருகிறார்கள். அமிர்தத்தை தனியே அழைத்து மாப் தங்கச்சி தனியாக பேச அமிர்தத்தின் முட்டாங்கண்ணையும் தெத்துப் பல்லையும் பார்த்து பயந்து அமிர்தத்தின் அம்மாவோடு சண்டை போட்டு பெண் வேண்டாமென கிளம்புகிறார்கள். நடந்ததை மூர்த்தியிடம் தெரிவிக்கிறாள் அமிர்தம். மூர்த்திக்கு அமிர்தம் மீது ஒரு கண். உனக்கு இந்த வீட்டில் யார் மேலயாவது ஆசை இருக்கா என கேட்க சரசா வர அமிர்தம் சரசாவிடம் வழக்கம்போல திட்டு வாங்கிக்கொண்டு கிளம்புகிறாள்.
மணி கடன் கொடுத்தவனிடம் காசு வாங்கவில்லை என காளி கோயிலில் அடித்து சத்தியம் செய்கிறான். ஆனந்தன் அதிர்கிறான். கடன் கொடுத்தவன் ஆனந்தனை மானக்கேடா திட்ட வேலை போக தற்கொலை முயற்சிக்குப் போகிறான் ஆனந்தன். அதைக்கண்டு மணி புத்திமதி சொல்லி வேதாசலத்துக்கு காளியின் அருள் கிடைத்துள்ளது ஜமீனாக வேதாசலம் உயர்ந்துள்ளான் என்றதும் காளி கோவிலுக்குச் செல்கிறான் ஆனந்தன். காளியிடம் நீதி கேட்டு காளியை அசிங்கப்படுத்துகிறான் ஆனந்தன். காளியை அவமானப் படுத்துகிறான், அவனை ஊர் துரத்துகிறது… வழியில் மணி மீது மோத இருவரும் ஒரு இடத்தில் ஒழிய அந்த இடத்தில் ஆனந்தனைப் போன்றவனின் பிணம் கிடக்கிறது, அவனுடைய டைரியைப் படித்துப் பார்த்து பரமானந்தன் தான் இறந்தவனின் பெயர், அவனுக்கு தாய் மட்டுமே தாய்க்கு கண்ணு தெரியாது என்ற தகவல்களை தெரிந்ததும் ஆள்மாறாட்டத்திற்கு ஐடியா கொடுக்கிறான் மணி.
பரமானந்தம் 10 வருடங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து கிளம்பி லண்டன் பாரீஸ் என சுற்றியவன், அவன் அம்மாவிற்கு கண் ஆப்ரேசன் என தெரிந்ததும் ஊர் திரும்பியுள்ளான், அவனிடம் அதிக வைர நகைகள் உள்ளதை நோட்டமிட்ட யாரோ அவனை போட்டு தள்ளி இருக்கிறார்கள். அதை மணியும் ஆனந்தனும் பயன்படுத்திக் கொண்டு பரமானந்தனின் தாயாரிடம் செல்கிறார்கள்.
பரமானந்தனின் தாயார் அவனை பார்த்து மகிழ்கிறாள். மணியை யார் என்று விசாரித்து பரமானந்தனின் நண்பன் என்றதும் சந்தோசம் என சொல்லி பரமானந்தனுக்கு வேதாசலம் மகள் சரசாவை கட்டி வைக்கலாம் என முடிவெடுத்துள்ளேன் என தாயார் சொல்ல மணி மகிழ்கிறான். தேனீர் விருந்துக்கு வேதாசலத்துக்கும் அவள் மகள் சரசாவுக்கும் அழைப்பு எழுதுகிறான் மணி. ஊரிலயே பணக்கார குடும்பம் பரமானந்தனின் குடும்பம் என்பதால் சம்மதிக்கிறான் வேதாச்சலம்.
தேனீர் விருந்தை ஆனந்தனும் மணியும் எப்படியோ சமாளிக்கிறார்கள். சில நாட்களில் பரமானந்தனுக்கும் சரசாவுக்கும் திருமணம் நடந்து முடிகிறது. வேதாசலத்தை பழிவாங்கும் படலங்களை ( திட்டங்களை ) பரமானந்தனிடம் எடுத்துரைக்கிறான் மணி.
சரசா அமிர்தத்தின் மூஞ்சியில் எச்சில் ஆப்பிளை தூக்கி வீசுகிறாள். பரமானந்தனின் கார் வருகிறது. திட்டம் போட்டது போலவே சரசாவை கொடுமைபடுத்துகிறான் பரமானந்தன்.
மூர்த்தி அமிர்தாவிடம் தன் காதலை தெரிவிக்கிறான். அடுத்த சில நேரத்தில் அமிர்தாவிடம் தவறாக பேசுகிறான் பரமானந்தன். அந்த இடத்திற்கு வந்த சரசா வழக்கம்போல அமிர்தாவை அதட்டுகிறாள். என்ன நடந்தது என வினவ அமிர்தா நடந்ததை சொல்ல சரசா அதற்கும் அமிர்தாவையே பழி சொல்கிறாள். மூர்த்தி பரமானந்தத்தை எச்சரிக்கிறான். மூர்த்தி அமிர்தா காதல் விவகாரத்தை வேதாவிடம் சொல்ல முற்படுகிறான் பரமு. வேதாவிடம் மூர்த்தியும் அமிர்தாவும் கொஞ்சி கொலாவும் காட்சியை காட்டுகிறான் பரமு. இதனால் பரமு திட்டம் போட்டபடி மூர்த்திக்கும் வேதாவுக்கும் சண்டை வருகிறது. அமிர்தாவை டச்சு கிச்சு பண்ணி இருந்தா சொல்லு காசு கொடுத்து ஊரைவிட்டு தொரத்திடலாம் என சொல்ல வாழ்ந்தா அமிர்தாவோடு தான் வாழ்வேன் என வீட்டைவிட்டு வெளியேறுகிறான் மூர்த்தி.
அமிர்தாவை பார்க்க செல்கிறான் மூர்த்தி. வேதாசலம் திட்டியதால் முருகேசன் அமிர்தாவை வெட்ட கிளம்புகிறான். மூர்த்தி சென்னை கிளம்பி நண்பர்கள் உதவியுடன் அமிர்தாவை திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறான். அமிர்தா தன் வீட்டிற்குப் போக அங்கு கோபத்தோடு அமர்ந்திருக்கிறார் முருகேசன். நண்பர்கள் சொன்ன ஐடியாபடி இரவோடு இரவாக அமிர்தத்த்தை சொந்த ஜாதியை சேர்ந்தவனுக்கு கட்டி கொடுக்க முற்படுகிறான் முருகேசன். வீட்டை கொழுத்துக்கிறான். வீட்டிலிருந்த அனைவரும் எரிந்து சாம்பலாகிவிட்டதாக சென்னை நண்பர்களீன் உதவி கிட்டாத மூர்த்தியிடம் சொல்கிறார்கள். பிறகு மூர்த்தி குரு ஹரிஹரிதாஸ் ஆசிரமத்தில் சேர்கிறான்.
பரமு வேதாச்சலத்திடம் சண்டை போட்டுக்கொண்டு மேலும் கடுப்பேற்றிவிட்டு சரசாவை தன்னுடன் அழைத்துச் செல்கிறான். மூர்த்தி இருக்கும் ஆசிரமம் பெண்களுடன் கூத்தாடும் ஆசிரமம் எனத் தெரிந்ததும் ஹரியை கொன்றுவிட்டு ஆசிரமத்தாட்களிடம் சிக்கி கொள்கிறான் மூர்த்தி.
எரியும் வீட்டிலிருந்து தப்பி வந்த அமிர்தம் பழங்கள் உள்ள லாரியில் ஏற லாரிக்காரர் அவளுடைய கதையைக் கேட்டு பரிதாபப்பட்டு பழங்கள் விற்க அனுப்புகிறார்.
சரசாவை தனது குடிசை வீட்டுக்கு அழைத்துச் சென்று வேலை வாங்கி கொடுமை படுத்துகிறான் ஆனந்தன். தோட்டத்தில் உள்ள காய்கனிகளை பறித்து மார்க்கெட்டில் விற்று வா என சரசாவை அனுப்புகிறான்.
அமிர்தம் பழக்கூடையை எடுத்துக்கொண்டு வீதி வழியே விற்றபடி வருகிறாள். அமிர்தத்தை பாலு முதலியார் தூக்கிச் செல்கிறார். டாக்டரிடம் செல்கிறார்கள். பாலு முதலியார் தன் மகள் சுகிர்தத்தை இழந்த சோகத்தில் பைத்தியமானதால் அவருடைய பைத்தீயத்தை அமிர்தத்தை வைத்து சரி செய்கிறார் டாக்டர். அந்த பணக்கார முதலியார் அமிர்தத்தை தன் மகளாகவே வளர்க்கிறார். மணி வேதாவால் ஊரைவிட்டு போன ஒரு பெண் ஹரி ஆசிரமத்தில் சுந்தரகோஷாக இருந்ததை சொல்ல… பரமு சென்னையில் அமிர்தம் பணக்காரியாக இருந்ததை சொல்கிறான்… மூர்த்தி கைது செய்யப்படுகிறான்… வழக்கு கோர்ட்டிற்கு வருகிறது…
வடநாட்டு வக்கீலாக பரமுவும் அவனின் வேலையாளாக மணியும் மாறுகிறார்கள். சுந்தரகோஷ் பெண் வேடமிட்டு ஹரியுடன் உல்லாசமாக இருந்ததால் தான் இந்தக் கொலை நடந்தது என்று விளக்குகிறார் வடநாட்டு வக்கீல். பல வருடங்களுக்கு முன் ஜெயிலிலிருந்து தப்பிய பண்டாரி பக்கிரி தான் ஹரிஹரதாஸ் என தெரிய வருகிறது. இந்த வழக்கிலிருந்து விடுதலையான மூர்த்தியிடம் வடநாட்டு வக்கீல் பாலுவின் மகளை கல்யாணம் செய்துகொள்ள சொல்கிறார். அடையாளம் மாறிப் போன சுகிர்தமும் மூர்த்தியும் பாலு வீட்டில் சந்தித்துக் கொள்கிறார்கள்.
மூர்த்திக்கும் சுகிர்தத்திற்கும் திருமணம் நடக்கிறது. ஆனந்தன் நடந்த அத்தனை உண்மைகளையும் கூறுகிறான். அனைவருடைய வேடமும் களைகிறது. வேதாசலம் மனம் திருந்துகிறார். ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்கிறார்…!
பிடித்த வரிகள் :
- நல்லவனுக்குத் தான் இந்தப் பொல்லாத உலகில் நாணயமாகப் பிழைக்க வழியில்லையே!
- ” மூட்டை சுமந்தவனுக்கல்லவா தெரியும் கழுத்து வலி… ”
” வலி இருக்கிறதென்று கருங்கல்லில் முட்டினால் வலி தீராது, மண்டை தான் உடையும்… ”
- தர்மம், கர்மம் எல்லாம் தலை முழுகி நெடுநாளாகிவிட்டது…
- பைத்தியக்காரன் உழைக்கிறான் மாடு போல… சம்பாதிக்கற காசையெல்லாம் கர்ப்பூரமாக வாங்கிக் கொளுத்துகிறான். ( சிகரெட் பிடித்தல் ).
- அதிர்ஷ்டம் வந்து அணைத்துக் கொள்ளும் போது அடிமுட்டாளாக இருக்காதே.
- எந்தப் பொருளும் ஒருவனிடம் இருக்கும் போது அது அவனுடையது, அதற்கு முன்பு அது வேறொருவனுடையது.
- பணக்கார உலகம் மிகவும் விசித்திரமானது. முட்டாள் புத்திசாலியாகப் போற்றப்படுவான். வீரன் கோழைப் பட்டம் பெறுவான். கோழை வீரன் படம் பெறுவான். அவலட்சணமாக இருந்தாலும் அழகனாகக் கருதப்படுவான்.
- அமாவாசையில் நிலவேது? காமவெறி பிடித்தவனுக்கு தர்மம் ஏது?
விமர்சனம் :
அண்ணாவின் இந்த வேலைக்காரி ஒரு நாடகம். 92 பக்கங்கள் 54 காட்சிகளை உடையது. முழுதும் படித்து முடிக்க வெறும் மூன்று மணி நேரம் போதும். அவ்வளவு சுவாரஸ்யமாகச் செல்கிறது நாடகம். குறிப்பாக ஆனந்தன் வழியாக வரும் டுவிஸ்ட்டுகள் எல்லாம் பக்கா மாஸ்… இந்த நாடகத்தை படித்து முடித்த பிறகு அண்ணாவை ” அட்டகாசம் அண்ணாத்துரை ” என்று பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்.
Be the first to comment on "அண்ணாவின் ” வேலைக்காரி ” நாடகம் ஒரு பார்வை! – அட்டகாசம் அண்ணாதுரை!"