மார்ச் 8 – 5 years of நிமிர்ந்து நில்! மெய்சிலிர்க்க வைக்கும் வசனங்கள்!

5 Years of Nimirndhu Nil

* “சிலையும் நீயே சிற்பியும் நீயே, உன்னை நீ சரிசெய்துகொள்… உலகம் தானாக சரியாகி விடும்… ”

 

* ” ஒழுக்கம், உண்மை, நேர்மை, பெரியவங்கள மதிக்கறது, சக மனிதனை மனுசனா பாக்குறது இதத்தான் எங்க குருகுலத்துல கத்து தரோம்… இத படிச்சாவே படிப்பு தானா வரும்… ”

 

* ” கல்லூரியவிட்டு எடுத்து வைக்கற அடி தான் சமூகத்தில நீங்க எடுத்து வைக்கற முதல் காலடி… இந்த சமூகம் தான் உங்களுக்கு வாழ்க்கைய கத்துக்கொடும் வாழவும் கத்துக்கொடுக்கும்… ”

 

* ” ஆபிஸ்ல இருக்கற பாதி பேர்ட்ட இவ இப்படித்தான் பேசிட்டு இருக்கா… இந்த மூதேவிகளும் நம்மகிட்ட மட்டும்தான் பேசிட்டு இருக்குறான்னு நம்பிக்கிட்டு இருக்காங்க… பொய் தான்… ஆனா பேசணும்… பேசுனதா அவ வண்டி ஓடும்… பிக்கப்புக்கு ஒருத்தன், டிராக்கப்புக்கு ஒருத்தன், பிரியாணிக்கு ஒருத்தன், டாப்அப்க்கு ஒருத்தன் பீச்சுக்கு ஒருத்தன், பீட்சாவுக்கு ஒருத்தன்னு அடிமைகள தரவாரியா பிரிச்சு வச்சிருக்காங்க… ”

 

* ” நடிப்புதான் ஆனா நடிக்கனும்… நடிச்சா தான் அவன் வண்டி ஓடும்… உலக நாயகனவே தூக்கி சாப்ட்ற நடிகர்களை எல்லாம் தூக்கி சாப்ட்ன நடிகர்கள் எல்லாம் உள்ளூர்ல இருக்காங்கையா… தூங்கும்போது கூட பிரம்மாதமா பெர்பார்ம் பண்ணுவாங்க… ”

 

* ” ஸ்பீட் லிமிட் 30 KM, எல்லோரும் பாலோ பண்ணத்தான் ரூல்ஸ்… நாம மட்டும் பாலோ பண்ணா பூல்ஸ்ஸ்… ”

 

* ” என்னங்க எங்க நிக்கிறிங்க… எல்லோரும் நிக்கிறாங்கள்ள அந்த மாதிரி பேசாம நில்லுங்க… நமக்கு எதுக்கு வம்பு… ”

 

* ” இவிங்க எல்லார்க்காகத் தான பேசுன எவனாவது ஒருத்தன் வந்தானாயா… நம்ம ஊர்ல மட்டும்தாயா கூட்டமா இருப்பாங்க… ஆனா தனித்தனியா இருப்பாங்க… ”

 

* “அரவிந்த் எப்படிப்பா இருக்க”

” சட்டை கிழிஞ்சு நடுரோட்ல நிக்குறன் சார்… ”

” என்ன சொல்ற… ஏன்… ”

” அன்புடைமை, அறிவுடைமை, இன்னா செய்யாமை, ஒழுக்கமுடைமை, வாய்மை, தீவினை யெச்சம், இது எதுவுமே இங்க வேலைக்கு ஆகல சார்… உலகம் வேற மாதிரி இருக்கு… படிச்சதலாம் கொண்டு போய் லைஃப்ல அப்ளை பண்ணுவியா…அது வேற இதுவேறப்பா… அப்டின்னா நான் 17 வருசம் படிச்சதெல்லாம் வேஸ்ட்டா சார்…  இதான் வாழ்க்கைனா எனக்கு இது கத்துக்கொடுத்திருக்கலாமே சார்.,, அதெல்லாம் கத்துக்கொடுக்க முடியாதுப்பா.,, அனுபவத்துல நீயா தான் கத்துக்கணும்… சிரிக்க வேண்டிய இடத்துல சிரிக்கனும்… மொறைக்க வேண்டிய இடத்துல மொறைக்கனும், கொடுக்க வேண்டிய இடத்துல கொடுக்கனும், அட்ஜெட்ஸ்ட் பண்ண வேண்டிய இடத்துல அட்ஜெஸ்ட் பண்ணனும்… சர்வைவல் ஆப் த பிட்டெஸ்ட்… விபச்சாரம் பண்ண சொல்றிங்களா சார்…

 

* “இப்ப எதுக்கு காசு கொடுத்த…”

” கொடுக்கனும் கொடுக்கலனா திருவிட்டு போயிடுவாங்க… ”

 

* ” உலகம் எவ்வளவு வேகமா போவுதுன்னு பாத்திங்களா… நம்மளும் கூட சேந்து தம் கட்டி ஈடுகொடுத்து ஓடனும் பிரதர்… இல்லன்னா மொக்க பீசுன்றாவுங்க… ”

 

* ” பொம்பள புள்ளைங்க வாயால வாடா போடான்னா கேக்கறதுக்கே நல்லே இருக்குல்ல…”

 

* ” ஊருக்குள்ள நல்லவங்களும் இருப்பாங்கப்பா… ”

 

* ” இங்க பாத்தாலும் பாக்காத மாதிரி தெரிஞ்சாலும் தெரிஞ்ச மாதிரி தான் இருக்கனும் ”

 

* ” இந்தக் காலத்து பொண்ணுங்களுக்கு நல்லவன் தேவ இல்ல சார்… வல்லவன் தான் தேவை… உங்கள மாதிரி ஆட்கள பார்க்கலாம் ரசிக்கலாம்…  ரோல் மாடல்னு கூட சொல்லிக்கலாம்… கூடலாம் வாழ முடியாது…

 

* ” உன்ன மாதிரி வாழ்றது ரொம்ப கஷ்டம்… அட்லீஸ்ட் உன் கூடயாவது வாழலாமே… ”

 

* ” எம்புட்டு வேகமா பழகுறாங்களோ அதவிட வேகமா அத்துவிட்றாங்களே… ”

 

* ” நான் படிச்ச படிப்பெல்லாம் இந்த நாட்டுக்குத் தான் யூஸ் ஆகனும்னு சொன்னியில்ல… உன் படிப்புக்கெல்லாம் இங்க வேலையில்ல… படிப்பு யாருக்கையா வேணும்… மனுசங்கள படிக்கனும்யா… ரெண்டரை வயசுல பள்ளிக் கூடத்துக்குப் போகும்போதே யார் எத கொடுத்தாலும் வாங்காத, முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட பேசாத சிரிக்காதன்னு சொல்லி அனுப்புறாங்கய்யா… அந்த வயசுல ட்யூன் பன்றாங்க இந்த சொசைட்டிக்கு ஏத்த மாதிரி… அதெல்லாம் உங்கம்மா உனக்கு சொல்லிக் கொடுக்கல… நீயிந்த சொசைட்டிக்கு அன்பிட்யா..,”

” நான் என்ன தப்பு பண்ணேன்… ”

” நீ எந்த தப்பும் பண்ணல… அதான் தப்பு… எல்லோரும் அம்மணமா திரியும்போது நீ மட்டும் கோமணம் கட்டுனா பாக்குறவனுக்கு உறுத்துமல்ல… எதிர்ல வர எல்லா அம்புக்கும் நீ மட்டும் ஏன்யா உன் நெஞ்ச காட்டுற… ”

” அம்பு என்ன நோக்கித் தானடா வருது… நான் தான பேஸ் பண்ணனும்… ”

” யார நோக்கி வரல… எல்லோர் நோக்கியும் தான் வருது… அவஅவன் விலகிக்குறான்யா… இல்லனா மத்தவங்கள பிடிச்சு உள்ள விடுறுயான்… ”

 

* ” ஊருக்குப் பயந்து ஓட சொல்றியா… ”

” உன்ன ஓட சொல்லலப்பா… விலகி போன்றேன்… ”

 

* ” நம்ப நாட்டுல போலிக்கு மட்டும் தான் போலி வரல… ”

 

* “விலங்குகள் கூட ஆபத்து வரும்போது மட்டும் தான் பயப்படும்… மனுசன் தான் எல்லாத்துக்கும் பயப்படுறான்… ”

 

* ” நிஜம் ஜெயிக்கும்… என்ன கொஞ்சம் லேட் ஆகும்… ”

 

* ” இந்த நாட்ட ஆள்றது அரசியல்வாதிங்க இல்ல… அரசு அதிகாரிங்க தான்… அரசியல்வாதிங்கள விடா அதிகமா ஊழல் பண்றதும் அவுங்க தான்… ”

 

* ” படிப்பறிவு இல்லாத பொது அறிவு இல்லாத… ஏன் முன் அனுபவம் கூட இல்லாத ஒருத்தருக்கு ஓட்டுப் போட்டு நம்ம எம்எல்ஏ எம்பின்னு ஆக்கிவிட்டுறோம்… அவிங்கள வழி நடத்துறது யாரு சார்… அரசு அதிகாரிங்க… சார் அரசியல்வாதிங்களுக்கு வயசு அஞ்சு தான்… அரசு அதிகாரிங்களுக்கு 58 வயசு வரைக்கும் இருக்கு… அப்ப யாருக்கு சார் ரெஸ்பான்ஸிபிலிட்டி அதிகம் இருக்கணும்… ஒவ்வொரு கவுர்மெண்ட் ஆபிஸ்லயும் நாலு நல்லவன் இருப்பான்… அவனுக்கு பிரஸ்டீஜ் பத்மநாபன், அட்டகத்தி, டார்ச்சர், சிடுமூஞ்சின்னு பட்ட பேரு கட்டி அசிங்கப் படுத்தி வச்சிருப்பாங்க… அவ எண்ணிக்கைல கொறைவா இருக்கான்… அவனால ஈசல் மாதிரி இருக்குற இந்தக் கூட்டத்த ஜெயிக்க முடியல… ஆனா அவனுக்குள்ள ஒரு கோபம் இருக்கும்… ஒரு வலி இருக்கும்… நாம நேர்மையா இருக்கோம்… மரியாதை இல்ல… தப்பு பண்றவன்லா சந்தோசமா இருக்கான்னு… ”

 

* ” இத குடிங்க பேசுவோம்… ”

” உன் டீக்கு நீ காசு கொடுத்துடு… என் டீக்கு நான் காசு கொடுத்தறன்… ”

 

* ” எல்லாருமே ஸ்ட்ரெய்ட் பார்வேர்டா இருக்கனும்னு தான் வரான்… கூட இருக்கறவன் தட்டி தட்டி திருப்பி விட்டுறான் தம்பி… ”

 

* ” தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி… ”

 

* ” நேர்மை நியாயம்னு சொல்லி குடும்பத்த பறிகொடுத்துட்டன்… ”

 

* ” ஊழல் பன்றதுல காட்டுற கண்டிப்பையும் புத்திசாலித் தனத்தையும் நாம செய்யுற வேலைல காட்டுனா நாம இருக்குற இடமே சொர்க்கமா இருக்கும்.. ”

 

* ” எதுக்கு சார் உண்மையா இருக்கணும்… எல்லோரும் சரியா இருந்தாங்கன்னா நாமளும் இருக்கலாம்… தப்பா இருந்தாங்கன்னா நாம ரொம்ப தப்பா இருக்கனும்… ”

 

* ” ஒவ்வொரு நிமிசத்துக்கும் காசு வேணும்… அது நல்லவன் கெட்டவன் பாத்தெல்லாம் போய் சேர்றது இல்ல… வீணா போனவன் விளங்காதவன்டால்லாம் கொட்டி கிடக்கு… நமக்கு வேணும்னா நாம தான் சம்பாதிக்கனும்… சார் தப்பா சரியா செஞ்சா தப்பே இல்ல சார்… ”

 

* ” எந்த பிரச்சினை வந்தாலும் பாதிலயே நிறுத்திட்றது… எதுக்கும் சொல்யூசனே கண்டுபிடிக்கறது இல்ல… ஆட்சில இருக்கறவங்களுக்கு அப்போதைக்கு தப்பிச்சிக்கிட்டா போதும்… அதுக்கு மட்டும் எங்கள யூஸ் பண்ணிக்குறாங்க… தனியாவும் செயல்பட விடமாட்டாங்க… அதிகாரத்த அவிங்க பாக்கெட்ல வச்சுக்கிட்டு விளையாட்டு காட்டுறாங்க… ”

 

* ” பரபரப்பா ஒன்னு சொல்வாங்க… நாளைக்கு இதவிட பரபரப்பா இன்னொன்னு சொல்லி இத மறக்கடிச்சிடுவாங்க… நம்மள மட்டும் பதட்டமாவே வச்சிருப்பாங்க… ”

 

* ” ஏன் இவ்வளவு கோபம்… ”

” கோபம்லா இல்லங்க… வருத்தம்… நாம சந்தோசமா வாழ்றதுக்காக நாமளே வடிவமைச்சு நமக்காக உருவாக்கிகிட்டது தான் இந்த உலகம்… அதுல சந்தோசத்த அனுபவிக்கறதுக்கு பதிலா அதோட குறைகளுக்கு பலியாயிட்டு இருக்கோம்… ஊழலும் அலட்சியமும் பெருகிப் போச்சு… இங்க எல்லா சட்டமும் எழுத்து வடிவத்துல மட்டும் தான் இருக்கு… செயல்வடிவம் ஆகல… அப்டியே எதாவது ஒரு சட்டத்த பாலோ பண்லாம்னு முடிவு பண்ணா பின்னால வரவன் விட மாட்டிங்குறான்… நான் நானேவே இருக்க முடியல… ரோட்ல போகும்போது கூட அடுத்தவன் அவசரத்துக்குத் தான் போக வேண்டியதா இருக்கு… எவனோ பண்ற பிரச்சினைக்கு காரணமே இல்லாம நான் காத்து கிடக்க வேண்டியதா இருக்கு… அவன் இவன் தப்புன்னு சொல்லி சொல்லியே நாம பண்ற தப்பெல்லாம் நியாயப்படுத்திட்டு இருக்கோம்… நமக்கு நாமே துரோகம் பண்ணிட்டு இருக்கோம்… இது மாறனும்னா தனிமனுச மனசுல மாற்றம் வரனும்… ”

 

* ” கோபத்த உள்ளுக்குள்ளயே வச்சிக்குவிங்களா சார்… ”

” வேறென்ன பண்றது… ”

” இந்த ஒரு கேள்வி தான் சார் உலகம்பூரா சிதறி கிடக்குற ஒவ்வொரு தமிழன் மனசுலயும் இருக்கு… அத ஒன்னு சேக்கனும்… ஆனா சேரவுடாம நம்ம அரசியல்வாதிங்க பாத்துப்பாங்க… சேந்தா அவிங்க அரசியல் பண்ண முடியாதுல்ல… ”

 

* ” முடியுமா… ”

” முடியாதுன்றது இல்ல சார்… நாம செய்யலங்கறது தான் உண்மை… ”

 

* ” தனிமனிதனுக்கு நம்ம நாட்டுல இருக்குற சுதந்திரம் வேற எந்த நாட்லயும் கிடையாது… ”

” சுதந்திரத்த வச்சிக்கிட்டு நாம என்ன செஞ்சோம்… என்ன செய்ய முடிஞ்சுது… கொத்து கொத்தா செத்தாங்க… மனிதாபிமானமே இல்லாம வயசு வித்தியாசங்கூட பாக்காம நம்ம தாய்மார்களும் சகோதரிகளும் கற்பழிக்கப் பட்டாங்க… ஒரு இனம் இருந்ததுக்கான அடையாளமே இல்லாம போயிடுச்சு… என்ன பண்ணோம்… உச் கொட்டிட்டு ஐபிஎல் பாத்துட்டு உக்காந்திருந்தோம்… சுதந்திரமா சுதந்திரம்… ”

 

* ” பிடிக்கலன்னு சொன்ன பொண்ணு மூஞ்சில ஆசிட் அடிக்கறதும் காதல் திருமணம் செஞ்சதுக்காக ஒரு ஊரையே எரிக்கறதும்தான சார் இங்க சுதந்திரமா நடந்துட்டு இருக்கு… ஆசியாலயே பெரிய ஜெயில கட்டிவச்சுட்டு ஜெனரல் நாலேஜ் கொசினுக்கு ஆன்சரா தான சார் வாழ்ந்துட்டு இருக்கோம்… இந்தியால ஒவ்வொரு 22 நிமிசத்துக்கும் ஒரு பெண் கற்பழிக்கப் படுறா… ஆம்பளயா பொறந்த அத்தன பேரும் தல குனியனும்… பெண்ண விட ஆண பலமா படைச்சதுக்கு காரணமே நாம அவிங்களுக்கு பாதுகாப்பா இருக்கனுங்கறதுக்காக தான்… பலவந்தப் படுத்தறதுக்கு இல்ல… கடுமையான சட்டாங்கள் இருந்தா மட்டும் தான் இங்க மனுசன் மனுசனா இருப்பான்… 110 கோடில 1% தான் கிரிமினலா இருக்கான்… அந்த 1% யும் சிறைச்சாலைல இடுங்க… மீதி இருக்குற 99% அ காப்பாத்திடலாம்… இப்படியே உக்காந்து கருத்து பேசிட்டே இருந்தோம்னு வைங்க… ஒருநாள் மொத்த பேரும் கிரிமினலாயி வந்து நிப்போம்… சுடுகாடு ஆயிடும்… ”

 

* ” நாப்பது வயசுக்கு மேல இருக்கறவங்க எல்லாமே எனக்கு அம்மா தான்… ”

 

* ” உன்ன மாதிரி வாழ்ந்தா வாழ்றது ரொம்ப கஷ்டம்… வாழ்ந்து காட்டிட்டிங்கன்னா அது வரலாறு… உங்கள நோக்கி கல் எறிஞ்சுக்கிட்டே இருப்பாங்க… எந்தக் கல்லயும் சிக்காம நீங்க ஒயர ஒயர பறந்துட்டே இருக்கனும்… எறியறவன் கை வலிக்கனும்… அப்ப தான் கை தட்டுவான்… ”

 

* ” நம்ம நாட்டுல உண்மைய உண்மைன்னு நிரூபிக்க இருபது வருசம் ஆகுங்க… ”

 

* ” பஞ்ச பூதங்கள் இந்தப் பூமில பொறந்த எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது… அத தனிப்பட்ட முறைல சொந்தம் கொண்டாடுனா கடவுளோட சாபத்துக்கு ஆளாவிங்க… ”

 

* ” அடுத்தவன தப்பு சொல்றதெல்லாம் சும்மா ஏமாத்து வேல சார்… நம்மளுடைய சோம்பேறித்தனம், அதிபுத்திசாலித்தனம், சுயநலம்… இதுதான் ஊழலின் ஆரம்பமே. இந்த ஸ்டேட்ல 7 அரை கோடி பேர் இருக்கிங்க… அதுல ஒரு கோடி பேரு உங்களுக்காக வேல பாக்குறாங்க… அவிங்களும் மனுசங்க தான… ஒரு பேப்பர் ரெடியாக 15 நாள் ஆகுதுன்னா அவிங்களுக்கு அந்த டைம் ஸ்பேச கொடுக்கனும்… கொடுக்கறது இல்ல… கடைசி நேரத்துல போறிங்க… குறுக்கு வழி தேடுறிங்க… ஒரு கவுர்மெண்ட் ஆபிஸ்குள்ள போகணும்னு ஒரு புரோக்கர தேடுறிங்க… ட்ரெயின் டிக்கெட் எடுக்கனும்னா ஒரு ஏஜென்ட்ட தேடுறிங்க… ஒரு போலீஸ் ஸ்டேசனுக்குள்ள போகுனும்னா வார்டு வட்டம் மாவட்டம்னு தேடுறிங்க… அந்த தேடல்… அந்த தேடல் தான் ஊழல்… முதல்ல நாம மாறனும்… ”

 

* ” ஒரு நல்லவன் எழுந்தால் ஆங்காங்கே இருக்கும் நல்லவர்கள் கைகொடுப்பார்கள் என்ற நம்பிக்கை வளர வேண்டும்… ”

 

* ” டேய்… இன்னும் எவ்வளவு நாளைக்குத் தான்டா தள்ளி நின்னு வேடிக்கைப் பாக்குறது… இது நம்ம பிரச்சினை… அவிங்க நூறு பேருன்னா நம்ம ஆயிரம் பேருடா… ”

 

* ” பொறந்தா ஒரு அர்த்தம் இருக்கனும்டா… அது எனக்கு இருக்குன்னு நான் நம்புறேன்… நீ எப்படி வாழனும்னு நினைக்குறியோ அப்படி வாழுடா… எவனுக்காகவும் உன்ன நீ மாத்திக்காத… ”

 

* மனிதகுல மீட்சிக்காக மனிதனிடம் ஒரு வேண்டுகோள்…

” லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து…! “

Related Articles

பள்ளி கல்லூரிகளில் எவிட்டாக்கள் தயாளன்கள... தமிழ் சினிமாவில் இதுவரை எப்படிப்பட்ட ஆசிரியர்களை எல்லாம் காண்பித்து இருக்கிறார்கள் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம். 1. தங்க மீன்கள் தங்க மீன்கள் எவிட...
கிங்ஸ் XI பஞ்சாப் (KXIP) ஐபிஎல் 2018 அணி...  வரிசை எண் போட்டி எண் தேதி கிங்ஸ் XI பஞ்சாப் போட்டிகள் நேரம் இடம்1 2 8-ஏப்ரல் டெல்லி vs பஞ்சாப் 4:00 PM டெல்லி ...
மனைவிக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுக்கும் ... சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் துரைவேலன் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி. இவர்களது ஏழு வயது மகள் பவித்ரா யாரும் எதிர்பாராத வகையில் கார் விபத்தில்...
திறந்தவெளி கழிவறைகளை ஒழித்த எட்டுவயது மா... பிரதமரின் முப்பத்து எட்டாவது மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் வரை துஷார் என்ற எட்டுவயது மாணவனைப் பற்றி நாட்டில் யாருக்கும் தெரியாது. அந்நிகழ்ச்சிக...

Be the first to comment on "மார்ச் 8 – 5 years of நிமிர்ந்து நில்! மெய்சிலிர்க்க வைக்கும் வசனங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*