சிரியா போரில் இறந்துபோன பிஞ்சு உயிர்களுக்கு பாடல் சமர்ப்பணம் செய்தது பரியேறும் பெருமாள் டீம் !

song-dedicated-to-the-dead-in-Syria-war-by-Pariyerum-Perumal-Team

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்
படம் பரியேறும் பெருமாள். அந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் ” அடி கருப்பி… என் கருப்பி… ”
பாடல் சமூகவலைதளங்களில் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பரியேறும் பெருமாள் படத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு?

காரணம் இது மாரி செல்வராஜின் படம். இவருக்கு இது முதல் படம் என்றாலும் சினிமா
ரசிகர்களுக்கு ” மறக்கவே நினைக்கிறேன்… ” என்ற ஆனந்தவிகடன் தொடர் மூலமாகவும்,
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதை தொகுப்பின் மூலமாகவும் ஏற்கனவே
எழுத்தாளராக அறிமுகமானவர். அது மட்டுமின்றி தமிழ்சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர் திரு. ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இன்னும் சொல்லப்போனால் ராமின் அன்பு தம்பி. அவரது கற்றது தமிழ் படத்தில் தமிழ் வகுப்பு அறிமுகக்காட்சியில் மாரி செல்வராஜை நடிக்க வைத்து அழகு பார்த்தவர். இது போன்ற காரணங்கள் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

அதென்ன பரியேறும் பெருமாள்?

இயக்குனர் மாரி செல்வராஜ், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர். தனது
முதல் படம் தன்னுடைய மண் சார்ந்த படமாக இருக்க வேண்டும் என்று எண்ணியவர் அவருடைய
பகுதியில் இருக்கிற எல்லா சமூக மக்களும் ஒன்றாக சேர்ந்து கும்பிடுகிற ஒரு குல தெய்வ
வழிப்பாட்டு சாமியின் பெயரையே தனது படத்திற்கும் வைத்துள்ளார். இந்தப் படத்தில்
சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவனாக கதிரும் சக மாணவியாக ஆனந்தியும் நடித்துள்ளனர்.

கண்ணை கலங்க வைக்கும் கருப்பி பாடல்…

ஈழப்போரில் உயிர்நீத்த பிஞ்சுகளுக்கும் சமீபத்தில் சிரியா உள்நாட்டுப்போரில் உயிர்நீத்த
பிஞ்சுகளுக்கும் இன்னும் பல பகுதிகளில் இறந்து கொண்டிருக்கும் பிஞ்சுகளுக்கும்
இந்தப்பாடலை சமர்ப்பணம் செய்துள்ளனர். பாடலாசிரியர் விவேக், மாரி செல்வராஜ் இணைந்து எழுதியுள்ள கருப்பி பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து அவரே பாடியுள்ளார். “உலகெங்கும் எதற்காக கொல்லப்படுகிறோம் என்பது தெரியாமலே மரித்து மண்ணாய்ப் போகும் பிஞ்சு உயிர்களுக்காக இப்பாடல் சமர்ப்பணம்” என்ற வரிகளோடே பாடல் தொடங்குகிறது. சாதிப் பாகுபாடு பிரச்சினைக்காக கொல்லப்பட்ட வாயில்லா ஜீவன் கருப்பி என்ற நாயை நினைத்து பாடுவதாக இந்த பாடல் அமைந்துள்ளது. இந்தப் பாடலின் வரிகள்  அப்படியே ஒரு பச்சிளம் குழந்தையை நினைத்து உருகி பாடுவது போலும் அமையப் பெற்றிருப்பது இதன் இன்னொரு சிறப்பு.

“வலிய தாங்காம துடிச்சியா… கடைசி நிமிசம் என்னை நினைச்சியா… உன்னை கொல்லும்போது
அவன் சிரிச்சானா நீ குரைக்கும்போது அவன் முறைச்சானா…” என்ற வரிகளும்

“எல்லா மனுஷனும் இங்க ஒன்னு இல்ல… வளர்த்து அழிக்குறவன், கழுத்த நெறிக்குறவன், கன்ன
தடவுறவன், கால்ல நொடிக்குறவன், கொன்னு சிரிக்குறவன், நின்னு அழுகுறவன், கருப்பன்,
சிவப்பன், சாமி, சாத்தான், அடிமை, ஆண்டான், மயிறு, மட்டை” என்ற வரிகளும் சாதி வெறி
பிடித்த இந்த சமூகத்தின் கேடுகெட்ட நிலையை வலியுடன் எடுத்துரைக்கிறது.

சந்தோஷ் நாராயணனுக்கு இந்த வருடத்தின் தொடக்கமே வெற்றியாக அமைந்துள்ளது. கடந்த
ஆண்டு ” எங்க வீட்டு குத்துவிளக்கு… ” பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஹிட்டடித்தது. இந்த வருடம் கருப்பி… அதைத்தொடர்ந்து காலா, மெர்க்குரி, வடசென்னை என்று வெயிட்டான
வெற்றியை பெற இருக்கிறார்.

Related Articles

ஒழுக்கமில்லாதவர்களால் தமிழகம் ரத்தக்காடா... வாழ்க்கை மிக எளிதான ஒன்று ஒழுக்கத்தை கடைபிடிப்பவனுக்கு. அது இல்லாமல் இருப்பவர்களால் வாழ்க்கையில் நேரும் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் மன உளைச்சலால...
ஐஎஸஐஸ் தீவிரவாத அமைப்பால் கொல்லப்பட்ட 39... 2014 ஆம் ஆண்டு இராக்கில் காணாமல் போன 39 இந்தியர்களை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாக முன்னாள் இராணுவ தளபதிக்கும், மத்திய அமைச்சர் ஜெனரல் விகே சிங்கு...
விரைவில் வருகிறது மளிகைக்கடை அண்ணாச்சிகள... தொட்டதெற்கெல்லாம் ரோபோக்கள் வந்துவிட்டன. பாட்டுப்பாட ரோபோ, பரிமாற ரோபோ, தூங்கவைக்க ரோபோ என்று ரோபோக்கள் பலவிதம். பக்கத்தில் இருக்கும் பல்பொருள் அங்காட...
மார்ச் மாதமே மண்டைய பிளக்கும் வெயிலா? &#... சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் நூறு டிகிரி பாரன்ஹீட் பதிவாகியிருக்கிறது. மார்ச் மாதமே இந்த நிலைமை என்றால் மே மாதங்களில் என்னென்ன பாடுபட போகிறோமோ? ...

Be the first to comment on "சிரியா போரில் இறந்துபோன பிஞ்சு உயிர்களுக்கு பாடல் சமர்ப்பணம் செய்தது பரியேறும் பெருமாள் டீம் !"

Leave a comment

Your email address will not be published.


*