தண்ணீரைச் சேமிப்பதற்காக மாற்றுத் தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வருகிறது சென்னை மெட்ரோ. ஒரு நாளைக்கு குளிரூட்டிகளுக்காக(Air Conditioners) மட்டும் 20000 லிட்டர் அளவுக்குத் தண்ணீர் தேவைப்படுகிறது, இந்த நீரைச் சேமிப்பதற்காக எரிவாயு அடிப்படையிலான குளிரூட்டும் தொழில்நுட்பத்தை(Gas-Based Cooling Technology) முயன்று பார்க்க இருக்கிறது சென்னை மெட்ரோ.
எல் நரசிம் பிரசாத், இயக்குநர் ((Systems and Operations)அமைப்புகள் மற்றும் செயல்பாடுகள்) இது குறித்து பேசும்போது ‘தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்பத்தில் தண்ணீரைக் குளிர்விப்பதற்காக பெரிய அளவில் குளிரூட்டிகள் தேவைப்படுகின்றன. ஆனால் எரிவாயு அடிப்படையிலான குளிரூட்டும் தொழில்நுட்பத்தில் தண்ணீர் பெருமளவில் சேமித்து வைக்கப்படும். தற்போதைய தண்ணீர் தேவைக்காகச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ குடிநீரையே பெருமளவுக்கு நம்பி இருக்கிறது’ என்றார்.
சுரங்கம் தோண்டுவதிலும் புதிய தொழில்நுட்பம்
குளிரூட்டிகள் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பம் மட்டுமல்லாமல் சுரங்கங்கள் தோன்றுவதிலும் புதிய தொழில்நுட்பத்தைச் சென்னை மெட்ரோ முயன்றுபார்க்க இருக்கிறது. சென்னையில் இடத்திற்கேற்ப, பருவத்திற்கேற்ப மண்ணின் தன்மை மாறிக்கொண்டேயிருக்கும். அத்தனை மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து சுரங்கம் தோன்றும் புதிய தொழில்நுட்பத்தையும் சென்னை மெட்ரோ முயன்றுபார்க்க இருக்கிறது.
தலைமை பொது மேலாளர் வி.கே.சிங் இது குறித்து பேசும் போது ‘சுரங்கப்பாதை போரிங் இயந்திரம் உற்பத்தியாளர்களிடம் தங்களது தேவைக் குறித்து தெரிவிக்கப்படும். ஜூலை முதல், நான்கு மற்றும் ஐந்தாவது அலகுகளுக்கான பணிகள் தொடங்கும். அலகு ஐந்து மாதவரம் மில்க் காலணி முதல் ஷோலிங்கநல்லூர் வரை இருக்கும். அலகு நான்கு லைட் ஹவுஸ் முதல் சிஎம்பிடி வரை அமைந்திருக்கும். இரண்டாவது கட்டமாக 55 கி.மீ. நீளம் மட்டுமே ஜூலை முதல் 3 பகுதிகளாகப் பிரிக்கப்படும்’ என்றார்.
‘சைதாப்பேட்டை மற்றும் சென்னை சென்ட்ரல் நிலையங்களில் சோலார் பேணல்கள் நிறுவப்பட இருக்கின்றன. 400kw அளவுக்குக் கிடைக்கும் சூரிய
Be the first to comment on "தண்ணீரைச் சேமிக்க புதிய தொழில்நுட்பத்தை முயற்சிக்க இருக்கிறது சென்னை மெட்ரோ"