” வேகம் மட்டும் போதாது, விவேகம் வேண்டும் சின்னப்பசங்களா… ” என்று பாடம் கற்பித்த சிஎஸ்கே வெற்றிக்கூட்டணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறது என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தது. சிஎஸ்கே ரசிகர்கள் அடைந்த உற்சாகமோ அளவற்றது. அதனாலயே எதிர் அணி ரசிகர்கள் “இது கிழட்டுக் கூட்டம் ” என்று கேலி பேசியது. இது தான் சிஎஸ்கே அணி பற்றிய தவறான மதிப்பீடு. சிஎஸ்கே அணி கிழட்டுக் கூட்டம் தான். இருந்தாலும் அனுபவம் மிக்க கூட்டம். வேகம் மற்றும் விவேகம் மிக்க கூட்டம்.

 

பொறுமை தான் வெற்றியின் ரகசியம்!

பொறுமை தான் வெற்றியின் ரகசியம் என்பதை இந்த வெற்றி மூலம் நிரூபித்து இருக்கிறது. எந்த சூழலிலும் பொறுமையை இழக்காதவன் நிச்சயம் வெற்றி பெறுவான் என்ற தாரக மந்திரத்தை தோனி நன்கு அறிந்து வைத்து உள்ளார். அதனால் தான் எல்லா மேட்சுகளிலும் அவருடைய தலைமையிலான அணியில் உள்ள வீரர்கள் அனைவருமே தக்க சூழலில் ஹீரோவாக மிளிர்ந்தனர்.

சென்னை அணியின் கடைசி இரண்டு ஆட்டங்களை எடுத்துக் கொள்வோம். இரண்டு ஆட்டங்களில் டூபிளசிஸ் மற்றும் வாட்சன் இருவருமே ஹீரோவாக மிளிர்ந்தார்கள். இரண்டுமே ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டம். முதல் ஓவரில் இருந்து மேட்ச்சை முடித்துக் கொடுக்கும் வரை ஆடுகளத்தில் நின்றார்கள். காரணம் அவர்களுடைய பொறுமை. அந்தப் பொறுமை அனுபவசாலிகளுக்கு மட்டுமே இருக்க கூடிய ஒன்று. இறு தி ஆட்டத்தில் வாட்சனின் ஆட்டத்தை எடுத்துக்கொள்வோம். முதல் ஐந்து ஓவருக்கு படு மோசமான ரன்கள் சிஎஸ்கே அணிக்கு. சோலி முடிஞ்சுது என்று தலையில் கை வைத்தோம். ஆனால் முக்கியமான பந்து வீச்சாளர்களின் பந்துகளை நன்கு பரிசோதித்துவிட்டு பிறகு ஓவருக்கு ஒரு சிக்ஸ், ஒரு போர் எனத் தொடங்கி ஒரு ஓவருக்கு இருபது ரன்கள் எடுக்கும் அளவுக்கு மெல்ல மெல்ல அதிரடி ஆட்டத்தை ஆடி பதினெட்டு ஓவர்களிலயே மேட்ச்சை முடித்து கப்பை வாங்கித் தந்துவிட்டார். இது தான் விவேகம். இது சிஎஸ்கே அணியிடம் இருந்து இன்றைய இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். பொறுத்தார் பூமி ஆள்வார்!

Related Articles

” ஓடுறவனுக்கு பல வழி இருக்கு…... தயாரிப்பு நிறுவனம் : டிரைடன்ட் ஆர்ட்ஸ்தயாரிப்பாளர் : ஆர் ரவீந்திரன்கதை, இயக்கம் : சுந்தர் சிவசனம் : பத்ரிஇசை : ஹிப் ஹாப் ஆதிஒளிப்ப...
இன்டெல் உருவாக்கத்தில் வருகிறது ஸ்மார்ட்... ஏப்ரல் 2012 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது கூகுள் க்ளாஸெஸ் (Google Glasses) என்னும் தயாரிப்பு. அந்த முகக்கண்ணாடியை நீங்கள் அணிந்...
நேபாள விமான விபத்தில் 49 பேர் பலி... 71 பேருடன் பயணித்த விமானம் ஒன்று நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் விழுந்து நொறுங்கியதில் 49 பேர் கொல்லப்பட்டு இருக்க...
ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்... The platform Trapped Monos The shawshank redemption  Gantumoote (kannada) The occupant (spain movie) Ayyapanum koshiyum (...

Be the first to comment on "” வேகம் மட்டும் போதாது, விவேகம் வேண்டும் சின்னப்பசங்களா… ” என்று பாடம் கற்பித்த சிஎஸ்கே வெற்றிக்கூட்டணி!"

Leave a comment

Your email address will not be published.


*