வலை தொடரில் (Web Series) ஜோடி சேர்கின்றனர் பாபி சிம்ஹாவும் பார்வதி நாயரும்

Actors Bobby Simha and parvathy nair in a web series

மாதவன் நடிப்பில் வெளியான ப்ரீத் (Breathe) மற்றும் இன்சைட் எட்ஜ்(Inside Edge) போன்ற வலை
தொடர்களின் வெற்றியைத் தொடர்ந்து அமேசான் நிறுவனம் நிறையத் தென்னிந்திய
மொழிகளில் வலை தொடர்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது.

ஜோடி சேரும் பாபி சிம்ஹாவும் பார்வதி நாயரும்

அமேசானின் இந்த முடிவைத் தொடர்ந்து பெயரிடப்படாத ஒரு வலை தொடரில் பாபி சிம்ஹாவும்
பார்வதி நாயரும் ஜோடியாக நடிக்கின்றனர். இந்த வலை தொடரை அருவி மற்றும் தீரன்
அதிகாரம் ஒன்று போன்ற படங்களைத் தயாரித்த புகழ்பெற்ற நிறுவனமான ட்ரீம் வாரியார்
பிக்சர்ஸ் (Dream Warrior Pictures) தயாரிக்கிறது.

டார்க் நகைச்சுவை(Dark Comedy) வகைமையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று நம்பப்படும்
இந்த வலை தொடரை, இதற்கு முன்பு சவாரி என்ற திரைப்படத்தை இயக்கிய குகன்
சென்னியப்பன் இயக்குகிறார். அந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்த விசால் சந்திரசேகர இந்த வலை தொடருக்கு இசையமைக்க இருக்கிறார். இந்த வலை தொடரின் படப்பிடிப்பு இந்த
மாதத்தில் தொடங்கவிருப்பதாக தெரிகிறது, ஒன்றுக்கும் மேற்பட்ட பாகங்களில் இந்தத் தொடர்
வெளிவரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சீக்கிரம் வெளிவரலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. பார்வதி நாயர் தற்போது மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு
படத்தில் நடித்து வருகிறார். பாபி சிம்ஹா விக்ரமுடன் சாமி 2 மற்றும் அவரது சொந்த தயாரிப்பில்
வல்லவனுக்கு வல்லவன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Related Articles

பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய த... பிள்ளை வளர்ப்பு என்பதைப் பற்றி இன்னமும் சில பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. அதை எதோ ஒரு தொந்தரவுக்கு உரிய செயலாகவே பார்க்கின்றனர். அப்படிபட்ட பெற்றோர்கள்...
இராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட... 1. " நீ தப்பிக்க விட்டவன் இப்ப என் வீட்டுல தா கெஸ்ட்டா இருக்கான்.., சாரி... நான் யாருன்னு சொல்லல... என் பேரு ஜெகதீஷ்... இந்தியன் ஆர்மி... ஆனா நா அதுமட...
வண்டி ஆவணங்களை இனி டிஜிலாக்கர் செயலி மூல... இனி பயணங்களில் வண்டி ஆவணங்களைச் சுமந்து செல்ல வேண்டிய அவஸ்தை இல்லை. உங்கள் திறன்பேசியில் டிஜிலாக்கர் செயலியில் கோப்புகளாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்க...
டெல்லி டேர்டெவில்ஸ் (DD) 2018 ஐபிஎல் அணி...  வரிசை எண் போட்டி எண் தேதி டெல்லி டேர்டெவில்ஸ் போட்டிகள் நேரம் இடம்1 2 8-ஏப்ரல் டெல்லி vs பஞ்சாப் 4:00 PM டெல்லி...

Be the first to comment on "வலை தொடரில் (Web Series) ஜோடி சேர்கின்றனர் பாபி சிம்ஹாவும் பார்வதி நாயரும்"

Leave a comment

Your email address will not be published.


*