டெஸ்லா நிறுவனத்தை முந்தத் திட்டமிட்டிருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர்

Indian origin man plans to beat Tesla with biggest battery

தெற்கு ஆஸ்திரேலியாவில் உலகின் மிகப் பெரிய லித்தியம் அயன் பேட்டரியை (lithium ion
battery) உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ்
கோடீஸ்வரர் சஞ்சீவ் குப்தா. இந்த பேட்டரி உருவாக்கம் சமுதாயத்தின் பல தரப்புக்கும் நன்மை
தரவிருக்கிறது.

‘நிறையப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை (Renewable Energy) உருவாக்குவதன் மூலம் அதிக
மின்சாரத்தைப் பெற முடியும் என்பதை நாம் அறிவோம். அதனால் தான் புதுப்பிக்கத்தக்க
ஆற்றலின் இலக்கை 75 சதவீதத்திற்கும், அந்த ஆற்றலைச் சேமிக்கும் இலக்கை 25
சதவீதத்திற்கும் அதிகப்படுத்தி இருக்கிறோம்’ என்று தெற்கு ஆஸ்திரேலியாவின் பிரிமியர் ஜெ வேதரில் தெரிவித்து இருக்கிறார்.

‘இந்த இலக்குகள் புதைபடிவ எரிபொருட்களில் (fossil fuels) இருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதைத் துரிதப்படுத்தும். இதன் மூலம் தெற்கு ஆஸ்திரேலியர்களுக்கு குறைந்த மின் கட்டணம் கிடைக்கக் கூடும்’ என்று மேலும் அவர் தெரிவித்தார்.

டெஸ்லா நிறுவனத்தை முந்தும் குப்தா நிறுவனம்

தற்போது குப்தா லிபர்ட்டி ஹவுஸ் நிறுவனத்தால் திட்டமிடப்பட்டிருக்கும் 120 மெகா வாட் / 140
மெகா வாட் பேட்டரி, டெஸ்லா நிறுவனம் தெற்கு ஆஸ்திரேலியாவில் உருவாக்கிய 100 மெகா
வாட் / 129 மெகா வாட் பேட்டரியை காட்டிலும் சேமிப்பு திறன் அதிகம் கொண்டதாகும்.

உருவாக்கப்பட இருக்கும் இந்த பேட்டரியை , குப்தா லிபர்ட்டி ஹவுஸ் (Gupta’s Liberty House)
நிறுவனம் 2017 ஆம் ஆண்டு வாங்கிய உருக்கு ஆலையில் அமையவிருக்கும் சூரிய
பண்ணைக்குப் பயன்படுத்தி கொள்ளத் திட்டமிட்டிருக்கின்றனர்.

புதுப்பிக்கத்தக்கத் தொழில்நுட்ப நிதியின் கீழ் தெற்கு ஆஸ்திரேலிய அரசிடமிருந்து 8 மில்லியன்
டாலர்கள் கடனாக பெற்று இருக்கிறது குப்தா நிறுவனம். இதன் மூலம் 100 கட்டுமான
வேலைகளை உருவாக்க முடியும் என்று தெரிகிறது.

டெஸ்லா நிறுவனம்

டெஸ்லா என்பது கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவில் உள்ள மின்சார வாகனங்கள்,
எரிசக்தி சேமிப்பு மற்றும் சூரிய குழு தயாரிப்புகளில் நிபுணத்துவம் வாய்ந்த அமெரிக்க நிறுவனம் ஆகும்.

Related Articles

ஜிப்ஸினா மதம் பிடிக்காத மனுச சாதிங்க ... அட்டகத்தி தினேஷ் நடிப்பில் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ராஜூமுருகன் வெளியான அற்புதமான படம் குக்கூ. அதை தொடர்ந்து இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் வெ...
அவளுக்காக எத்தனை கொலை வேணாலும் பண்ணுவேன்... இந்தியா பாகிஸ்தான், காளி, எமன், சைத்தான், திமிரு புடிச்சவன் இப்படி தொடர் தோல்வியில் இருந்த விஜய் ஆண்டனிக்கு நல்லதொரு வெற்றிப்படமாக அமைந்துள்ளது கொலைகா...
தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம் மற்றும் தமி... மதராஸ் மாகாணம் 1969 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது அப்படி பெயர் மாற்றம் செய்தவர் அப்போதைய முதல்வர் சி என் அண்ணாத...
பெண்களுக்கு ஸ்கூட்டி எவ்வளவு முக்கியத்து...  அந்த காலகட்டங்களில் சைக்கிள் வைத்திருப்பது என்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது.  அப்படி பட்ட காலத்தில் ஆண்கள் தான் பெரும்பாலும் சைக்கி...

Be the first to comment on "டெஸ்லா நிறுவனத்தை முந்தத் திட்டமிட்டிருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர்"

Leave a comment

Your email address will not be published.


*