மனசுல அலைபாயுதே மாதவன்னு நினைப்போ! – பெண் செய்தியாளரை பார்த்து " உங்க ஸ்பெக்ஸ் நல்லா இருக்கு… நீங்க அழகா இருக்கிங்க " என்ற சுகாதாரத்துறை அமைச்சர்!

Tamil Nadu Health Minister Vijaya Bhaskar told a female journalist that she is Beautiful

பெண் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு உரிய பதிலை அளிக்காமல் அவரை கேலி
செய்யும் விதமாக பதிலளித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்.

அதிமுக எம்எல்ஏக்கள் பொதுக்குழு கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது அதில் பங்கேற்று வெளியே வந்த விஜயபாஸ்கரிடம் பெண் நிரூபர் ஒருவர் செய்தி
சேகரிக்கும் நோக்கத்தோடு அவரை அனுகியுள்ளார்.

அப்போது அந்த பெண் நிரூபர் கேட்ட கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் ” உங்க ஸ்பெக்ஸ்
நல்லா இருக்கு… ” என்றார். ” சார்… நான் எல்லா நாளும் ஸ்பெக்ஸ் போட்ருக்கேன்… ” என்று
அந்த நிரூபர் பதிலளிக்க, ” இன்னிக்கு ரொம்ப நல்லா இருக்கு… ” என்றார். அந்த நிரூபர் விடாமல் அவரிடம் வினாக்கள் தொடுக்க, ” நீங்க அழகா இருக்கிங்க… ” என்று பதில் சொல்லிவிட்டு இடத்தை காலி செய்துள்ளார்.

சமூக வலைதளங்களில் கிண்டல்

இவரது இந்த பேச்சை சமூக வலைதளங்களில், ” இவரு பெரிய அலைபாயுதே மாதவன், கேட்ட கேள்விக்கு பதில சொல்லாம ரவுச பாரு… ” ” அடேங்கப்பா… யாரு சாமி இவன், ஆர்யாவுக்கே டப் கொடுப்பான் போல ” என்று கேலி செய்து வருகின்றனர்.

Related Articles

நாம் உண்ணும் உணவின் வரலாறு – பிரிய... இன்று மதியம் உங்கள் வீட்டில் என்ன சமையல்? புளிசாதம் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் தட்டில் புளிசாதம் பரிமாறப்படுகிறது. அதில் ஒரு பிடியை எடுத்து உண்ணுவ...
K – 13 படம் எப்படி இருக்கு?... இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் K-13. நாயகன் திரைப்பட இயக்குனர், நாயகி எழுத்தாளர்(காட்சிப் பிழை என்ற புத்தகம் எழுதியுள்ளா...
சிரியா போரில் இறந்துபோன பிஞ்சு உயிர்களுக... இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பரியேறும் பெருமாள். அந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் "...
ஜெயலலிதாவும் ரம்யா கிருஷ்ணனும்! – ... ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் எனக்கு நடிக்க வேண்டும் போல் இருக்கிறது என்று பல நடிகைகள் தங்கள் ஆசையை வெளிப்படுத்தினர். ...

Be the first to comment on "மனசுல அலைபாயுதே மாதவன்னு நினைப்போ! – பெண் செய்தியாளரை பார்த்து " உங்க ஸ்பெக்ஸ் நல்லா இருக்கு… நீங்க அழகா இருக்கிங்க " என்ற சுகாதாரத்துறை அமைச்சர்!"

Leave a comment

Your email address will not be published.


*