நாற்பதிற்கும் மேற்பட்டோருக்கு ஹெச்ஐவி கிருமியைப் பரவச்செய்த போலி மருத்துவர் கைது

Hiv-Aids

உத்தர பிரதேசம் மாநிலம் பங்காரமு என்ற டவுன் பகுதியில் இருப்பவர் ராஜேந்திர யாதவ் . தனது வண்டியில் கிளம்பி கிராமம் கிராமமாக சென்று மருத்துவம் பார்ப்பதே அவரது தொழில் ஆகும். சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் நோய்வாய்ப்படும் போது, அவரைத் தேடி சென்று மருத்துவம் பார்த்துக்கொள்வது வழக்கம். காரணம் அவர் மருத்துவம் பார்க்க வாங்கிக் கொள்ளும் கட்டணம் வெறும் 10 ரூபாய். மருந்து மாத்திரைகள் முற்றிலும் இலவசம். அது எப்படி 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க இயலும் என்கிறீர்களா? ஊசி போட வருடக் கணக்கில் ஒரே சிரிஞ்ச் பயன்படுத்தி வந்தால் பத்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கலாம் தானே? பத்து ரூபாய்க்கு மருத்துவம் பார்ப்பதாக சொல்லி, நாற்பதுக்கும் மேற்பட்ட மக்களுக்கு ஒரே சிரிஞ்ச் மூலம் ஹெச்ஐவி கிருமியை பரவச்செய்த  குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார் ராஜேந்திர யாதவ் இவர் ஒரு போலி மருத்துவர் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அடுத்தடுத்து ஹெச்ஐவி

உத்தர பிரதேச மாநிலம் உன்னா நகரில் அடுத்தடுத்து மக்களுக்கு எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான ஹெச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டு வந்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12 பேரும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17 பேரும் ஹெச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அம்மாநில சுகாதாரத்துறை, நகரில் ஒரு மருத்துவ முகாம் அமைத்து அனைவருக்கும் பரிசோதனை நடத்தத் திட்டமிட்டது. அந்த மருத்துவ முகாமில் மேலும் ஐம்பத்து எட்டு பேருக்கு ஹெச்ஐவி கிருமி தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்தச் சம்பவம் தொடர்ந்து அதற்கு உண்டான காரணங்களை அறிய விசாரணை செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதி மக்கள் பக்கத்து கிராமத்தில் இருந்து வரும் மருத்துவர் ஒருவர் ஊசி போட ஒரே சிரிஞ்ச் பயன்படுத்துவதாக தெரிவித்ததை அடுத்து, உறவினர் வீட்டில் இருந்த ராஜேந்திர யாதவ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

சிரிஞ்ச் மட்டும் தான் காரணமா?

ஹெச்ஐவி கிருமி நோய் தொற்றுக்கு சிரிஞ்ச் மட்டுமே காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.  காரணம் நரம்பில் போடப்படும் ஊசியின் மூலமாக மட்டுமே ஹெச்ஐவி கிருமி தொற்று ஏற்படும். ராஜேந்திர யாதவ் சாதாரணமாக தசைகளில் மட்டுமே ஊசி போட்டு வந்துள்ளார். இருப்பினும் அவர் போலி மருத்துவம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு இருப்பது நியாயமே என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

நோய் தொற்றுக்கு காரணமான பிற காரணிகளில் முதன்மையானதாக இருப்பது வெளியிலிருந்து அங்கு வந்து தற்காலிகமாக குடியேறும் மக்கள் என்று சொல்லப்படுகிறது. புலம்பெயர்ந்து குடியேறும் தொழிலாளர்கள் மூலமாகவும் அதிக அளவில் ஹெச்ஐவி கிருமி தொற்று நிகழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதிக அளவிலான புலம்பெயர் மக்கள் குடியேற்றம் ஹெச்ஐவி கிருமி பரவ முதல் காரணமாக இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

2 . 1 மில்லியன் மக்கள் இந்தியாவில் ஹெச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உலகிலேயே அதிகம் ஹெச்ஐவி கிருமி தொற்று பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம். பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசின் சார்பாக எடுக்கப்பட்ட போதிலும், பெரிய அளவில் நோய் தொற்று ஏற்படுவது அம்மாநிலத்தின் சுகாதார துரையின் தோய்வையே காண்பிக்கிறது.

Related Articles

பர்சு பத்திரம் பார்வையாளர்களே! – ப... சிறுவன் ஒருவன் தெருவில் சண்டை போட்டு ஜெயிப்பதை பார்த்த சர்கார் என்பவர் அவனை தன்னுடன் வைத்து வளர்த்து குஸ்தி கத்துக் கொடுத்து நேஷனல் சாம்பியன் ஆக வேண்ட...
48 கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்... கௌரி சிங்வி என்ற பதினான்கு வயது பெண் கர் தண்டா முதல் கேட்வே ஆப் இந்தியா வரை உள்ள நாற்பத்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்க இருக்கிறார். ராஜஸ...
வித்தியாசமான நோய்களை காட்டிய தமிழ் சினிம... தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் கேன்சர் என்ற ஒரே நோயை திருப்பி திருப்பி ஆள் மாற்றி காண்பித்திருப்பார்கள். அப்படி இல்லாமல் வித்தியாசமான நோய் உடைய மனித...
2020ஆம் வருடத்திலும் வெறும் மூவாயிரம் நா... கற்றது தமிழ் படம் வந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.  அந்தப் படத்தின் கதை எழுதி 15 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும்.  அப்போது ஒரு பட்டதாரி இளைஞனுக்கு ம...

Be the first to comment on "நாற்பதிற்கும் மேற்பட்டோருக்கு ஹெச்ஐவி கிருமியைப் பரவச்செய்த போலி மருத்துவர் கைது"

Leave a comment

Your email address will not be published.


*