24 மணி நேர இலவச கல்வி ஆலோசனை மையம்! – மாணவர்களிடையே நல்ல வரவேற்பு!

24 hours free educational counselling centres

கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறையால் இலவச கல்வி ஆலோசனை மையம்
துவங்கப்பட்டது. இப்போது இது மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நோக்கம் :

நாளுக்கு நாள் மாணவ தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர்
பத்தாம் வகுப்பு பண்ணிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்கள். தேர்வில் தோல்வி
அடைந்துவிட்டால் உடனே தற்கொலை முடிவுக்கு சென்றுவிடுகிறார்கள். அதற்கு காரணம்
அதற்கடுத்து என்ன செய்வது என்ற முறையான வழிகாட்டுதல்கள் இல்லாததே ஆகும். இதனை
தடுக்கும் பொருட்டு தான் இந்த மையம் துவங்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கல்வி சார்ந்த ஆலோசனைகள், உயர்கல்வி குறித்த விழிப்புணர்வுகள்,
மாணவர்களின் மன உளைச்சலுக்கு ஆலோசனைகள் வழங்கும் வகையில்
பள்ளிக்கல்வித்துறையால் ஆலோசனை மையம் துவங்கப்பட்டுள்ளது. இது சென்னை
பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் இயங்கி வருகிறது.

இதுவரை 20,000க்கும் மேற்பட்டோர் அழைத்து பயன்பெற்றிருக்கிறார்கள். அவர்களில்
பெரும்பாலானோர் பெற்றோர்களே. தொடங்கிய முதலிரண்டு நாட்களில் ஆராயிரத்துக்கும்
மேற்பட்டோர் அழைப்பு விடுத்து பயன்பெற்றிருக்கிறார்கள். இப்போது நாளைக்கு 2000க்கு
மேற்பட்டோர் அழைப்பு விடுத்து பயன்பெறுகின்றனர். மேலும் இது மனநல ஆலோசனைகள்
வழங்க மனநல ஆலோசகர்களையும் கொண்டுள்ளது.

சேட்டைகள் கூடாது

இது சிம் கம்பெனி கஸ்டமர் கேர் இல்லை என்பதை மனதில் தெளிவாக நிறுத்திக்கொள்ளவும்.
இவர்களிடம் போன் செய்து நாளைய தேர்வு வினாத்தாள் கிடைக்குமா, எங்க டீச்சர மாத்த
முடியுமா போன்ற சேட்டைகள் அறவே கூடாது.

இலவச அழைப்பு எண்

ஆலோசனைகள் இலவசமாக பெற 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். மாணவர்கள்
அல்லாத பருவத்தினர் தற்கொலை எண்ணம் தழைத்தோங்கும் போது 104 என்ற இலவச
எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்!... இந்தியாவிலயே தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் வகித்து வருகிறது. உடல் தானம் அதிகம் செய்யும் மாநிலம்  என்பதற்காக தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இதற்...
உலகிலயே மிகப்பெரிய செல்போன் ஃபேக்ட்ரியை ... உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் உலகிலயே மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு தொழிற்சாலையை உருவாக்க இருக்கிறது சாம்சங் கம்பெனி.சாம்சங் நிறுவனத்தி...
விந்து நிறைத்த பலூன் தாக்குதல்களை எதிர்த...  கொண்டாட்டங்கள் எல்லை மீறச் செல்லும் போது அவை பெரும்பாலும் குற்றச் செயல்களிலேயே முடிகிறது. ஹோலி பண்டிகையின் போது நிகழும் கொண்டாட்டங்கள் சில ச...
உலக புகழ்பெற்ற முதல் நடிகர் சார்லி சாப்ள... வசனங்கள் இல்லாத காலத்திலயே உலகம் முழுவதும் புகழோடு விளங்கியவர் சார்லி சாப்ளின். சிரிப்பு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தார். அவர் நடித்த படங்களின்...

Be the first to comment on "24 மணி நேர இலவச கல்வி ஆலோசனை மையம்! – மாணவர்களிடையே நல்ல வரவேற்பு!"

Leave a comment

Your email address will not be published.


*