கிறுக்கத்தனமான கிகி சேலஞ்ச்! – பப்ளிகுட்டி பைத்தியங்களை எச்சரித்த போக்குவரத்து போலீஸ்!

What is kiki challenge

அது என்ன கிகி சேலஞ்ச்!

உலகில் உள்ள பைத்தியங்கறை அரவேக்காட்டுகளை வெளிச்சம் போட்டு காட்டுவது தான் இந்த கிகி சேலஞ்ச்! இப்போது உலகம் முழுக்க டிரெண்டாகி வருகிறது இந்த சேலஞ்ச்! கனடா நாட்டை சேர்ந்த பிரபல ராப் பாடகர் டிரேக் என்பவர் எழுதி வெளியிட்ட பாடலின் பெயர் “இன் மை பீலிங்ஸ்”. இந்த பாடலில் வரும் “கி கி டூ யூ லவ் மீ” என்ற பாடல் வரிகள் பின்னணியில் ஒலிக்க, அதற்கு ஏற்ப நடனம் ஆட வேண்டும்.

இது தற்போது, ‘கிகி சேலஞ்ச்’ அல்லது ‘இன் மை பீலிங்ஸ் சேலஞ்ச்’ என உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து வருகிறது. இந்த சேலஞ்ச் அவ்வளவு சுலபமானது அல்ல.  நடனம்தானே என சுலபமாக நினைத்து விட வேண்டாம். இது நம்ம ஊர் ‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’, இந்திய பிரதமர் மோடியின் ‘பிட்னஸ் சேலஞ்ச்’ காட்டிலும் கொஞ்சம் வித்தியாசமானது.

ஓடும் காரில் இருந்து இறங்கி, ‘கி கி டூ யூ லவ் மீ’ பாடல் வரிகளுக்கு நடனம் ஆட வேண்டும். பின்னர் மீண்டும் காரில் ஏறி கொள்ள வேண்டும்.  கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் ஆட்டி படைத்து வரும் ‘கிகி சேலஞ்ச்’, தற்போது தமிழகத்திலும் பரவி வருகிறது.

பைத்தியங்கள்:

படப்ஸ்மாஸ் பைத்தியங்கள், மியூசிக்கல்லி பைத்தியங்கள், பைக் ரைட் பைத்தியங்கள் என்று நம்ம ஊரில் பைத்தியங்களுக்குப் பஞ்சம் இல்லை. இப்போது இந்த கிகி சேலஞ்ச் வந்துவிட ஏராளமானோர் விபத்துக்கு உள்ளாகின்றனர். அது சாலையில் போவோர் வருவோரின் கவனத்தை சிதைக்கும் வகையிலும் திருட்டுத் தொழில்கள் நடப்பதற்கு ஏதுவாகவும் இருக்கிறது என்பதால் போக்குவரத்து துறை போலீசார் எச்சரிக்கை தெரிவித்து உள்ளனர்.

பிடிங்க சார் அவன… பிடிச்சு ஜெயில போடுங்க சார் அவன என்று சந்தானத்தின் காமெடியை அந்த தகவலுக்கு கமெண்டாக கொடுத்து உள்ளனர் நெட்டிசன்கள்.

Related Articles

செந்தில்பாலாஜி vs செந்தில் நாதன் –... வருகிற மே 19ம் தேதி அரவக்குறிச்சி தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு  கூட்டம் கூட்டுதல் பணப்பட்டுவாடா செய்தல் போன்ற பணி...
சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் கதைகள் ... 1. கடவுளுக்கு கடிதம் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் கதை இது. ஸ்ரீரங்கத்தில் டீக்கடை வைத்திருப்பவன் ரங்கு. அவனுடைய கடைக்கு அடிக்கடி வருபவன் கோவிந்து. அவனுக்...
அதிகரிக்க இருக்கிறது வீட்டுக்கடனுக்கான இ... ரெப்போ விகிதத்தை 25 புள்ளிகள் வரை உயர்த்தி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து வீட்டுக்கடனுக்கான இஎம்ஐ. சரக்குகள் மற்றும் சேவைகளின் கட்டணமும...
டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாமின் பொன்மொழிக... காலத்தின் மணற்பரப்பில் உன் காலடிச் சுவடுகளை பதிக்க விரும்பினால் உனது கால்களை இழுத்து இழுத்து நடக்காதே. நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம் நேர...

Be the first to comment on "கிறுக்கத்தனமான கிகி சேலஞ்ச்! – பப்ளிகுட்டி பைத்தியங்களை எச்சரித்த போக்குவரத்து போலீஸ்!"

Leave a comment

Your email address will not be published.


*