சர்கார் படத்தில் மதுக்கடைகளை அடித்து நொறுக்குவதுபோல் காட்சி வைத்திருந்தால் என்ன செய்திருப்பார்கள் விஜய் ரசிகர்கள்!

If sarkar movie was taken wine shop smash scenes what vijay fans will do

கஜா புயலுக்கு முன்பு வரை சமூக வலைதளங்கள் அதிகம் பேசிக்கொண்டு இருந்த விஷியம் சர்கார் படத்தில் இடம் பெற்றிருந்த இலவச மிக்சி, கிரைண்டர், டிவி போன்றவற்றை நெருப்பில் தூக்கி எரியும் காட்சியை பற்றியதே.

அந்தக் காட்சியால் கொதித்து எழுந்த ஆளுங்கட்சியினர் சர்கார் படத்தில் இருந்து அந்தக் காட்சியை நீக்க வேண்டும் என்று மிரட்டலாக கட்டளை விதித்தனர். சில தியேட்டர்களில் சர்கார் படத்தின் பேனர்களை கிழித்து துவம்சம் செய்து நாங்க விஜய் ரசிகர்கள விட பெரிய ரவுடிகளாக்கும் என்பதை நிரூபித்தனர் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள்.

அதை தொடர்ந்து நீங்களா நாங்களா பாத்துடலாம் என்று விஜய் ரசிகர்களில் சிலர் ஒரு விரல் புரட்சி செய்கிறேன் என்ற பெயரில் வீட்டிலிருக்கும் மிக்சி கிரைண்டர்களை அடித்து நொறுக்கி, ” அம்மா “க்களிடம் மிதி வாங்கி வீட்டில் சோறு திங்க முடியாமல் அலைந்து திரிந்ததையும் நாம் கண் கூட பார்த்தோம்.

அதே சமயம் நெட்டிசன்கள் சிலர், பரியேறும் பெருமாள் படத்தில் சாதியை ஒழிக்க சொல்லி இருக்கிறார்களே அதை ஏன்டா யாரும் பாலோ பண்ல என்று கேள்வி எழுப்பி இருந்தனர். ஆனால் அந்தக் கேள்வியை யாரும் கண்டுகொண்டாதாக தெரியவில்லை.

அதே சமயம் மதுக்கடைகள் பற்றி யாரும் பேசாதது ஏனோ ? ஒரு வேளை சர்கார் படத்தில் விஜய் மதுக்கடைகளை அடித்து நொறுக்குவது போல காட்சி வைத்திருந்தால் ( அதாவது கற்பனையா ) என்ன நடந்திருக்கும்? விஜய் ரசிகர்கள் என்ன செய்திருப்பார்கள் ? மதுக்கடையை எல்லாம் அடித்து சின்னாபின்னம் ஆக்கி இருப்பார்களா ? இனி குடிக்க மாட்டேன் என்று சூடம் ஏத்தி விஜய் மேல் சத்தியம் செய்திருப்பார்களா ?

இவர்கள் எல்லாம் இப்படி செய்திருந்தால் ஆளுங்கட்சி என்ன செய்திருக்கும் ? படம் வேறு சரியாக தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. தீபாவளி தினங்களில் தான் மதுக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மது விற்பனை இவ்வளவு கோடி உயர்வு என்று மார்தட்டிக் கொள்ள வேண்டுமே ? ஒரு வேளை அப்படி ஒரு காட்சி இருந்து விஜய் ரசிகர்கள் ஆவேசப் பட்டு திடீர் நல்லவர்களாக மாறி மதுக்கடையை அடித்து நொறுக்கியிருந்தால் ஆளுங்கட்சியினர் எத்தனை பேரை வெட்டி சாய்த்திருப்பார்கள் ? எத்தனை பேரை ஓட ஓட விரட்டி அடித்திருப்பார்கள் ? எத்தனை பேரை கைது செய்திருப்பார்கள் ?

அடிப்படை தேவைகளை கூட சுயமாக செய்துகொள்ள முடியாமல் “அரசியல்” நிறைந்த இலவசப் பொருட்களுக்காக ஐயா சாமி என்று கையேந்தி நிற்கிறார்கள் என்றால் அந்த அளவுக்கு மக்கள் எல்லாம் சிந்தனையற்று கிடப்பதற்கு மிக முக்கியமான காரணம் மதுக்கடைகள். எதை முதலில் ஒழிக்க வேண்டுமோ அது குறித்து எந்த மாஸ் நடிகரும் தன் படத்தில் காட்சி வைக்காதது ஏனோ? தம் அடிப்பது, குடித்து கும்மாளம் அடிப்பது போன்ற காட்சிகளை வைக்காமல் இருக்க முடியாத சர்கார் படக்குழு இலவச மிக்சி, கிரைண்டர்களை மட்டும் உடைத்து நொறுக்குவது போல காட்சி வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம் ?

இது ஆணாதிக்கம் நிறைந்த சமூகம் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை. பெரும்பாலான முடிவுகள், நிர்வாக பொறுப்புகள் போன்றவை ஆண்களால் தான் பார்த்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் அந்த ஆண்கள் சிந்தனையின்றி மழுங்கிப் போக, சோர்ந்து போ மதுக்கடைகள் மிக முக்கிய காரணமல்லவா ? மதுக்கடைகளை அடித்து நொறுக்குவது போல தமிழ் சினிமாவில் இதுவரை எந்த மாஸ் ஹீரோவின் படத்திலாவது காட்சிகள் இடம் பெற்றிருக்கிறதா ?

                         

 

Related Articles

இதாங்க ஆயிரத்தில் ஒருவன் படத்தோட கதை!... இத்திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனையே. சோழ பாண்டிய வரலாற்றுக்கும் இத்திரைப்படத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.ஒரு குக்கிராமம்... தற்போதைய தஞ்சாவ...
கிராமத்துக் குழந்தைகளின் கல்விக்காக ஒன்ப... திரைப்படங்களில் நமது கனவு நாயகன் எப்போதும் கல்விக்காக உழைப்பவர் தான். கல்வியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள் கணிசமான வெற்றியைப் பெற்றிர...
2019ல் ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண் வாங... 2019ல் வெளியான படங்களில் மிக முக்கியமான படம் பேரன்பு. இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் 56 மதிப்பெண்கள் தந்தது. இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் விமர்சனம் ...
பல படங்களுக்கு முன்னோடியாக இருக்கும் அமை... வாங்கறதும் கொடுக்கறதும் தான் கௌரவம்னா உலகத்துக்குலயே கௌரவமானவன் வட்டிக்கடைக்காரன் தான்... என்னப் பொறுத்தவரைக்கும் கட்டிக்கப் போற பொண்ணுக்கிட்ட மன...

Be the first to comment on "சர்கார் படத்தில் மதுக்கடைகளை அடித்து நொறுக்குவதுபோல் காட்சி வைத்திருந்தால் என்ன செய்திருப்பார்கள் விஜய் ரசிகர்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*