நம்மோட திறமைகளை நாம காட்டிட்டே இருக்கணும்! – திருடன் மணியன்பிள்ளை தன்வரலாறு !

The history of Thirudan Manianpillai book

மலையாளத்தில் ஜி ஆர் இந்துகோபன் எழுதிய திருடன் மணியன் பிள்ளை என்ற புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் எழுத்தாளர் குளச்சல் மு யூசுப். காலச்சுவடு பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டு உள்ளது. திருடன் மணியன் பிள்ளை பற்றிய சில தகவல்கள், புத்தகத்தில் உள்ள முக்கியமான வரிகள் போன்றவை இங்கே பகிரப்பட்டுள்ளது. 

பிறப்பு : 1950இல் கொல்லம் இரவிபுரத்தில் பிறந்தார்

ஊர் : வாழத்துங்கல் ஊர்

தந்தை பெயர் : கறுத்தக் குட்டன்பிள்ளை

மனைவி பெயர் : மெகருன்னிஸா

உடன்பிறப்புகள் : 4 சகோதரிகள்

அப்பாவின் அம்மா பெயர் : ஈஸ்வரியம்மா

குட்டப்பன், பர்ண பாஸ், ராஜன், தவளக்குழி கிருஷ்ணன்குட்டி, காட்டாக்கடை சதாசிவன், அம்பாசிட்டர் பணிக்கர், சேர்த்தலை கிருஷ்ணன், ஜெயன், மம்மது அண்ணன், பங்களா மணிக் குட்டன், பெயிண்டிங் ராஜன், நங்ஙேலி குட்டன்பிள்ளை, முட்டன், கக்கா கமர் போன்ற நிஜ மனிதர்கள் புத்தகத்தில் நிரம்பிக் கிடக்கிறார்கள். ஒவ்வொருவரை பற்றிய தகவலும் மிக சுவாரஸ்யமாக செல்கிறது. 

தலைப்புகள் : 

 1. நான், 2. அம்மா, 3. கல்யாண வீடு, 4. பசி, 5. சைக்கிள் வித்தை, 6. கொலையுண்ட அப்பா, 7. களத்தூர் மீனாட்சி, 8. திருநெல்வேலி, 9. தற்கொலை முயற்சி, 10. தவளக்குழியாரின் திருவசனம், 11. காணாமல் போனேன், 12. கள்ளுக்கடை, 13. கடையும் கலாட்டாவும், 14. திருடன், 15. நூற்றுப்பன்னிரெண்டு பவுன் ஐயாயிரம் ரூபாய், 16. அகழ்வோனைக் காத்தருள் புரிந்த கதை, 17. கற்புடை தனம் கனல் போன்றது, 18. களவுக்கலை, 19. வழக்கறிஞர் மணியன்பிள்ளை, 20. பரவசத் திருட்டு, 21. 96 பவுன் 22000 ரூபாய், 22. முதல் திருட்டு, 23. இரவுகள், 24. மீண்டும் கள்ள டிரெயின், 25. பெண்கள், 26. குருநாதன் மணியன்பிள்ளை, 27. வீடுகட்டுவோர் கவனத்திற்கு, 28. டாக்டர்கள்  கவனத்திற்கு, 29. டாக்டர் பிள்ளை, 30. வைக்கம் முகமது பஷீரைத் தேடி, 31. பரப்பனங்காடி, 32. செண்பகச்சுவட்டில் திருடன், 33. கடவுச்சீட்டுத் திருடன், 34. இரட்டைத் திருடன், 35. சாரும் திருடனும், 36. கள்ளன் காசர்கோடு, 37. துப்பாக்கி, 38. மணவறைத் திருடன், 39. சூரியன், 40. கோட்டயம் கான், 41. மயக்கு சுகு, 42. ஓட்டம் பிள்ளை, 43. தேங்காய் பாபு, 44. மைசூர் (வரலாற்றுச் சுருக்கம்), 45. தொடக்கம், 46. புகையிலை விவசாயம், 47. பணக்காரன், 48. கௌரி, 49. ஆபரேஷன் செட்டியார், 50. பருத்திக் குத்தகை, 51. சலிம்பாஷாவின் சனிக்கிரகம், 52. வீழ்ந்த நாள், 53. மைசூரின் மிச்சம், 54. சித்தப்பிரமை, 55. பெண்கள், 56. மெகருன்னிஸா, 57. நாட்குறிப்பில், 58. காபரே, 59. சேச்சி, 60. ஜானகி, 61. உதவாக்கரைப் பணம், 62. காதல் உணர்வுகள், 63. மீண்டும் மாலதி, 64. கடத்தல், 65. பத்மினி, 66. சிறைச்சாலைகள், 67. முதியவர், 68. வார்டன், 69. சுயபாலின்பம், 70. போலீஸ், 71. அரை போலீஸ், 72. பிளேடு, 73. உதவி ஆய்வாளருக்கு விருப்ப ஓய்வு, 74. திருடனும் போலீசும் ஒரே வீட்டில், 75. பின்தொடரும் போலீஸ், 76. அமானுஷ்யங்கள், 77. ஆபரேஷன் கிழவன், 78. கள்ள நோட்டு குட்டன்பிள்ளையும் மணிராவும், 79. ஆச்சரியம், 80. கஞ்சா ஆயில், 81. தோளில் விழுந்த கை, 82. நடிகர் மணியன் பிள்ளை, 83. சேரூர் சி. பி, 84. சென்னை, 85. மதம், 86. பெந்தெகொஸ்தே, 87. மீண்டும் மைசூருக்கு, 88. விதி எழுதும் சுயசரிதை

இந்த தலைப்புகளின் வழியாக தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார் திருடன் மணியன்பிள்ளை. 

பிடித்த வரிகள்: 

 1. அனுமதியில்லாமல் இந்தத் திருடனிடமிருந்து திருட வேண்டாம். 
 2. ஒருவனுடைய பொருளை மற்றொருவன் திருடிய அனுபவத்தை வாசித்துப் பார்ப்பதில் சுவாரஸ்யமிருக்கிறது. பறிகொடுத்த பொருள் நம்முடையதாக இருக்கும்போதுதான் திருடியவன் அயோக்கியனாக தெரிகிறான். இல்லாத பட்சத்தில் அவன் சாகசக்காரன். 
 3. குற்றவாளிகளாலும் குற்றவாசனையுள்ளவர்களாலும் நிம்மதியாகத் தூங்க முடியாது. 
 4. ஒரு திருடனை ஊரிலோ வீட்டிலோ யாருமே வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டார்கள். மறுவாழ்வு என்பதே கிடையாது. 
 5. போலீஸ்காரர்களைப் போல அதிகாரத்தை மிகத் தவறாகப் பயன்படுத்துகிற நீதிமான்களும் நம்மிடையில் இருக்கவே செய்கிறார்கள். நானே கடவுள் என்பது போல்தான் அவர்களில் சிலரது அதிகார மமதையுடனான தீர்ப்புகளும் இருக்கின்றன. 
 6. நியாயம் சார்ந்து மட்டுமே செயல்படுவது என்பது சட்டத் தொழிலைப் பொறுத்தவரைக்கும் பெரும்பாலும் இயலாத ஒன்று. இங்கே சாட்சியங்கள் தான் முக்கியம். அது உண்மையாக இருக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது. 
 7. கோட்டும் சூட்டும் அணிந்துவிட்டோம் என்பதற்காக பிறவிக்குணம்  போய்விடுமா என்ன? 
 8. திருடனாக மாறிவிட்டதன் கொடிய வேதனையை நான் அனுபவித்தது திருடும்போது ஒரு தடவை அம்மாவைப் பற்றிய நினைவு வந்ததில் தான். 
 9. செத்த வீடுகளுக்கு மட்டும் தயங்காமல் செல்வேன்… திருடன் விபச்சாரி என்றெல்லாம் இங்கே பேதம் பார்ப்பதில்லை. யாரும் தடுக்கவும் மாட்டார்கள். 
 10. குழந்தைப் பருவத்து நினைவுகள் தீராத இரணங்களாகி விடும். வேதனைகளையும் அவமானங்களையும் நான்கைந்து வயதிலிருந்தே குழந்தைகள் மனதில் பாதுகாத்து வைத்திருப்பார்கள். பச்சை மனங்களை ஒரு போதும் புகைய வைத்து விடக்கூடாது. 
 11. பணத்திற்கு மட்டுமே இங்கு பாய் விரித்து மரியாதை செய்யப்படுகிறது. ஏழ்மை குற்றமாகப் பார்க்கப்படுகிறது. வெள்ளை வேட்டிக்குத்தான் கௌரவம். பணம்தான் பிரதானம். அதை அடைந்த வழி எதுவாகவும் இருக்கலாம். 
 12. கிளாஸ் லீடராக இருந்தும் புத்தகமில்லையென்று பெஞ்சின் மீது ஏறி நிற்பவனின் அவமானம் மிகப் பெரியதாக இருந்தது. 
 13. பணமும் அதிகாரமும் இருக்குமிடத்தில் தயவு தாட்சண்யங்களுக்கு இடம் கிடையாதல்லவா? 
 14. உழைக்காமல் உபாயமாகக் கை வசப்படுத்திக் கொள்கிற சொத்தும் சரி, பணமும் சரி நிலைக்காது… 
 15. ஒரு தடவை திருடிப் பிடிபட்டால் பிறகு பெரும்பாலும் திருடாமலயே திருடனாக்கப்படுவான். 
 16. உன்னைத் தேவையில்லாத சமூகம் உனக்கும் தேவையில்லை. 
 17. திருடனுடைய எல்லா பொருளும் அவனுடைய கோட்டு முதல் கோமணத்துண்டு வரை மற்றவர்களிடமிருந்து அபகரித்ததாகவே இருக்கும் என்பதல்லவா அரிச்சந்திரன்களாகிய அனைவருடைய எண்ணமும். 
 18. சிறிதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும் குற்றம் குற்றம்தான். 
 19. மனிதனால் உருவாக்கப்பட்ட எதனுள்ளும் மற்றொரு மனிதன் நுழைவதற்கான மார்க்கம் இருக்கவே செய்யும். 100 சதவீத கவனத்துடன் ஒரு மனிதனால் எப்போதுமே இருந்துவிட முடியாது. 
 20. பெரும்பாலான எல்லா போலீஸ் அதிகாரிகளின் நரம்புகளிலும் இப்படி அடுத்தவனை ஏமாற்றித் தின்ற இரத்தம் ஓடக்கூடும். அப்படியென்றால் உண்மையான திருடன் யார்? திருடியவனா திருட்டுப் பொருளை வாங்கியவனா இவர்களை வைத்துக் காசு பார்க்கும் போலீஸ்காரனா? 
 21. புத்தியுள்ள தலைக்குள்ள தான் திருடன் உருவாக முடியும். 
 22. நம்மோட திறமைகளை நாம காட்டிட்டே இருக்கணும்
 23. அனுபவங்கள் தானே முதிர்ச்சி
 24. குடிமக்களின் நாக்கு வித்தியாசமானது. குடிக்க ஆரம்பித்துக் கொஞ்ச நேரத்தில் அது மரத்துப்போகும். 
 25. நபர்கள் அதிகமாக இருந்தால் தடயங்களும் அதிகமாக இருக்க வேண்டுமென்பது நியதி. 
 26. பணமென்பது சத்தியத்திற்குக் கட்டுப்பட்ட ஒன்று, செழிப்பின் குறியீடு; பண்பாடில்லாத பொருள். அது எப்போது யார் கையிலிருக்கும்; எவ்வளவு காலமிருக்கும் என்பதெல்லாம் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட விஷயங்கள். சில தலைமுறைகளில் அவரவர் பண்பாடுகளுக்கேற்ப அது குறிப்பிட்ட காலம் வரை இருக்கும். சிலரிடம் குறிப்பிட்ட மாதங்கள் வரை தானிருக்கும். சிலரிடம் நாட்கணக்கில். அதன் மிக குறைவான ஆயுள் திருடன்களிடம்தான். 
 27. குற்றங்களுக்குப் பொறுப்பு அதைச் செய்தவன் தானே?
 28. பணக்கார குற்றவாளிகளையோ கள்ளச் சாராய முதலாளிகளையோ நட்சத்திர விடுதி விபச்சாரிகளையோ தொட முடியாது. இவர்களையெல்லாம் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு நிற்கும் போலீசாரின் உணர்வுகளுக்கு வடிகாலாகப் பயன்படுபவர்கள் ஒருவேளை உணவுக்காக சாராயம் காய்ச்சுபவர்களும் தெருவில் நிற்கும் பாலியல் தொழிலாளர்களும் சின்னச் சின்ன தவறுகள் செய்பவர்களும் தான். ஆட்சிப்பீடம் இப்படித்தான் செயல்பட முடியும். உலகம் முழுவதிலுமுள்ள ஆட்சிப்பீடமும் அதிகார வர்க்கமும் இப்படியாகவே நகர்ந்துகொண்டிருக்கின்றன. 

 

Related Articles

பர்சு பத்திரம் பார்வையாளர்களே! – ப... சிறுவன் ஒருவன் தெருவில் சண்டை போட்டு ஜெயிப்பதை பார்த்த சர்கார் என்பவர் அவனை தன்னுடன் வைத்து வளர்த்து குஸ்தி கத்துக் கொடுத்து நேஷனல் சாம்பியன் ஆக வேண்ட...
உத்தர பிரதேசத்தில் சிறுநீர் குடிக்க கட்ட... ஒரு பெண்ணோடு முறையற்ற உறவு வைத்திருந்ததாகச் சந்தேகப்படும் இளைஞர் ஒருவரைக் கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலம் சஹாரான்ப...
அப்பான்னா இப்படி இருக்கணும்! – சாத... இந்தி டிவி சீரியல், இந்திப் படங்கள், மணிரத்னம் படங்கள், கமல், சீமானுடன் படங்கள் என்று படிப்படியாக உயர்ந்த நடிகர் மாதவன் இந்திய சினிமா உலகில் தவிர்க்க...
நடிகர்களின் மீது பித்து பிடித்தது போல் இ... பாடகர் எஸ் பி பி பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதி சடங்கிற்கு நடிகர் விஜய் சென்றிருந்தபோது அவருடைய தலை முடியை வைத்து இது டோப்பா முடி என்று அஜித் ரசிகர்கள...

Be the first to comment on "நம்மோட திறமைகளை நாம காட்டிட்டே இருக்கணும்! – திருடன் மணியன்பிள்ளை தன்வரலாறு !"

Leave a comment

Your email address will not be published.


*